Published:Updated:

`வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது!’ - தீவிரக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வேலூர் வந்த இருவர்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து வேலூர் திரும்பிய மருத்துவ மாணவர் உட்பட 2 பேர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன, உலக நாடுகள். இந்த வைரஸ் பாதிப்பால், சீனாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தநிலையில், சீனாவிலிருந்து தமிழகம் வரும் நபர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து அவர்களைக் கண்காணித்துவருகிறார்கள்.

அந்த வகையில், வேலூர் கஸ்பாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்புதான் சீனாவிலிருந்து சென்னை வழியாக வேலூர் திரும்பினார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக அவரின் வீட்டுக்குச் சென்று தீவிரப் பரிசோதனை செய்தனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதில், அந்த மாணவருக்குக் கொரோனா வைரஸின் அறிகுறி இல்லை எனத்தெரியவந்தது. எனினும் அந்த மாணவரிடம், `வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது. உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவதுபோல் தெரிந்தால், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

`கொரோனா வைரஸ் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனை!'- சாதித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

சுகாதாரப் பணியாளர்கள் தினந்தோறும் அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று கண்காணித்துவருகிறார்கள். அதேபோல், வேலூர் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவரும் இரண்டு நாள்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும், சுகாதாரத் துறையினர் அந்த நபரையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள். ``கொரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு