Published:Updated:

ஐசிஎம்ஆர் ஆணைப்படி 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது பற்றி மக்களின் கருத்து? #VikatanPoll

ரேபிட் கிட்
ரேபிட் கிட்

ஐசிஎம்ஆரின் ஆணைப்படி 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPoll

உலகமே கொரோனா வைரஸைக் கண்டறிய ரேபிட் கிட்களின் பின்னால் ஓடியபோது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமும் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. 5 லட்சம் கருவிகளை வாங்க ஆர்க் டீலர் என்ற நிறுவனத்துக்கு, வரிகள் நீங்கலாகக் கருவி ஒன்றுக்கு ரூ.600 என்ற விலையில் கொள்முதல் ஆணைகள் வழங்கியது ஐசிஎம்ஆர். இதை அடிப்படையாக வைத்து முன்னர் ஐசிஎம்ஆர் அனுமதித்த வோண்ட்போ நிறுவன ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த அதே விலையில், ஷான் பயோடெக் என்ற நிறுவனத்துக்குத் தமிழக அரசும் கொள்முதல் ஆணைகளை வழங்கியது.

இந்நிலையில், தற்போது இந்தக் கருவிகளின் நம்பகத்தன்மைக் குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது ஐசிஎம்ஆர். இந்த ஆணைப்படி, தமிழக அரசு பெற்றுள்ள 24,000 கருவிகளும் தற்போது திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் அரசுக்கு எவ்வித செலவினங்களும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ICMR Twitter Poll
ICMR Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ICMR Helo Poll
ICMR Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ICMR Vikatan Poll
ICMR Vikatan Poll
ICMR Vikatan Poll
ICMR Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து நமக்குக் கிடைத்த முடிவுகள்

ICMR Vikatan Poll
ICMR Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு