Published:Updated:

மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றனவா? உண்மை என்ன? #MyHospitalStory

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ( Photo: Vikatan / Srinivasulu )

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் அதன் அறிகுறிகள் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு, போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றனவா, இல்லையா? - கடந்த சில தினங்களாக மக்கள் பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விஷயம்.

குறிப்பாக நடிகர் வரதராஜன் தன் நண்பருக்கு நேர்ந்த துயரத்தை வீடியோவில் சொன்னபோது அதைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி. அந்த வீடியோவுக்காக அரசு அவர்மீது எடுத்த நடவடிக்கைகள் நமக்கு அதைவிடவும் அதிர்ச்சி.

திடீரென அவர் உருக்கமாகப் பேசி அப்படி ஓர் வீடியோவை ஏன் வெளியிட்டார் அவர்? அரசு சொல்வதுபோல பரபரப்புக்காகவும், தவறான தகவல் பரப்புவதற்காகவும்தானா? அப்படி இருக்கவே முடியாது என அழுத்தம் திருத்தமாகச் சொன்னது நேற்று விகடன்.காமில் வெளிவந்த வரதராஜனின் வாழ்வில் நடந்த பழைய சம்பவம் குறித்த செய்தி.

`கொரோனாவுக்கு பெட் இல்லை..!' வரதராஜன் ஆதங்கத்துக்கு என்ன காரணம் ?

அதைப் படிக்கும் யாருமே வரதராஜன் இந்தக் குற்றச்சாட்டை வெறுமனே அவதூறுக்காக மட்டும் வைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். இப்படியாக, வரதராஜன் சொன்ன பிரச்னையை ஆராயாமல், வரதராஜன் ஏன் சொன்னார் என்பதையே பிரச்னையாக்கியிருக்கிறார்கள். ஆனால், நாம் இதோடு கடந்துபோக முடியாது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கை வசதிகள் போதுமான அளவு இருக்கின்றனவா என்கிற கேள்விக்கு விடைதேட வேண்டியது அவசியம்.

``தனியார் மருத்துவமனைகளின் படுக்கை விவரங்கள் குறித்து இனி இணையத்திலேயே பதிவேற்றம் செய்கிறோம்" என்றெல்லாம் அரசுத் தரப்பு சொன்னாலும்கூட, சமூக வலைதளங்களில் பலரும் பகிரும் தகவல்கள் வேறுமாதிரியாக இருக்கின்றன. அரசின் பதில்களுக்கு முரணாக இருக்கும் இந்தத் தகவல்கள் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன. இதுகுறித்து இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறது விகடன்.

எனவே, ``தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் அதன் அறிகுறிகள் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு, போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றனவா, இல்லையா?" என்ற கேள்வியை உங்கள் முன்பே வைக்கிறோம். அண்மையில் நீங்களோ அல்லது உங்களுடைய நெருங்கிய உறவினர்களோ கொரோனா மற்றும் கொரோனா தொடர்புடைய பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி, மருத்துவமனை சென்றிருந்தீர்களேயானால், அந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்ய அழைக்கிறோம். உங்களுடைய அனுபவத்தில் சரியான சிகிச்சை கிடைத்ததா, போதுமான படுக்கை வசதிகள் இருந்ததா, மருத்துவமனையில் சிகிச்சையின் நிலை என்ன? இங்கே விரிவாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வந்தது, செவி வழியாகக் கேள்விப்பட்டது என்றெல்லாம் இல்லாமல், நீங்கள் ஊர்ஜிதம் செய்யக்கூடிய அனுபவங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள். களத்தின் உண்மை நிலையை பொதுவில் வைப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு