Published:Updated:

`விமானத்தில் சமூக இடைவெளி தேவையில்லை!’ -அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

கொரோனா சமயத்தில் விமானப் பயணம்
கொரோனா சமயத்தில் விமானப் பயணம்

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மொத்த உலகமும் முடங்கியுள்ளது. நாடுகளுக்கு இடையேயான பயணங்கள் ரத்துய்யப்பட்டன.

ஊரடங்குத் தளர்வின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட சில விமான சேவைகள் மீண்டும் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இதையடுத்து, விமானப் பயணம் பாதுகாப்பானது என்றும், பயணிகள் விமானத்தினுள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தன் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அறிவுறுத்தியுள்ளது.

Flight travel
Flight travel

விமானத்தில் பின்பற்றப்படும் காற்று சுத்திகரிப்பு மற்றும் சுழற்சி முறையால் வைரஸ் மற்றும் கிருமிகள் பரவல் தடுக்கபடுவதாக சிடிசி கூறியுள்ளது. பயணிகள் அமரும் இருக்கைகளில் இரண்டு இருக்கைகளுக்கு இடையில் ஓர் இருக்கை இடைவெளி விடுவதன் மூலம் தனிமனித இடைவெளியை சாத்தியமாக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது.

ஆனால், விமானத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான தேவையும் இல்லை என சிடிசி கூறியுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிடிசி தெரிவித்துள்ளது.

விமானப் பயணம் பாதுகாப்பானது என்று சிடிசி கூறியிருந்தாலும் மக்கள் முடிந்தவரை பயணங்களை குறைத்துக்ள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பான பயணத்திற்காக நீண்ட நேரத்தை விமான நிலையங்களிலேயே பயணிகள் செலவழிக்கவேண்டியுள்ளது. இந்நிலையில், அதிக கூட்டம் சேரும் விமான நிலையங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது.

Social distancing
Social distancing

பயணிகள் விமானம் மட்டுமன்றி சரக்கு விமானங்களும் தொடர்ச்சியாக நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிடிசி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களைக் கடந்த மார்ச் மாதத்திலும், மீண்டும் மே மதத்திலும் வெளியிட்டது சிடிசி.

மேலும், விமானப் பயணம் மேற்கொண்ட ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கும் பட்சத்தில், எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது சிடிசி. நோய்வாய்ப்பட்ட நபரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் (2 மீட்டர் அல்லது 6 அடி தூரத்திற்கு) மற்றும் நோய்வாய்ப்பட்ட நபருக்கு சேவை செய்ய ஓர் உறுப்பினரை நியமிக்க வேண்டும். நோயாளிக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்"என்று சிடிசி தன் வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.

flight travel
flight travel
கொரோனா பாதித்த இளைஞர் பயணித்த விமானம்; சென்னை ரிட்டர்ன் ட்ரிப்! - கோவை சர்ச்சை

குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளைக் கழுவுதலை வலியுறுத்தியுள்ளது, குறிப்பாக நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்தபின் அல்லது வைரஸ் இருக்கும் சாத்தியங்கள் கொண்ட மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, இதை அவசியம் செய்ய வேண்டும். பணியாளர்கள் மற்றும் விமானக் குழுவினருக்கு அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆல்கஹால் கலந்த சானிட்டைஸர் வழங்குவதை விமான நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும்.

"பயணத்தின்போது அல்லது பயணம் முடிந்தவுடன் பயணிகள் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்டால், மேம்பட்ட துப்புரவு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு