Published:Updated:

`இந்தியர்களுக்கு அளித்ததை விடவும் ஏற்றுமதி செய்த தடுப்பூசிகள் அதிகம்! - வைரலாகும் அதிகாரியின் பேச்சு

நாகராஜ் நாயுடு / ஐ.நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி
நாகராஜ் நாயுடு / ஐ.நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி

தற்போது நிலவும் தடும் தடுப்பூசி தட்டுப்பாடு, மோடி அரசின் தடுப்பூசி ஏற்றுமதி கொள்கைகள், டெல்லி இளைஞர்கள் மீது வழக்கு பதிந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அந்த உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியாவில் நிலவும் பற்றாக்குறையையும் தாண்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, தொடர்ந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான யஸ்வந்த் சின்ஹா சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இந்திய பிரதிநிதியின் உரையில் ஒரு பகுதியைப் பதிவிட்டு இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

யஸ்வந்த் சின்ஹா
யஸ்வந்த் சின்ஹா

அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இந்தியாவின் தூதரும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியுமான நாகராஜ் நாயுடு, ``கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் பயன்பாட்டைவிட வெளிநாடுகளின் பயன்பாட்டுக்குத்தான் அதிக அளவிலான தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள யஸ்வந்த் சின்ஹா, ``இந்த வீடியோ மோடியை தோலுரித்துக் காட்டுகிறது. ஐ.நா-வில் இந்திய பிரதிநிதி, இந்தியா தன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கியதை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளது என்று கூறுகிறார்.

மோடி இப்போது உலகத் தலைவராகிவிட்டார். இந்தியர்கள் நரகத்துக்குப் போகட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில், ``மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் நீங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள்?" என்று கேட்டு போஸ்டர் ஒட்டியதற்காகப் பலரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து யஸ்வந்த் சின்ஹா இப்படி ட்வீட் செய்துள்ளார்.

அந்த அதிகாரி கடந்த மார்ச் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்துப் பேசியிருந்தார். தற்போது நிலவும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு, மோடி அரசின் தடுப்பூசி ஏற்றுமதி கொள்கைகள், டெல்லி இளைஞர்கள் மீது வழக்கு பதிந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அந்த உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு