Published:Updated:

’பாசிட்டிவ்; நெகட்டிவ்; பாசிட்டிவ்... குழப்பத்தால் உயிரிழந்த முதியவர்!- மேற்கு வங்க சர்ச்சை

கொரோனா
கொரோனா

மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் (வயது 68), என்பவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஓம் பிரகாஷுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு, அவருக்கு கொரோனா தொற்று இல்லை... வந்து அழைத்துச்செல்லலாம் என குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

கொரோனா
கொரோனா
Representational image

அடுத்த நாள், அவரின் மகனுக்கு போன் செய்த மருத்துவமனை நிர்வாகம், ரிசல்ட் தவறாக வந்துவிட்டது... ஆம்புலன்ஸ் அனுப்பிகிறோம், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பிவையுங்கள் எனக் கூறியுள்ளனர். வீட்டில் இருந்து தந்தையை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார். இந்த முறை அவர் வீடு திரும்பவில்லை. மருத்துவமனைக்குச் சென்ற 24 மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் மட்டுமே அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. மருத்துவமனையின் அலட்சியத்தால் எனது தந்தை உயிரிழந்துவிட்டார். இது, 'திட்டமிட்ட கொலை' என அவரது மகன் ராஜ் குப்தா மருத்துவமனை நிர்வாகத்தைச் சாடியுள்ளார்.

`உதவி கேட்க வெட்கம்; பசியில் உறங்குகிறார்கள்’ - ஏழைகளின் பசியைப் போக்கும் மேற்குவங்க டியூஷன் டீச்சர்

இதுகுறித்துப் பேசிய ராஜ் குப்தா, “என் தந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா பாசிடிவ் எனக் கூறினர். எங்களையும் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். நான்கு நாள்கள் கழித்து, மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் தந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நெகடிவ் என வந்திருப்பதாகக் கூறினர். அவரை அழைத்துச்செல்லலாம் என்றும் கூறினார். டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டிலும் கொரோனா நெகடிவ் என எழுதிக்கொடுத்தனர்.

கொரோனா
கொரோனா

ஊரடங்கு காரணமாக வாகனங்களை மிகவும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து, என் தந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தேன். மறுநாள் மாலை போன் செய்து, கொரோனா பாசிட்டிவ் என வந்திருப்பதாகக் கூறினர். எனது தந்தையை திட்டமிட்டுக் கொலைசெய்துள்ளனர். பங்கர் மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜ் குப்தா குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு