Published:Updated:

`கொரோனா பரவல் முடிவு நிலைக்கு அருகில்கூட நெருங்கவில்லை!' - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

``பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் இன்னும் பரவி, பயணப்பட சாத்தியங்கள் உள்ளன.’’

உலகெங்கிலும் பரவியிருக்கிறது கோவிட்-19 வைரஸ். பல நாடுகளிலும் நீடிக்கப்பட்ட ஊரடங்குகள், லட்சக்கணக்கான உயிரிழப்புகள் என இத்தனையையும் கண்ட பிறகும், வைரஸ் பரவல் முடிவை இன்னும் நாம் நெருங்கவில்லை என்று கூறியிருக்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.

corona
corona

``கொரோனா பரவல் முடிவு நிலைக்கு அருகில்கூட நாம் இன்னும் நெருங்கவில்லை’’ எனக் கூறியுள்ள டெட்ராஸ், ``கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உயிரைக் கொல்லும் புதிய வைரஸ் குறித்து சீனா தகவல் தெரிவித்தது.

இன்றுவரை ஒரு கோடி மக்களுக்கும் மேலாக அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இரக்கமற்ற மைல்கற்களை நாட்டியுள்ளது இந்த வைரஸ். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் வைரஸ் இன்னும் பரவி, பயணப்பட சாத்தியங்கள் உள்ளன’’ என்று கூறியிருக்கிறார்.

corona spread
corona spread

மேலும் அவர், ``உலகின் இந்த அவலநிலை முடிவுக்கு வர வேண்டும் என அனைவரும் எண்ணுகிறோம். தேக்கி வைக்கப்பட்டுள்ள நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். எனினும் யதார்த்தமான உண்மை என்னவென்றால், நாம் இந்த வைரஸ் அபாயத்தின் முடிவுக்கு அருகில்கூட இல்லை. பல நாடுகள் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் தொற்று பரவும் வேகம் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது’’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ப்ளாஸ்மா தெரபி கொரோனா சிகிச்சையில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? #VikatanExplainer

உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா அவசர கால திட்டத்தின் தலைவர் மைக் ரியான், ``வைரஸ் தாக்கத்தை எதிர்த்துப் போராட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதில் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனாலும் அவை நிச்சயமாக பலன் தரும் எனக் கூறிவிட முடியாது’’ என்கிறார்.

vaccine
vaccine
கொரோனா: `முதுகுவலி, தடிப்புகள், அரிப்பு..!’ - தொற்றின் புதிய அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஆய்வுகளின் நிலை குறித்து அறிய உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு