Published:Updated:

அதிகரிக்கும் கொரோனா... முழு ஊரடங்கு முடிவுக்குத் தமிழக அரசு செல்லாதது ஏன்?!

தமிழக அரசு முழு ஊரடங்கு
News
தமிழக அரசு முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்காததற்குக் காரணம் என்ன?

அதிகரிக்கும் கொரோனா பரவல்:

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா முதல் அலை சமயத்தில், நாளொன்றுக்கு அதிகபட்சமாகவே பதிவான தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,000-தான். அந்த எண்ணிக்கையும், நாளடைவில் சுமார் 300 என்ற எண்ணிக்கைக்குக் குறைந்தது. இரண்டாம் அலை சமயத்தில், மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்திருந்த சிறிது காலத்துக்குப் பிறகே தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. பரவ ஆரம்பித்ததுமே யாருமே எதிர்பார்த்திராத வகையில் தொற்று எண்ணிக்கை குறைந்த இடைவெளியில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுமார் 300-ஆகப் பதிவாகிவந்த தினசரி பாதிப்பு, நாளொன்று 36,000-க்கும் அதிகமாகச் செல்லும் நிலை உருவானது. மக்கள் மருத்துவமனை வாசலில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல், மருந்து கிடைக்காமல் அல்லாடும் காட்சியை நம்மில் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், படிப்படியாகத் தொற்று எண்ணிக்கை 600 வரை குறைந்தது. தற்போது பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பரவ ஆரம்பித்த சில தினங்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு 15,000-ஐ கடந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊரடங்கு:

கொரோனா முதல் அலையின்போது தொற்றுப் பரவலால் மக்கள் பாதித்தது ஒருபுறமிருக்க, முழு ஊரடங்கினாலும் பாதிக்கப்பட்டனர். முழு ஊரடங்கு காரணமாகச் சிறு, குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களே ஆட்டம்கண்டன. பல தொழில்கள் மூடும் அளவுக்குச் சென்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வேலையை இழந்தனர். பலரின் வாழ்வாதாரமே ஆடிப்போனது. அடித்தட்டு மக்கள் பலரும் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட்டது. தொழில்கள் முடங்கின.

ஊரடங்கு
ஊரடங்கு

மக்கள் மட்டுமின்றி அரசின் வருவாயும் கடுமையாகப் பாதித்தது. வருவாய் குறைந்த நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்யவேண்டிய கட்டாயத்திலிருந்தது. தமிழக அரசின் முக்கிய வருவாய்கள் அனைத்தும் இல்லாமல் போனது. அதனால்தான், அன்றைய அதிமுக அரசு அவசர அவசரமாக டாஸ்மாக்கைத் திறந்தது. எனினும் ஆரம்பத்தில் சென்னை போன்ற நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளால் டாஸ்மாக் திறக்கப்படவில்லை. ஆனால், இன்றைய திமுக அரசு டாஸ்மாக் மூடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் அலை சமயத்தில், நாட்டின் பொருளாதாரம் தொடங்கி தனிமனித பொருளாதாரம் வரை பாதிப்புக்கு உள்ளானது. சரிந்திருந்த பொருளாதாரம் சற்று சமநிலைக்கு வரும் நேரத்தில், மீண்டும் இரண்டாம் அலை சமயத்தில் போடப்பட்ட முழு ஊரடங்கு பெரும் சிக்கலை உருவாக்கியது. சிறு, குறு நிறுவனங்கள் நடத்த முடியாமல் மூடப்பட்டன. பெரு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் தி்ணறின. இரண்டாம் அலைக்குப் பின்னர் தற்போதுதான் எல்லாம் ஏதோ ஓரளவுக்குச் சரியாகி வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது கொரோனா பரவல் முன்பிருந்ததைவிட அதிவேகமாகப் பரவிவருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டாலும், பாதிப்பு அளவு குறைந்துதான் காணப்படுகிறது. சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் கொரோனா ஊரடங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மக்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமாகப் பேசப்பட்டது. தொற்று பரவலைத் தடுக்க கடைகள் திறந்திருக்கும் நேரம், மக்கள் கூடும் இடங்களில் தடை அல்லது கடும் கட்டுப்பாடு, வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு போன்றவற்றை மட்டுமே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதும், முழு ஊரடங்கு அமல்படுத்தாமல் இருப்பதும் மக்கள் கையில் மட்டும்தான் இருக்கிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவை மட்டுமே தொற்று பரவலைத் தடுக்க ஒரே வழி. அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், கொரோனா கட்டுக்குள் இருப்பதும், கட்டவிழ்ந்து பரவுவதும் நமது கைகளில் மட்டும்தான் உள்ளது. மக்களின் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு அரசு முழு ஊரடங்கை அறிவிக்கவில்லை. மக்களும் அரசின் கட்டுப்பாடுகளை முறையாகக் கையாண்டால் முழு ஊரடங்குக்கு செல்லாமலேயே இந்தக் கொரோனாவில் இருந்து மீண்டுவிடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.