Published:Updated:

Coronil: பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்து.. விவரங்களை கேட்கும் ஆயுஷ் அமைச்சகம்

பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ்

நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிப்பதற்காக அதிகாரிகளிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸுக்கென்று பிரத்யேக மருந்துகள் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலமும் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும் என்று உலகமே கூறிக்கொண்டிருக்கிறது.

அலோபதி மருத்துவம் தொடங்கி, சீனாவின் பாரம்பர்ய மருத்துவம், தமிழர்களின் சித்த மருத்துவம் என அனைத்தும் அதன் அடிப்படையிலேயே நோயாளிகளைக் கையாள்கின்றன. கொரோனா வைரஸின் தன்மையை சரியாகக் கணிக்க முடியாததால், தடுப்பு மருந்து கண்டறிவதிலும் பின்னடைவுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

corona
corona

இந்நிலையில், கொரோனாவுக்கே நேரடியாக மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அதை அறிமுகப்படுத்தவும் செய்திருக்கிறார், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் 'கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"இந்த உலகமே கொரோனா வைரஸுக்கான மருந்துக்கும் தடுப்பு மருந்துக்கும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த நோய்க்கெதிரான முதல் ஆயுர்வேத மருந்தை அறிமுகப்படுத்துகிறோம். மருத்துவரீதியாக நோயாளிகளுக்கு வழங்கி இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதித்ததில் 100 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், 3 முதல் 7 நாள்களில் 100 சதவிகிதம் குணமடைந்துவிடுவார்கள்.

பதஞ்சலியின் புதிய ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொண்ட 280 பேரும் குணமடைந்துவிட்டனர்.
பாபா ராம்தேவ்

இந்த மருந்தின் செயல்பாட்டை அறிந்துகொள்வதற்கான இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல் ஆய்வு டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 280 நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், மருந்தை எடுத்துக்கொண்ட 280 பேரும் குணமடைந்துவிட்டனர். கொரோனா வைரஸ் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பிற பிரச்னைகளைக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. முதல் ஆய்வு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது ஆய்வும் நடத்தப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆயுர்வேத மருந்து அடங்கிய கிட் ரூ.545-க்கு கிடைக்கும். அந்தக் கிட்டில் 30 நாள்களுக்கான மருந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் பதஞ்சலி ஸ்டோர்களில் இந்த மருந்து விற்பனைக்குக் கிடைக்கும். கொரோனா கிட் விநியோகத்தைக் கண்காணிக்கப்பதற்கென்று தனி மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ayurvedha treatment
ayurvedha treatment
Representational image

நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிப்பதற்காக அதிகாரிகளிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அலோபதி மருந்துகள், பாரம்பர்ய மருத்துவ முறைகளில் உள்ள மருந்துகள் என எந்த மருந்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடும்போதும், அந்த மருந்து எந்த வகையில் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும்.

மேலும், அந்த மருந்தில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன, பக்கவிளைவுகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மருந்தைப் பற்றி எந்த விவரமும் வெளியிடவில்லை. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்களையும் கூறவில்லை. நேரடியாக கொரோனா வைரஸுக்கான மருந்து என்று தெரிவித்துள்ளார்.

traditional medicine
traditional medicine

இது, பிற ஆயுர்வேத மருத்துவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. "இந்த மருந்து விற்பனைக்கு வந்த பிறகே அதன் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். எனவே, பொதுமக்கள் புதிய மருந்துகளை மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்" என்று ஆயுர்வேத மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Coronil: பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்து.. விவரங்களை கேட்கும் ஆயுஷ் அமைச்சகம்

இந்த நிலையில் ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கான ஆயுஷ் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிய பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் அதனை கொரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை வழங்குமாறு பதஞ்சலி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.