Published:Updated:

ஆ.ராசாவைக் கண்டித்து நீலகிரியில் 50 சதவிகித கடைகள் அடைப்பு; வற்புறுத்திய இந்து முன்னணியினர் கைது!

கடையடைப்பு
News
கடையடைப்பு

ஆ.ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Published:Updated:

ஆ.ராசாவைக் கண்டித்து நீலகிரியில் 50 சதவிகித கடைகள் அடைப்பு; வற்புறுத்திய இந்து முன்னணியினர் கைது!

ஆ.ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடையடைப்பு
News
கடையடைப்பு

இந்து மதம் குறித்து அண்மையில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து முன்னணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர், கோத்தகிரி, பந்தலூர் பகுதிகளில் சுமார் 50 சதவிகித கடைகள் இன்று அடைக்கப்படன. மற்ற கடைகள் வழக்கம் போல இயங்கின.

கடையடைப்பு
கடையடைப்பு

ஒருசில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இந்த கடையடைப்பு போராட்ட கண்காணிப்பு பணியில் சுமார் 700 போலீஸார் ஈடுபட்டனர். அதேபோல் மற்ற மாவட்டங்களிலிருந்து இந்து முன்னணி நிர்வாகிகள் நீலகிரிக்குள் நுழையாமல் தடுக்க சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடைகளை அடைக்க வற்புறுத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 18 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

கடையடைப்பு குறித்து தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர், ``எம்.பி ராசா, இந்து மக்களை தொடர்ந்து மோசமாக பேசி வருகிறார். அவரை பதவிநீக்கம் செய்யும் வரை அடுத்தடுத்து போராட்டங்களைத் தொடருவோம்" என்றனர்.

கடையடைப்பு
கடையடைப்பு

காவல்துறை தரப்பில், ``விரும்பியவர்கள் கடையை அடைத்துக் கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். எந்த கடையையும் வற்புறுத்தி அடைக்ககாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.