Published:Updated:

காந்தி ஜயந்தி விழா: 130 வகையான பொருள்கள்... பொது மக்களைக் கவர்ந்த ஆளில்லா கடை!

ஆளில்லா கடை
News
ஆளில்லா கடை

எந்தச் சூழ்நிலையிலும் பொதுமக்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாகவே காந்தி ஜயந்தி நாளில் ஆளில்லா கடை நடத்தப்படுகிறது.

Published:Updated:

காந்தி ஜயந்தி விழா: 130 வகையான பொருள்கள்... பொது மக்களைக் கவர்ந்த ஆளில்லா கடை!

எந்தச் சூழ்நிலையிலும் பொதுமக்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாகவே காந்தி ஜயந்தி நாளில் ஆளில்லா கடை நடத்தப்படுகிறது.

ஆளில்லா கடை
News
ஆளில்லா கடை

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் காந்தி ஜயந்தி விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று நாடு முழுவதும் 153-வது காந்தி ஜயந்தி விழா கொண்டாட்டபடும் வேளையில், பொதுமக்களிடையே நேர்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக தஞ்சாவூர் அருகே ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குவேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தைத் தாங்களாகவே கல்லாபெட்டியில் வைத்துச் செல்லும் வகையில் கடை திறக்கப்பட்டிருப்பது பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

பாபநாசத்தில் திறக்கப்பட்ட ஆளில்லா கடை
பாபநாசத்தில் திறக்கப்பட்ட ஆளில்லா கடை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ஒவ்வோர் ஆண்டும் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜயந்தி விழா கொண்டாப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள், பொதுமக்கள் மனதில் நேர்மையை விதைக்கும்விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாகவும் `ஹானஸ்ட் ஷாப்’ என்கிற பெயரில் காந்தி ஜயந்தி நாளில் மட்டும் ஆளில்லா கடையை திறந்து நடத்துவது வழக்கம். அதன்படி 22-ம் ஆண்டு ஆளில்லா கடையை இன்று திறந்தனர்.

பாபநாசம், அரசு மருத்துவமனை அருகேயுள்ள பேருந்து நிலையத்தில், ஸ்டால் அமைத்து ரூ.12,000 மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற ஸ்டேஷனரி பொருள்கள், சாக்லேட், பிஸ்கட், சோப்பு, பவுடர், ஷாம்பூ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், காந்தியின் சத்திய சோதனை உள்ளிட்ட புத்தகங்கள் என மொத்தம் 130 வகையான பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். ஒவ்வொரு பொருளுக்குரிய விலையையும் அந்தந்த இடத்தில் எழுதிவைத்திருந்தனர். பொருளுக்கான பணத்தை வைப்பதற்காக கல்லாப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறக்கபட்ட ஆளில்லா க்டை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறக்கபட்ட ஆளில்லா க்டை

பொதுமக்கள் தங்களுக்குவேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்துச் சென்றுவிட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பொதுமக்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை உண்டாக்கும்விதமாகவே ஆளில்லா கடை நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் சில ஆண்டுகள் பொருள்கள் முழுவதும் விற்பனை ஆகியிருந்தாலும், பணத்தைக் கணக்கிடும்போது பணம் குறைவாகத்தான் இருக்கும். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் பொருளின் மதிப்பை விட பணம் கூடுதலாகவே இருந்தது. எதற்காக ஆளில்லா கடையைத் திறந்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்பது இதில் முத்தாய்ப்பான விஷயம் என ரோட்டரி சங்க நிர்வாகிகள் பெருமிதத்துதுடன் கூறிவருகின்றனர்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி ஆளில்லா கடையை திறக்க, பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி பூரணி முதல் விற்பனையைத் தொடங்கிவைத்ததுடன், ``காந்தியைப்போல நாம் அனைவரும் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ வேண்டும்’’ என்றார். இது குறித்து பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ``காந்தி மகான், மக்கள் எந்த வேறுபாடுமின்றி ஒற்றுமையையும் நேர்மையையும் கடைப்பிடித்து தீய செயல்களில் ஈடுபடாமல் அன்பு செய்வதையே ஆயுதமாகக் கொண்டு வாழ வேண்டும் என நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார்.

பேருந்து நிலைய ஆளில்லா கடையில்...
பேருந்து நிலைய ஆளில்லா கடையில்...

அதன்படி அவருடைய பிறந்தநாள் விழாவான காந்தி ஜயந்தி நாளில் `ஹானஸ்ட் ஷாப்’ என்கிற பெயரில் ஆளில்லா கடையைத் திறந்து செயல்படுத்திவருகிறோம். இதில் மொத்தம் ரூ.12,000 மதிப்புக்குப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அந்தப் பொருளுக்குரிய பணத்தை வைத்துவிட்டு செல்லலாம். அவர்கள் விரும்பினால் பொருளின் விலையைவிடக் கூடுதலாகவும் வைத்துச் செல்லலாம். இதில் வரும் பணத்டை ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகப் பயன்படுத்திவருகிறோம். ஹானஸ்ட் ஷாப்புக்கு வருவதுடன், நேர்மையாக நடந்து செல்கிற மக்களுக்கு ராயல் சல்யூட்” எனத் தெரிவித்தார்.