மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 26 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

மாம்பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாம்பழம்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 26 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

தமிழில் ‘மாடி வீட்டு ஏழை’ என்றோர் அழகான உவமை இருக்கிறது. அதற்கு முற்றிலும் பொருத்தமான மாவட்டம் கிருஷ்ணகிரி. மாம்பழம், புளி, மலர், காய்கறி, சிறுதானியம், நெல், கிரானைட் என மாவட்டம் முழுவதும் நிறைய வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், பத்தாயிரம், பதினைந்தாயிரம் மாதச் சம்பளத்துக்குப் பெங்களூருக்கும் சென்னைக்கும் வண்டி ஏறவேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள் கிருஷ்ணகிரி இளைஞர்கள்!

மாவட்டத்தின் இதுவரையிலான மொத்த நகரமாக்கல் விகிதமே 22.75%-தான். இது பெரிதாக எந்த வளமும் இல்லாத மற்றும் அளவிலும் சிறிய அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களைவிட சற்று மட்டுமே அதிகம். கொடுமையிலும் கொடுமையாக, கிருஷ்ணகிரியின் மத்தூர், சூளகிரி, அஞ்செட்டி, ராயக்கோட்டை போன்ற பகுதிகள் பின்தங்கிய வடமாநிலப் பகுதிகளைப் பிடுங்கியெடுத்து வந்து வைத்ததுபோல பரிதாபமாக இருக்கின்றன.

கனவு - 26 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக நான் காண்பது, ஓசூரையே. ஆம், எப்படி ஆலமர நிழலுக்கு அடியில் எந்தச் செடிகளும் வளராதோ, அதேபோல ஓசூரின் அருகில் இருப்பதால் கிருஷ்ணகிரியும் வளரவில்லை. கிருஷ்ணகிரிக்கு இதுவரை தனியாகச் சிறிய ரயில் நிலையம்கூட இல்லை. ஆனால், ஓசூருக்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே ரயில் நிலையம் வந்துவிட்டது. சென்னை, சேலத்திலிருந்து வரும் அத்தனை விரைவுப் பேருந்துகளும் ஓசூர் பேருந்து நிலையத்தை மதித்து உள்ளே வருகின்றன. ஆனால், நிறைய விரைவுப் பேருந்துகள் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தை மதித்து உள்ளே வருவதில்லை. இன்னமும் கிருஷ்ணகிரி டோல்கேட்தான் பலரும் விரைவுப் பேருந்து ஏறும் இடம்! தொழில் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், ஓசூரில் TVS, Titan, ITC, Ashok Leyland எனப் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிரமாண்ட நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், கிருஷ்ணகிரியில் பலநூறு பேருக்கு ஒன்றாக வேலைவாய்ப்பு அளிக்கும் சாதாரண நிறுவனம்கூட இல்லை.

இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத ஓரவஞ்சனை அணுகுமுறையால்தான் ஓசூரை முன்கூட்டியே எழுதிவிட்டு, நிதானமாக கிருஷ்ணகிரியை எழுத முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த மூன்று அத்தியாயங்களில் ஓசூருக்கான வளங்களையும் வாய்ப்புகளையும் என்னால் இயன்றவரை விரிவாகப் பட்டியலிட்டேன். அவற்றில் ஓசூருக்கு, தானே முடிவெடுக்கும் தன்னிச்சை அதிகாரம் (Autonomous Status), பெங்களூருக்கான துணை நகரமாக ஓசூரை மாற்றுவது (A Sub City to Bangalore), அதிநவீன தொழில்நுட்ப கேந்திரமாக வளர்த்தெடுப்பது (Hi-Tech Hub), இரவு வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது (Night Life) எனப் பல முன்னுதாரணத் திட்டங்கள் அடக்கம். இனி ஓசூரைத் தவிர்த்த கிருஷ்ணகிரியின் மற்ற பகுதிகளுக்கான வளங்களையும் வாய்ப்புகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். மாம்பழம் முதல் மாட்டுப்பந்தயம் வரை அத்தனையையும் வரிசைகட்டி அடிப்போம்..!

Mango Capital and ‘Produce to Product’ Concept!

மாம்பழமென்றால் சேலம் அல்ல, கிருஷ்ணகிரிதான்! முன்பு சேலம் மாவட்டத்தோடு கிருஷ்ணகிரி இருந்ததால், ‘சேலத்து மாம்பழம்’ என்று அழைத்தார்கள். ஆனால், மாம்பழ விளைச்சல் ஆதிகாலம் தொட்டு கிருஷ்ணகிரியில்தான் அதிகம். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மாம்பழம் விளைகிறது. ஆனால், சேலத்தில் 10,000 ஏக்கர் அளவுக்கே மாம்பழம் விளைகிறது. அதாவது, கிருஷ்ணகிரி மாம்பழ விளைச்சலின் அளவில் 10% மட்டுமே சேலம் மாம்பழத்தின் விளைச்சல். இந்தக் கணக்கை சேலம் மாவட்டத்தைக் குறைத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்கில் நான் சொல்லவில்லை. எனக்கு எல்லா மாவட்டமுமே தமிழ்நாட்டின் பிரிக்க முடியா அங்கம்தான். ஆனால், ஒரு மாவட்டத்துக்கு உண்மையாகச் சென்றுசேர வேண்டிய புகழ், இன்னொரு மாவட்டத்துக்குத் தவறுதலாகச் சென்றுசேரக் கூடாது என்பதற்காக மட்டுமே சொல்கிறேன். Everyone and Everything deserves their due! ஆக, இனிமேல் ஊடகம் மற்றும் திரைப்படத்துறையினர் ‘மாம்பழத்துக்கு சேலம்…’ என்று குறிப்பிடாமல் ‘மாம்பழத்துக்கு கிருஷ்ணகிரி…’ என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

கனவு - 26 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

சரி, கிருஷ்ணகிரியில் ஒரு லட்சம் ஏக்கரில் மாம்பழம் விளைகிறது என்று சொன்னேன் அல்லவா? இந்த ஒரு லட்சம் ஏக்கரில் அதிகமாக விளைவது மாம்பழத்திலேயே சூப்பர்ஸ்டார் என அனைவரும் கொண்டாடும் ‘அல்போன்சா.’ அதாவது, மாம்பழம் ‘கனிகளின் அரசன்’ என்றால், அல்போன்சாதான் மாம்பழ வகைகளில் அரசன். கிருஷ்ணகிரி வட்டத்தில் அல்போன்சாவை ‘பெங்களூரா’ என்று வேறு பெயரில் அழைப்பார்கள். அல்போன்சா தவிர செந்தூரா, தோத்தாபுரி, பைனப்பள்ளி, மூக்குநீளம் என மற்றவகை மாம்பழங்களுமே கிருஷ்ணகிரி செம்மண்ணில் செம்மையாக விளைகின்றன. இவ்வளவு அரக்கத்தன விளைச்சலில் சிறிய அளவு நேரடி விற்பனைக்குப் போக, பெருமளவு விளைச்சலை Pulp தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள் விவசாயிகள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்படி Pulp எடுப்பதற்கென்றே 50-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவர்கள் மாம்பழத்திலிருந்து Pulp-ஐ எடுத்து, டின்களில் அடைத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு மேங்கோ ஜூஸ் நிறுவனங்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதாவது, Raw Material-ஆகக் கொடுத்துவிடுகிறார்கள்.

Raw Material… இந்த வார்த்தையை மட்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன். இதுதான் நம் மாநிலம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையே. அதாவது, நாம் எப்போதுமே Raw Material-ஐ வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் Supplier-ஆகவே இருக்கிறோம். விவசாயத்தில் ‘Supplier’-ஆக மட்டுமே தொடர்கிறோம். நம் விவசாய உற்பத்திப் பொருள்களில், கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தை Raw Material-ஆக வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். இதனால், மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் நம் விவசாயிகளுக்கு நியாயமாக வந்துசேரவேண்டிய Top Line வருமானம் கிடைப்பதே இல்லை. Top Line வருமானம் என்றால், ஒரு Business Chain–ல் ஒரு தரப்புக்குக் கிடைக்கும் அதிகபட்ச வருமானம். இந்த Top Line வருமானம் கிடைக்காததால்தான், விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்த தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது. இதன் துணை விளைவாக, நம் விவசாயிகளும் தற்கொலை வரை சென்றுகொண்டிருக்கிறார்கள்.

கனவு - 26 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

சரி, புலம்பிப் பயனில்லை. அது என் இயல்பும் இல்லை. இனி விவசாயத்தை அதன் இயல்பு குறையாமல் வருமானம் கொழிக்கும் தொழிலாக மாற்ற ஒரே தீர்வு, Produce கட்டத்திலிருந்து Product கட்டத்துக்கு நாம் செல்வதே ஆகும். உதாரணத்துக்கு, காவேரிப்பட்டணத்தில் கந்தசாமி என்ற விவசாயி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கந்தசாமி அவர் தோட்டத்தில் 100 கிலோ மாம்பழத்தை விளைவிக்கிறார். சந்தை நிலவரப்படி, 100 கிலோ மாம்பழத்தின் அதிகபட்ச விலை 1,500 ரூபாய் மட்டும்தான். ஆனால், அவர் அந்த 100 கிலோவையும் முதலில் Pulp-ஆக மாற்றுகிறார். 100 கிலோவில் 33 கிலோ Pulp எடுக்கலாம். இப்போது அந்த 33 கிலோ Pulp-லிருந்து 165 லிட்டர் ஜூஸ் தயாரிக்கிறார். சந்தையில் ஒரு லிட்டர் மேங்கோ ஜூஸின் விலை 70 ரூபாய். இப்போது கணக்கு போடுங்கள். நேரடியாக விற்கும்போது 1,500 ரூபாய் மட்டுமே மதிப்பைப் பெற்ற கந்தசாமி, இரண்டு Process-களின் வழியே 8 மடங்கு மதிப்பைப் பெறுவார். அதாவது, Produce-ல் கந்தசாமிக்கு ‘பெரிய கல்லு சின்ன லாபம்.’ ஆனால், Product-ல் கந்தசாமிக்கு ‘பெரிய கல்லு பெரிய லாபம்.’ இதுவொரு தனிமனித கந்தசாமிக்கான கணக்கு மட்டுமே. அதுவே நிறுவனம் என்றால் இன்னும் Profit Scale உச்சத்துக்குச் செல்லும். சில நாடுகளெல்லாம் Produce-ஏ செய்வதில்லை. Product-ஐ மட்டுமே தயாரித்து வல்லரசாகி நிற்கிறார்கள்.

கிருஷ்ணகிரி கதைக்கு வருவோம். கிருஷ்ணகிரியில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மாம்பழம் விளைகிறது. இந்த 4 லட்சம் டன்னில் பெரும்பகுதி Pulp தொழிற்சாலைகளுக்குத்தான் அனுப்பப்படுகிறது, அது எந்தவகை மாம்பழமாக இருந்தாலும். இத்தனை Pulp தொழிற்சாலைகளையும் முடக்குவது முற்றிலும் இயலாத காரியம். ஏனென்றால், எல்லாத் தொழிற்சாலைகளுமே 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகச் சிறுக உழைத்து உருவாகிவந்திருக்கின்றன. மாவட்டத்துக்குள் அவை வழங்கிவரும் வேலைவாய்ப்பும் அதிகம். அதேநேரம், Pulp நிறுவனங்கள் உருவாக்கும் Pulp-ஐ அப்படியே மேங்கே ஜூஸாக மாற்றுவோம் என்றும் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், மேங்கோ ஜூஸில் மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அம்சங்களில் ஒன்றான Shelf Life மிகக்குறைவு. கூடவே, மேங்கோ ஜூஸ் ஒரு Seasonal by product மட்டுமே. ஆகவே, நீடித்த ஆயுளையும் உயர்ந்த சந்தை மதிப்பையும் உள்ளடக்கிய Mango Ale மற்றும் Mango Leather ஆகிய இரண்டு மதிப்புக்கூட்டுப் பொருள்களை நாம் கிருஷ்ணகிரியில் மாம்பழ வளத்தை வைத்துத் தயாரிக்கத் தொடங்கலாம்!

(இன்னும் காண்போம்)