ரஷ்ய உக்ரைன் போர், ஜூன் மாத வெள்ளம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் எரிசக்தி துறை மின்சார உற்பத்தியில் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்குத் தீர்வு காண அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் `தேசிய எரிசக்தி பாதுகாப்புத் திட்டம்’ ஒன்றை அறிவித்தார்.

அந்தத் திட்டத்தின்படி, பாகிஸ்தானில் உள்ள திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ரெஸ்டாரன்ட், ஹோட்டல் மற்றும் மார்க்கெட்கள் 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ரெஸ்டாரன்ட்களின் சில அறைகள் மூடப்படுவதற்குக் கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். 20 சதவிகித அரசு ஊழியர்கள் வொர்க் ஃபர்ம் ஹோம் வேலையைச் சுழற்சி முறையில் செய்தால், 62 பில்லியன் வரை சேமிக்க முடியும்.
ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறி மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இதனால் 38 பில்லியன் வரை சேமிக்க முடியும். பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க பாரம்பர்ய மோட்டார் வாகனத்துக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். தற்போதுள்ள மோட்டார் வாகனங்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது சாத்தியப்படும் பட்சத்தில் 86 பில்லியன் வரை சேமிக்க முடியும்.

Also Read
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை நோக்கி நகர்வது குறித்து அரசு வேலை செய்து வருகிறது. ஆயினும் மார்க்கெட்களை விரைவாகவே மூடுவது நம்முடைய இலக்கை அடைய முக்கியம். அன்றாட நடைமுறைகளில் மாற்றம் வேண்டும், நாடு கடுமை யான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. வீணாக்கும் கலாசாரத்தை இனி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நடைமுறைகளை முதலில் அரசியல் வாதிகள் செயல்படுத்தி, பொது மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். தேசிய அளவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மாகாணங்களை அணுகி, வியாழனுக்குள் இறுதி முடிவை எடுக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.