Published:Updated:

நட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா?

DoubtOfCommonMan
News
DoubtOfCommonMan

அறிக்கையில் எந்த வாதங்களோ, அபிப்பிராயங்களோ, அவதூறு உள்ளடக்கங்களோ இருக்கக் கூடாது. கேள்விகள் 150 சொற்களைவிட அதிகமாக இருக்கக் கூடாது.

Published:Updated:

நட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா?

அறிக்கையில் எந்த வாதங்களோ, அபிப்பிராயங்களோ, அவதூறு உள்ளடக்கங்களோ இருக்கக் கூடாது. கேள்விகள் 150 சொற்களைவிட அதிகமாக இருக்கக் கூடாது.

DoubtOfCommonMan
News
DoubtOfCommonMan
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், 'ஸ்டார்ட் கேள்விகள்', 'அன்ஸ்டார்ட் கேள்விகள்', 'ஜீரோ ஹவர்' என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன' அவை குறித்த விளக்கம் தேவை எனக் கேட்டிருந்தார் விகடன் வாசகர் ப.சுகுமார். அவற்றுக்கான விடை.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பின் தலையங்கம். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் உறுப்பினர்கள் நமக்காக செயலாற்றும் இடம். நமக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். கேள்வி கேட்பதும் அதற்குப் பதிலளிப்பதும் நாடாளுமன்றத்தின் மிக முக்கிய நிகழ்வு. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளின் வகையைப் பொறுத்து நாடாளுமன்றத்துக்கு வாய்வழி அல்லது எழுத்து மூலமாக உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும். கேள்வி நேரம் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இது சபையின் நடைமுறை விதிகளில் 32 வது விதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி மக்களவையின் ஒவ்வொரு அமர்வின் முதல் ஒரு மணிநேரம் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்படும். கேள்வி நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் அவற்றுக்குப் பதிலளிப்பார்கள். கேள்வி நேரம் என்பது மக்களவையில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவையில் நண்பகல் 12 முதல் 1 மணிவரை நடைபெறும்.

கேள்வி நேரம் என்பது நாட்டில் நிலவும் பிரச்னைகளைப் பற்றிக் குரல் கொடுக்க உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் முக்கியமான கருவி. அரசாங்கத்திடம் தகவல்களைப் பெற எம்.பி-க்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஆனால், கேள்வி நேரத்தில் கேள்வி கேட்க சில விதிமுறைகள் உள்ளன. கேள்விகள் நான்கு வகைப்படும். அவை,

1. நட்சத்திரக்குறியிட்ட கேள்விகள் (Starred questions),

2. நட்சத்திரக்குறியிடாத கேள்விகள் (Unstarred questions),

3. குறுகிய அறிவிப்பு கேள்விகள் (Short notice questions),

4. தனிப்பட்ட உறுப்பினர்களுக்கான கேள்விகள் (Private party questions).

நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள்

அவையில் வாய்வழி பதிலை விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை ஒரு நட்சத்திரக் குறியீட்டால் வேறுபடுத்திக் காட்ட வேண்டும் (*) ஒரு நாளில் 20 நட்சத்திரக் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும். பதில்கள் திருப்திகரமாக இல்லாமலிருந்தால் துணைக் கேள்விகளைக் கேட்கலாம்.

இந்த வகைக் கேள்விகளைக் கேட்க குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன் தெளிவான அறிவிப்பைத் தர வேண்டும். இக்கேள்விகளின் பட்டியல் பச்சைநிற காகிதத்தில் அச்சிடப்படுகிறது.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

நட்சத்திரக் குறியிடாத கேள்விகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்வழி பதிலை எதிர்பார்க்காமல் எழுத்து வடிவ அறிக்கையை எதிர்பார்த்தால், நட்சத்திரகுறியிடாத கேள்விகளை எழுப்பலாம். ஆனால், வழங்கப்படும் பதில்களுக்கு துணைக் கேள்விகளைக் கேட்க முடியாது. ஒரு நாளில் அதிகபட்சமாக 230 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இக்கேள்விகளைக் கேட்க குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன் தெளிவான அறிவிப்பைத் தர வேண்டும். இக்கேள்வி பட்டியல் வெள்ளைநிற காகிதத்தில் அச்சிடப்படுகிறது.

Doubt of common man
Doubt of common man

குறுகிய அறிவிப்புக் கேள்விகள்

இக்கேள்விகள் 10 நாள்களுக்குக் குறைவான அறிவிப்பில் கேட்கக்கூடிய அவசர, பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள். அவை, இளஞ்சிவப்பு நிற காகிதத்தில் அச்சிடப்படுகின்றன. கேள்வி நேரத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் இக்கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்படுகின்றன.

தனிப்பட்ட உறுப்பினர்களுக்கான கேள்விகள்

இவை ஒரு குறிப்பிட்ட அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளாகும். அந்த எம்.பி-க்கள் பொறுப்பேற்க வேண்டிய புதிய மசோதாவுடன் தொடர்புடைய கேள்விகளும் கேட்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவின் தலைவரிடம் கேட்கப்படுகின்றன.

உறுப்பினர்களின் கேள்விக்கான அறிவிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை:

1. கேள்வி தெளிவானதாக இருக்க வேண்டும்.

2. எந்த அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும்.

3. பதிலைப் பெறுவதற்கான கால அவகாசம்.

4. முக்கியத்துவத்தைப் பொறுத்து கேள்விகளை வரிசைப்படுத்துதல்.

அறிக்கையில் எந்த வாதங்களோ, அபிப்பிராயங்களோ, அவதூறு உள்ளடக்கங்களோ இருக்கக் கூடாது. கேள்விகள் 150 சொற்களை விட அதிகமாக இருக்கக் கூடாது.

கேள்விகள் அவற்றின் வகையைப் பொறுத்துத் தொகுக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சர் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட நாள் வரம்புக்குள் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஜீரோ ஹவர்

ஜீரோ ஹவர் என்பது 30 நிமிட அமர்வாகும். அதில் ஒரு உறுப்பினருக்கு பிரச்னையை எழுப்ப 3 நிமிடங்கள் கிடைக்கும். மேலும், ஒரு வாரத்தில், ஒரு உறுப்பினர், ஒரு ஜீரோ ஹவர் கோரிக்கைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஜீரோ ஹவர் 1962-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் விஷயங்களை எழுப்ப அமைக்கப்பட்ட திட்டம். ஜீரோ ஹவரைப்பற்றி நாடாளுமன்ற நடைமுறை விதிகளில் குறிப்பிடப்படவில்லை.

கேள்வி நேரத்தின் நோக்கம்

கேள்விகளின் நோக்கம் தகவல்களைப் பெறுவதுதான் என்றாலும், இது உறுப்பினர்களின் நிர்வாகக் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும்.

அரசாங்கக் கொள்கையைப் பற்றிய பொதுக் கருத்து மற்றும் அதன் குறைபாடுகள், அதன் செயல்பாடுகள் ஆகியவை கேள்வி நேரத்தில் அலசி ஆராயப்படுகிறது. பொது நல பிரச்னைகளும் இதில் பேசப்படுகின்றன.

குடிமக்களாக, நாம் தேர்ந்தெடுத்த எம்.பி-க்களின் செயல்பாடுகளைக் கேள்வி நேரம் மூலம் அறிந்துகொள்ளலாம். உறுப்பினர்கள் தங்களின் தொகுதியுடைய குறை நிறைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கேள்வி நேரமே சிறந்தது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan