Published:Updated:

குண்டும், குழியுமான சாலைகள்… சேலம் மாநகராட்சி தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு!

சேலம் மாநகராட்சி
News
சேலம் மாநகராட்சி

இத்தனை குறைபாடுகள் சேலம் மாநகராட்சியில் இருந்துவரும் நிலையில் தற்போது சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்படுவது, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு சேலம் எவ்வளவோ... பரவாயில்லை என்பதால் தான் இவ்விருது வழங்கப்படுகிறது. -கவுன்சிலர் செல்வம்

குண்டும், குழியுமான சாலைகள்… சேலம் மாநகராட்சி தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு!

இத்தனை குறைபாடுகள் சேலம் மாநகராட்சியில் இருந்துவரும் நிலையில் தற்போது சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்படுவது, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு சேலம் எவ்வளவோ... பரவாயில்லை என்பதால் தான் இவ்விருது வழங்கப்படுகிறது. -கவுன்சிலர் செல்வம்

Published:Updated:
சேலம் மாநகராட்சி
News
சேலம் மாநகராட்சி

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக சேலத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில் சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் 2-வது இடமும், தென்காசி 3-வது இடமும் பிடித்துள்ளது. மாநகராட்சியை பொறுத்தவரை தமிழகத்திலேயே சேலம் மாநகராட்சி மட்டும் தான் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நாளை ஆகஸ்ட்- 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கி கெளரவிக்கிறார்.

சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியின் தற்போதைய நிலையை நேரடி ஆய்வு செய்து இவ்விருதானது வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் மத்தியில் கூறப்பட்டாலும், பொதுமக்கள் தரப்பில் எப்படி சேலம் மாநகராட்சிக்கு முதலிடம் கிடைத்தது என்ற சந்தேகம் எழும்பிக் கொண்டே வருகிறது. காரணம், சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை முறையான சாலை வசதிகளோ, சாக்கடை வசதிகளோ கிடையாது. அரை மணிநேரம் விடாமல் மழை பெய்தால் போதும், சேலம் மாநகராட்சிகளில் பல இடங்கள் சாக்கடைகளில் மிதப்பதை நம்மால் காணமுடியும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சுமார்ட் சிட்டி எனும் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு எல்லாம் கிடப்பில் கிடந்து வருகின்றன. அதில் முக்கியமாக பாதாள சாக்கடை திட்டமும் ஒன்று.

மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலேயே சாலை வசதிகள் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை மட்டும் தான் பூர்த்தி செய்து வருகின்றன. மற்றபடி தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கூறியவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டுமே கூறிவருகின்றனர். ஆனால் எந்த வாக்குறுதிகளும் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும் கடந்த மே மாதம் சேலம், ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளார். ஒன்றும் கிடையாது, பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளாரா இல்லை, தொழில்வளர்ச்சியை பெருக்கும் விதமாக எதுவும் செய்துள்ளாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. சுமார்ட் சிட்டி எனும் திட்டத்தின் கீழ் பல ஊழல்களை செய்துள்ளார். அதினிலும் பல பணிகள், பாலங்கள் பாதியில் நின்று வருகிறது என்று வெட்ட வெளிச்சமாக சேலம் மாநகராட்சிகளில் நிலைகளை பேசிவிட்டு சென்றார்.

இந்நிலையில் மக்களின் எந்தவித அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யாமல் இருந்துவரும் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்பட்டிருப்பது பெறும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் அ.தி.மு.க., 22 -வது வார்டு கவுன்சிலர் செல்வம் பேசியபோது, “கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் தான் தற்போது சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தி.மு.க., அரசாங்கம் தாங்கள் கொண்டு வந்த திட்டமாக கூறி வருகின்றனர்.

 22 -வது வார்டு கவுன்சிலர் செல்வம்
22 -வது வார்டு கவுன்சிலர் செல்வம்

மேலும் தி.மு.க., அரசாங்கம் அமைந்து இதுவரையிலும் எந்தவித திட்டத்தையும் சேலத்தில் செயல்படுத்தவில்லை. பாதாள சாக்கடை திட்டம் இதுவரையிலும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. குப்பைகளை சேகரிப்பதற்கான தூய்மை பணியாளர்களும் பற்றாக்குறையாக இருந்து வருகின்றனர். மேலும் மாநகராட்சிக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதி இதுவரையிலும் தமிழக அரசால் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இத்தனை குறைபாடுகள் சேலம் மாநகராட்சியில் இருந்துவரும் நிலையில் தற்போது சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்படுவது, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு சேலம் எவ்வளவோ பரவாயில்லை என்பதால் தான் இவ்விருது வழங்கப்படுகிறது “என்றார்.

மேலும் இதுகுறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “நான் மாநகராட்சி மேயராக இருக்கும்போது இதுமாதிரியான விருது வழங்கப்படுவது பெருமையாக இருக்கிறது. இவ்விருது இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்’’ என்றார்.