Published:Updated:

How to series: சட்டப்படி குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி? | How to adopt a child legally?

Child Adoption (Representational Image)
News
Child Adoption (Representational Image) ( Pixabay )

``இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தத்தெடுப்பு மையங்கள் `காரா' (CARA) அமைப்பின் கீழ் இயங்குகின்றன. தத்தெடுக்க விரும்புபவர்கள் அம்மையத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். சீனியாரிட்டி அடிப்படையில் குழந்தை தத்துக் கொடுக்கப்படும்."

Published:Updated:

How to series: சட்டப்படி குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி? | How to adopt a child legally?

``இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தத்தெடுப்பு மையங்கள் `காரா' (CARA) அமைப்பின் கீழ் இயங்குகின்றன. தத்தெடுக்க விரும்புபவர்கள் அம்மையத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். சீனியாரிட்டி அடிப்படையில் குழந்தை தத்துக் கொடுக்கப்படும்."

Child Adoption (Representational Image)
News
Child Adoption (Representational Image) ( Pixabay )

குழந்தைப் பேறின்மையைப் போக்க இன்றைய நவீன மருத்துவத்தில் பல்வேறான சாத்தியக்கூறுகள் உள்ளன. இன்னொரு பக்கம், அரவணைக்க ஆள் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் தாங்கள் தத்தெடுக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள். உலகில் அனைத்து நாடுகளும் தத்தெடுத்தலை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் குழந்தையைத் தத்தெடுக்கு விரும்பும் தம்பதியருக்கு வழிகாட்டும் நோக்கில் தத்தெடுப்பது எப்படி, அதற்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்னென்ன என்பவை குறித்துச் சொல்கிறார் வழக்கறிஞர் விஜயன்.

வழக்கறிஞர் விஜயன்
வழக்கறிஞர் விஜயன்

``தத்தெடுத்தல் என்பது எளிமையான செயலலல்ல. தத்தெடுக்கப்படும் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தத்தெடுப்பதற்கு நிறைய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தத்தெடுப்பு மையங்கள் `காரா' (CARA - Central Adoption Resource Authority) அமைப்பின் கீழ் இயங்குகின்றன. தத்தெடுக்க விரும்புபவர்கள் அம்மையத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். சீனியாரிட்டி அடிப்படையில் குழந்தை தத்துக் கொடுக்கப்படும்.

குழந்தையை தத்தெடுக்கப் பதிவு செய்வதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன. தம்பதியர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரையிலும் தத்தெடுப்பதற்கு பதிவு செய்ய முடியாது.

இரண்டு ஆண்டுகள் வரை காலம் எடுத்து, குழந்தைப் பேறின்மையை உறுதி செய்யும் மருத்துவ ஆவணங்களைக் கொண்டுதான் பதிவு செய்ய வேண்டும்.

திருமணமாகாத பெண் தத்தெடுக்கலாம். ஆனால் திருமணமாகாத ஆண் தத்தெடுப்புக்கு தகுதியற்றவர். 0-4 வயதுள்ள குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்றால். தம்பதியர் வயதின் கூட்டுத்தொகை 90 க்குள் இருக்க வேண்டும். 4-8 வயது குழந்தையைத் தத்தெடுப்பதென்றால் 100 வயது வரை இருக்கலாம். 8 - 16 வயது குழந்தை என்றால் 110 வயது வரை இருக்கலாம்.

Child Adoption (Representational Image)
Child Adoption (Representational Image)
Pixabay

தத்தெடுக்கப்படும் குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளர்கிறதா என்பதை Child Protection Committee, Child Welfare Committee ஆகியவை கண்காணிக்கும். குழந்தையைக் கண்காணிக்கும். சட்டத்துக்குப் புறம்பாக தத்தெடுக்கப்பட்டிருந்தாலோ, குழந்தையை விலைக்கு வாங்கியிருந்தாலோ அக்குழந்தையை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கும் பணியை இந்த அமைப்புகள் மேற்கொள்ளும்’’ என்றார்.