Published:Updated:

How To: பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Aadhar Card For Baby?

Aadhar
News
Aadhar

ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகளுக்குப் பெற, இரண்டே இரண்டு ஆவணங்கள் போதுமானவை. அவற்றைக் கொண்டு, எப்படி Baal Aadhar அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Published:Updated:

How To: பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Aadhar Card For Baby?

ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகளுக்குப் பெற, இரண்டே இரண்டு ஆவணங்கள் போதுமானவை. அவற்றைக் கொண்டு, எப்படி Baal Aadhar அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Aadhar
News
Aadhar

இந்தியாவில் அனைவருக்குமான ஓர் அடையாள அட்டையாக இருப்பது, ஆதார் அட்டை. குழந்தையில் ஆரம்பித்து, அனைத்து வயதினருக்கும் ஆதார் அட்டை பல இடங்களில் தேவைப்படக்கூடிய ஓர் ஆவணமாக இருக்கிறது. அனைத்துக்குமான இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகளுக்குப் பெற, இரண்டே இரண்டு ஆவணங்கள் போதுமானவை. அவற்றைக் கொண்டு, பிறந்த குழந்தைக்கு எப்படி ஆதார் அட்டைக்கு (Baal Aadhar) விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்

1. குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்.

2. குழந்தையின் பெற்றோரது ஆதார் அட்டை.

அப்ளை செய்வதற்கான நடைமுறை

* UIDAI-ன் அதிகாரபூர்வ வலைதள பக்கமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்குச் செல்லவும்.

* அதில் ஆதார் அட்டை பதிவு பக்கத்தை (Aadhar card registration) க்ளிக் செய்யவும்.

* இங்கு குழந்தையின் பெயர், பெற்றோரின் தனிப்பட்ட தகவல்கள், போன் எண் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

* அடுத்ததாக, உங்களுடைய இருப்பிடத்துக்கான தகவல்களை உள்ளிடவும்.

* உங்களுடைய இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கான appointment-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

Baby
Baby
Photo by Khoa Pham on Unsplash

* அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு, ஆதார் சேவா கேந்திரா எனப்படும் சேவை மையத்துக்குச் சென்று உங்களுடைய ஆவணங்களைக் கொடுக்கவும்.

* அங்கு பதிவு செய்து உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.

* 5 வயது வரை குழந்தைக்கு கைரேகை பதிவு எடுக்க மாட்டார்கள். அதற்குப் பின்தான் அப்டேட் செய்ய வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு 5 அல்லது அதற்கு அதிகமான வயது என்றால் குழந்தையின் போட்டோ மற்றும் கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்றவை எடுத்துக்கொள்ளபடும்.

* பதிவு செய்தபின், விண்ணப்பம் செய்ததற்கான ரசீது கொடுக்கபடும். அதைப் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.