Published:Updated:

கலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி? விரிவான வழிகாட்டுதல் #DoubtofCommonMan

திருமணம்
News
திருமணம்

கலப்புத்திருமண நிதியுதவி பெறும் வழிமுறைகள்.

Published:Updated:

கலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி? விரிவான வழிகாட்டுதல் #DoubtofCommonMan

கலப்புத்திருமண நிதியுதவி பெறும் வழிமுறைகள்.

திருமணம்
News
திருமணம்

திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருப்பின், அதைத் தமிழக அரசு கலப்புத்திருமணம் என அங்கீகரிக்கிறது. கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சார்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

கலப்புத்திருமணம்
கலப்புத்திருமணம்
"இந்த நிதியுதவியைப் பெறுவது எப்படி? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றால் ஏழைப் பெற்றோர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா? அதற்கான நிபந்தனைகள் என்ன" என்று விகடன் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் சூரியகுமார். கிருஷ்ணா என்ற வாசகரும் #DoubtOfCommonMan பக்கத்தில் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.

"திருமணம் முடிந்து 40 நாள்கள் ஆகின்றன. நானும் என் மனைவியும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். உதவித்தொகை பெற, எங்கள் திருமணத்தை இந்திய திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டுமா?" என்பது அவரது கேள்வி. இந்தக் கேள்விகளை ஓய்வுபெற்ற கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினாரிடம் கேட்டோம்.

Wedding
Wedding

இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி:

மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமணநிதி உதவித் திட்டத்தில் ஏழைப்பெண்களின் தாய் அல்லது தந்தையிடம் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் பயனடைந்த மணப்பெண், கலப்புத்திருமணம் செய்து கொள்கிறார் எனில் 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்' மூலமும் பயன்பெறலாம்.

கலப்புத் திருமண நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பம்:

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்திற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் கிடைக்கும் 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்' என்ற படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டியவை:

மணமக்களின் கல்விச்சான்றிதழின் நகல் மணமக்களின் சாதிச்சான்றிதழ் நகல் வயதுச் சான்றுக்காக (பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்) முகவரிச் சான்றுக்காக (வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்)

திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ்,கோயில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது) கிராம அல்லது நகர அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட கலப்புத்திருமணச் சான்றிதழ் நகல்.

கலப்புத்திருமணம் நிதியுதவி பெறுவதற்கான அடிப்படைத் தகுதி:

புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி கிடைக்கும். அல்லது புதுமணத் தம்பதியினரில் ஒருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி கிடைக்கும். கண்டிப்பாக திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நீங்கள் விண்ணிப்பித்த தேதியிலிருந்து 15 நாள்களுக்குள் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
ஓய்வுபெற்ற கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்

ஏற்கெனவே "திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? திருமணம் நடைபெற்று 2 வருடங்களாகிவிட்டன. இதுவரைப் பதிவு செய்யவில்லை. இப்போது பதிவு செய்யலாமா?" என்று விகடனின் #DoubtOfcommonMan பக்கத்தில் வாசகர் பிரதீப் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அளித்த பதில் இதோ...

பட்டதாரிகள் அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கான திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கிறீர்கள் எனில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

நிதியுதவி:

பள்ளிப்படிப்பு முடிக்காத தம்பதிகள் எனில் 25,000 ( 15,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும் 10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) நிதியுதவியாகவும், திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்படும். மணமக்கள் பட்டதாரிகள் அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்கள் எனில் 50,000 (30,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும் 20,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) நிதியுதவியாகவும், திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்படும்.

திருமணம்
திருமணம்

காலநேரம்:

நீங்கள் விண்ணிப்பித்த தேதியிலிருந்து 15 நாள்களுக்குள் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். சான்றிதழ்கள் சரிபார்ப்புகளுக்குப் பின் 3 மாதங்களுக்குள் முழு நிதியுதவியும் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

மேலும் அதிக தகவல்களுக்கு: உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நலத்துறையை அணுகலாம். அல்லது 044-24351885 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Doubt of Common Man
Doubt of Common Man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.