Published:Updated:

How To: கால்நடை படிப்பு~ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Online For Veterinary Course?

சித்திரிப்பு படம்
News
சித்திரிப்பு படம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 12-ம் தேதி முதல், செப்டம்பர் 26-ம் தேதி மாலை 5 மணி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

Published:Updated:

How To: கால்நடை படிப்பு~ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Online For Veterinary Course?

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 12-ம் தேதி முதல், செப்டம்பர் 26-ம் தேதி மாலை 5 மணி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

சித்திரிப்பு படம்
News
சித்திரிப்பு படம்

நடப்பு 2022 - 23ம் ஆண்டின் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 12-ம் தேதி முதல், செப்டம்பர் 26-ம் தேதி மாலை 5 மணி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH), உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Poultry Technology), பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Dairy Technology) உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்பதால் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

* Nativity சான்றிதழ்

* ஆதார் அட்டை

* முதல் தலைமுறை பட்டதாரி என்றால் அதற்கான சான்றிதழ்

* 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்

* பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ

* பள்ளிச் சான்றிதழ்

* 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட்

* தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான EMIS எண்

* வகுப்புச் சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை

* மடிக்கணினி அல்லது கணினியில் https://tanuvas.ac.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

* இங்கு Under Graduate Admission என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்து உள்ளே செல்லவும். அடுத்து திறக்கும் பக்கத்தில் Apply என்று தேர்வு செய்து கொள்ளவும்.

* அடுத்து திறக்கும் பக்கத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் என்ற தேர்வு இருக்கும். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் அதனை ஓபன் செய்து கொள்ளவும். இங்கு அப்ளை செய்வதற்கு முன் Instructions, Notification மற்றும் Prospectus போன்றவற்றை படித்துக்கொள்ளவும்.

* தொடர்ந்து New User என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து Register Now என்ற பகுதியை க்ளிக் செய்யவும். அங்கு உங்களுடைய செல்போன் எண் கேட்கப்படும். அதனை உள்ளிடும் பட்சத்தில், OTP வரும். அதனை உள்ளிட்டு Submit கொடுக்கவும், பின் மெயில் ID கேட்கும். அதனையும் உள்ளிட்டு Submit கொடுத்தால் உங்களுக்கான அக்கவுன்ட் உருவாகிவிடும்.

* பின் `மெசேஜ்’ என்ற ஆப்ஷன் வரும். அதனை ஓகே கொடுத்தால் அப்ளை செய்வதற்கான படிநிலைகள் தொடங்கும்.

கால்நடை
கால்நடை

* முதலில் உங்களுக்குத் தேவையான கோர்ஸ் என்னவென்று தேர்வு செய்து கொள்ளவும். அதன்பின் அந்த கோர்ஸ் உள்ள கல்லூரிகள் போன்றவற்றை தேர்வு செய்து பின், Community தேர்வு செய்து அதற்கான சான்றிதழ்களை Upload செய்து, பின் Save & Next கொடுக்கவும்.

* தொடர்ந்து, Personal Data. இங்கு நீங்கள் பிறந்த இடம், உங்கள் முகவரி, பெற்றோர் பற்றிய விவரங்கள், அலைபேசி எண் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு, அவற்றிற்கான சான்றிதழ்களை Upload செய்ய வேண்டும். கூடவே உங்களுடைய புகைப்படம் ஒன்றை இங்கு Upload செய்யவும்.

* அடுத்ததாக உங்களுடைய கல்வி குறித்த விவரங்களையும், அதற்கான சான்றிதழ்களையும் Upload செய்ய வேண்டும். உங்களுடைய மதிப்பெண்களை கவனமாக மதிப்பெண் சான்றிதழை பார்த்து உள்ளிடவும். பின் Save and Next கண்டிப்பாக கொடுக்கவும்.

* அடுத்ததாக நீங்கள் படித்த பள்ளி குறித்த விவரங்கள், உங்களுடைய EMIS எண் போன்ற விவரம், நீங்கள் எந்த மொழியில் படித்தீர்கள் என்பது குறித்தெல்லாம் உள்ளீடு கொடுக்க வேண்டும்.

* அடுத்து Save & Next கொடுக்கும் பட்சத்தில் Special Category கேட்கும். இதில் உங்களுக்கன சரியான category இருந்தால் தேர்வு செய்யவும். இல்லையெனில் எதையும் தேர்வு செய்ய தேவையில்லை.

* அதே பக்கத்தில் Declaration கொடுக்கப்பட்டிருக்கும், அதனை முழுவதும் படித்து பின் agree கொடுக்கவும். தொடர்ந்து Place-ஐ உள்ளிடவும். பின் Signature. உங்களுடையது மற்றும் உங்கள் பெற்றோர் இரண்டு பேருடையதையும் ஸ்கேன் Copy ஆக Upload செய்யவும்.

* அதன்பின் உங்களுடைய Application ஐ Save கொடுத்து Preview என்று கொடுக்கவும். இங்கு உங்களுடைய விண்ணப்பம் கட்டப்படும்; அதில் ஏதேனும் தவறு இருப்பின் அதனை இப்போதே சரி செய்து கொள்ளவும்.

விண்ணப்பம் - சித்தரிப்பு படம்.
விண்ணப்பம் - சித்தரிப்பு படம்.

* செக் செய்து பின் Proceed to Payment என்று கொடுக்கவும். இதில் இரண்டு option கொடுக்கப்படும்; அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்களுடைய விண்ணப்பித்திற்கான கட்டணங்களை செலுத்தலாம்.

* கால்நடை மருத்துவப்படிப்பிற்கு மற்ற பிரிவினருக்கு ரூபாய் 700, SC, ST, SCA உள்ளிட்ட பிரிவினருக்கு ரூபாய் 350 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

* மற்ற படிப்புகளுக்கு SC, ST, SCA போன்ற பிரிவினருக்கு ரூபாய் 600, மற்ற பிரிவினருக்கு ரூபாய்1200 கட்டணமாகும்.

* ஒருவரே இரண்டு பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.