Published:Updated:

How To: ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?|How to Change Address in Aadhar Card?

ஆதார்
News
ஆதார்

ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை, வேறு வசிப்பிடம் சென்றுவிட்டீர்கள், அதுதான் உங்கள் நிரந்தர முகவரி எனும் பட்சத்தில், எளிதாக வீட்டில் இருந்தபடியே முகவரி மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Published:Updated:

How To: ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?|How to Change Address in Aadhar Card?

ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை, வேறு வசிப்பிடம் சென்றுவிட்டீர்கள், அதுதான் உங்கள் நிரந்தர முகவரி எனும் பட்சத்தில், எளிதாக வீட்டில் இருந்தபடியே முகவரி மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஆதார்
News
ஆதார்

இந்தியாவில் உள்ள மக்களின் அடிப்படை விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையாக இருப்பது ஆதார் அட்டை. அரசு வழங்கும் இந்த அட்டையில் நம்முடைய பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் கூடவே கைரேகை, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த விவரங்களில் முகவரி மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை, வேறு வசிப்பிடம் சென்றுவிட்டீர்கள், அதுதான் உங்கள் நிரந்தர முகவரி என்ற பட்சத்தில் நீங்கள் கீழே குறிப்பிட்டவாறு, ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் உங்களுடைய முகவரியை மாற்றலாம்.

ஆதார்
ஆதார்

ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய...

* வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டையின் பயனாளரே, முகவரி மாற்றம் செய்ய இயலும்.

* இதற்கு, முதலில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் UIDAI-ன் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/. -க்கு செல்லவும்.

* அடுத்து திறக்கும் UIDAI இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், 'My Aadhar' என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.

* அதன்பின் திறக்கும் பக்கத்தில் Update Your Aadhar section என்ற பகுதியில், `Update Demographics Data and Check Status' (மக்கள்தொகை தரவு மற்றும் நிலைசரிபார்ப்பு ) என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.

* தொடர்ந்து மற்றொரு பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தில், உங்கள் ஆதார் எண் மற்றும் `ஒருமுறை கடவுச்சொல்லை (OTP)’ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டவுடன், இணைக்கப்பட்ட/பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். பெறப்பட்ட OTP, கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின் உங்களுடைய ஆதார் பக்கம் திறக்கும்.

* திறக்கும் பக்கத்தில் `Update Aadhar Online' என்ற பகுதியை க்ளிக் செய்யவும். அதனுள்ளே `Proceed to Update Aadhar’ என்பதை தேர்வு செய்து உள்ளே செல்லவும்.

* அந்தப் பக்கத்தில், உங்களுடைய ஆதாரில் உள்ள முகவரி காட்டப்படும். இங்கு ஆதார் அட்டையை புதுப்பித்து புதிய முகவரியை உள்ளிடுவதற்கான விருப்பம் தோன்றும். இந்த இடத்தில் புதிய வீட்டு முகவரி, கட்டட எண், சம்பந்தப்பட்ட நகரம், பின்கோடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். இதனுடன் உங்களின் முகவரி சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும்.

* புதுப்பிக்கப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிட்டதும், NEXT என்ற பகுதியை க்ளிக் செய்து கட்டணம் ரூ.50ஐ செலுத்தவும்.

* ஆதார் அட்டையின் முகவரி மாற்றத்துக்கான கட்டணம் செலுத்தப்பட்டதும் உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

ஆஃப்லைனில் முகவரி மாற்றம் செய்ய...

* உங்கள் ஊரில் உள்ள ஆதார் சேவா கேந்திரா என்ற அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையின் முகவரியை மாற்றலாம். மத்திய அரசு தபால் நிலையங்கள், வங்கி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை புதுப்பிப்பு சேவைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

* ஆதார் அட்டையின் முகவரி மாற்றத்துக்கான அடையாள சான்றை எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். ஆதார் அட்டை முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் 90 நாள்களுக்குள் புதுப்பிப்பு கோரிக்கை செயலாக்கப்பட்டு, உங்களுடைய முகவரிக்கு ஆதார் அட்டை தபாலில் வரும்.

ஆதார் முக்கியமான ஆவணம் என்பதால், அதை அப்டேட்டடாக வைத்துக்கொள்வது அவசியம்.