Published:Updated:

How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? | How To Change Address In Passport?

பாஸ்போர்ட்
News
பாஸ்போர்ட்

படிப்பு, பணி, சுற்றுலா என எந்தவொரு காரணத்திற்காக வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. இதனை பலகட்ட நடைமுறைகளுக்குப் பிறகே பெற முடியும். அந்த ஆவணத்தில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டுமானால், எப்படி மாற்றுவது? வழிமுறைகள் இங்கே...

Published:Updated:

How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? | How To Change Address In Passport?

படிப்பு, பணி, சுற்றுலா என எந்தவொரு காரணத்திற்காக வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. இதனை பலகட்ட நடைமுறைகளுக்குப் பிறகே பெற முடியும். அந்த ஆவணத்தில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டுமானால், எப்படி மாற்றுவது? வழிமுறைகள் இங்கே...

பாஸ்போர்ட்
News
பாஸ்போர்ட்

படிப்பு, பணி, சுற்றுலா என எந்தவொரு காரணத்திற்காக வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அதற்குக் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இதனை பலகட்ட நடைமுறைகளுக்குப் பிறகே பெற முடியும். அந்த ஆவணத்தில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டுமானால், எப்படி மாற்றுவது?

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றத்தை, புதிய பாஸ்போர்ட் பெறாமல் செய்ய முடியாது. எனவே அதற்கான வழிமுறைகள் இங்கே...

Online registration
Online registration

முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்

* அசல் பழைய பாஸ்போர்ட்

* ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல்

* பணம் செலுத்திய ரசீது அல்லது சலான் ரசீது நகல்

* முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்

* ECR(Emigration Check Required)/NON ECR பக்கத்தின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்

* தற்போதைய முகவரி ஆதாரம் (ஏதேனும் ஒன்று)

* வாக்காளர் அடையாள அட்டை

* ஆதார் அட்டை

* மின் ரசீது

* தண்ணீர் பயன்பாட்டு ரசீது

* எரிவாயு இணைப்புக்கான சான்று

* தொலைபேசி பில் (மொபைல் அல்லது லேண்ட்லைன்)

* பதிவுசெய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம்

* வருமான வரி மதிப்பீட்டு ஆணை

* இணையின் பாஸ்போர்ட் நகல் (குடும்ப விவரங்கள் உட்பட முதல் மற்றும் கடைசி பக்கம்). விண்ணப்பதாரரின் தற்போதைய முகவரி, இணையின் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் பொருந்த வேண்டும்.

* பிரபல நிறுவன உரிமையாளரிடம் இருந்து லெட்டர் ஹெட்டில் பெறப்பட்டச் சான்றிதழ்

* தற்போது நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கின் புகைப்பட பாஸ்புக் (பட்டியலிடப்பட்ட தனியார் துறை இந்திய வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் மட்டும்)

செயல்முறை

* உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பாஸ்போர்ட் சேவா (Passport Seva) இணையதளத்தை திறக்கவும். அடுத்து, புதிய பயனர் பதிவு (New Registraton) தேர்வை கிளிக் செய்யவும்.

* உங்களின் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, உங்கள் அருகேயுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்கள் பக்கத்தில் இருக்கும் CAPTCHA குறியீட்டை உள்ளிட்டு, Register என்பதைக் கிளிக் செய்யவும். பதிவு நடைமுறையை முடித்த பின் தான் உங்களால் பாஸ்போர்ட் சேவா போர்டாவில் உள்நுழைய முடியும்.

* அதை தொடர்ந்து, முகப்புப் பக்கத்தில் இருந்து புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும். பாஸ்போர்ட் மறு வெளியீடு (Apply for Fresh Passport/ Reissue of Passport) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதில், Click here to fill the application form online என்பதைக் கிளிக் செய்யவும்.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

* தொடர்ந்து, பாஸ்போர்ட் புக்லெட் வகை மற்றும் விண்ணப்ப வகை போன்ற சில விவரங்களை உள்ளிடவும். View Saved/ Submitted Applications என்ற தேர்வை கிளிக் செய்யவும். அடுத்து திறக்கும் பக்கத்தில் உள்ள Pay and Schedule Appointment என்பதைக் கிளிக் செய்து, பணம் செலுத்தவும்.

* இறுதியாக, NEXT பட்டனை அழுத்தவும். தொடர்ந்து அருகில் இருக்கும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா இடத்தை தேர்வு செய்து, உங்களுடைய விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்துக் கொள்ளவும்.

* அப்பாயின்ட்மென்ட் ஒதுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அந்த குறிப்பிட்ட தேதி, நேரத்தில் செல்ல வேண்டும்.