Published:Updated:

How to: ஆதார் அட்டையில் போட்டோ மாற்றுவது எப்படி? | How To Change Photo In Aadhar Card?

ஆதார் அட்டை
News
ஆதார் அட்டை

சிறுவயதில் எடுத்த புகைப்படத்துடனேயே இன்றளவும் ஆதார் பயன்படுத்துபவரா நீங்கள்? ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதாக எப்படி மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

Published:Updated:

How to: ஆதார் அட்டையில் போட்டோ மாற்றுவது எப்படி? | How To Change Photo In Aadhar Card?

சிறுவயதில் எடுத்த புகைப்படத்துடனேயே இன்றளவும் ஆதார் பயன்படுத்துபவரா நீங்கள்? ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதாக எப்படி மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

ஆதார் அட்டை
News
ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டையின் பயன்பாடு என்பது பல இடங்களிலும் இன்றியமையாததாகிறது. வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதில் தொடங்கி பல இடங்களில், பல வகைகளில் ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது.

ஆதார்
ஆதார்

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் அட்டையை பல வருடங்களாகப் பயன்படுத்தவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்னை, அதில் உள்ள புகைப்படம். எப்போதோ எடுத்த புகைப்படத்துடனே இன்றளவும் ஆதார் பயன்படுத்துபவர்கள் உண்டு. அப்படியான புகைப்படங்களை எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள்

* முதலில் UIDAI இணையதளத்தை, அதாவது, uidai.gov.in ஐ திறக்கவும்.

* அங்கு Aadhaar Enrollment Form (ஆதார் பதிவு படிவம் ) இருக்கும், அதனை பதிவிறக்கவும்.

* அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.

* பின்னர், ஆதார் பதிவு மையத்திற்கு (Aadhaar Enrollment Center) சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.

* அங்கு உங்களுடைய படிவத்தை பெற்றுக்கொண்டு, உங்களை புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

* இதற்கென ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Aadhaar
Aadhaar

* இதை தொடர்ந்து நீங்கள் ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN - Uniform Resource Name) பெறுவீர்கள்.

* இந்த URN மூலம் உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பு நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

* உங்களுடைய புகைப்படத்தை ஆதார் அட்டையில் புதுப்பிக்க, 90 நாள்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இணையதளத்தில் புதுப்பிக்க இயலாதவர்கள் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் கேந்திர சேவைக்கு சென்று உங்களுடைய புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம்.