இன்றைக்கு சிறிய வீடுகளிலும் சரி, பெரிய வீடுகளிலும் சரி அனைவரும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று செடிகளாவது வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் பலர், வீடு கட்டுவதற்கு முன்பே தோட்டம் அமைக்க தனி இடம் ஒதுக்கிவிடுக்கிறார்கள். இப்படி மக்களுக்கு தற்போது மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

ஆர்வம் இருந்தாலும், எப்படி முறையாகத் தோட்டம் அமைப்பது? என்ற கேள்வி மக்களுக்கு இருக்கிறது. மேலும், ஏற்கெனவே மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் வைத்திருப் பவர்களுக்கு அதை எப்படி முறையாகப் பராமரிக்க வேண்டும்? அதை எப்படி சிறப்பாக மாற்றி அமைக்க வேண்டும்? என்ற கேள்விகள் இருக்கின்றன.
இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கத்தான் பசுமை விகடன் மற்றும் இந்திரா கார்டன்ஸ் இணைந்து "வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!" என்ற நேரடி மாடித்தோட்ட பயிற்சியை நடத்த உள்ளது.

இந்தப் பயிற்சியில் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் குறித்து தோட்டக்கலை வல்லுநர் அனூப்குமார் பயிற்சி அளிக்க உள்ளார். மாடித்தோட்டத்தில் செலவில்லாமல் செடிகள் அமைப்பது குறித்தும், நாட்டு ரகங்களைப் பயன்படுத்தி தோட்டம் அமைப்பதும் குறித்தும் பயிற்சியளிக்க உள்ளார் திருப்பூரைச் சேர்ந்த பிரியா ராஜ்நாராயணன். வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி? அதை பராமரிப்பது எப்படி? என்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு பதிலளித்து வழிகாட்ட உள்ளனர்.
இதோடு சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன் அமைத்திருக்கும் மாடித்தோட்டத்தை நேரடியாகப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடியில் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றை வளர்த்து ஆரோக்கியமான, நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்க உள்ளனர்.
மேலும் நேரடி மாடித்தோட்ட பயிற்சியில்...
தொட்டி, பைகளில் செடிகளை வளர்க்கும் நுட்பங்கள்,
நோய் கட்டுப்பாடு,
இயற்கை இடுபொருள் தயாரிக்கும் முறைகள்,
மாடித்தோட்டங்களை காணும் வாய்ப்பு.
- என பல தகவல்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.

எங்கே, எப்போது?
நாள்: ஜனவரி 28, 2023 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: இந்திரா கார்டன்ஸ், கோவிலம்பாக்கம், சென்னை.
கட்டண விபரம்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பயிற்சிக் கட்டணம் ரூ.500. கட்டணத்தை கீழே கொடுத்துள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து செலுத்த வேண்டும். பிறகு, கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்களது முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் 99400 22128 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.
மேலும்...
நிகழ்வில் மாடித்தோட்டத்துக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.
தேநீர், மதிய உணவு, நோட்பேட், பேனா வழங்கப்படும்.
நேரடியாக மாடித்தோட்டத்தைப் பார்த்து பயன்பெறவும், செடிகள் வளர்க்கும் நுட்பத்தை அறிந்து கொள்ளவும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். மாடித்தோட்டம் அமைக்கலாம் வாங்க!