Published:Updated:

How to: ஆன்லைனில் சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? | How to get community certificate?

சாதிச் சான்றிதழ் / Representational Image
News
சாதிச் சான்றிதழ் / Representational Image

கல்வி, வேலைவாய்ப்பு, மேற்படிப்பு, இட ஒதுக்கீடு போன்ற தளங்களில் கோரப்படும் ஆவணங்களில் முக்கியமானது, சாதிச் சான்றிதழ் (Community certificate). அதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

Published:Updated:

How to: ஆன்லைனில் சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? | How to get community certificate?

கல்வி, வேலைவாய்ப்பு, மேற்படிப்பு, இட ஒதுக்கீடு போன்ற தளங்களில் கோரப்படும் ஆவணங்களில் முக்கியமானது, சாதிச் சான்றிதழ் (Community certificate). அதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

சாதிச் சான்றிதழ் / Representational Image
News
சாதிச் சான்றிதழ் / Representational Image

கல்வி, வேலைவாய்ப்பு, மேற்படிப்பு, இட ஒதுக்கீடு போன்ற தளங்களில் கோரப்படும் ஆவணங்களில் முக்கியமானது, சாதிச் சான்றிதழ் (Community certificate). அதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

* ஃபோட்டோ

* முகவரி சான்று

* தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களின் சாதிச் சான்றிதழ், அல்லது உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் உங்களுடைய சாதிச் சான்றிதழ். குடும்பத்தில் யாரிடமும் இல்லையென்றால், நீங்கள் இந்தப் பிரிவை சார்ந்தவர்தான் என்று உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) இருந்து கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதத்தை இணைக்க வேண்டும்

* சுயவிவர படிவம் (self declaration form)

Representational Image
Representational Image
Photo: Pixabay

ஆன்லைனில் அப்ளை செய்யும் வழிமுறைகள்:

* முதல் படியாக உங்களுடைய கணினியில் TNeGA என்ற போர்டலுக்குச் செல்லவும். அதில் Citizen login/பயனாளர் உள்நுழைவு என்பதை க்ளிக் செய்து உள்நுழையவும்.

* உள்நுழைந்ததும் login செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே register செய்திருந்தால் உங்களுடைய user name, password உள்ளீடு செய்து login செய்யவும். புதிதாக register செய்ய வேண்டுமென்றால் New user என்பதை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், user name, password ஆகியவற்றையும் உள்ளீடு கொடுத்து பதிவு செய்து கொள்ளவும். அதன்பின் login பகுதிக்கு வந்து, நீங்கள் register செய்யும்போது கொடுத்த user name, password ஆகியவற்றைக் கொடுத்தோ, உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்தோ login செய்யவும்.

* அதன் பின் உங்களுக்கான dashboard ஒன்று திரையில் காண்பிக்கப்படும். இதில் முதலில் department என்ற தேர்வு இருக்கும். அதில் Revenue Department-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

* தொடர்ந்து அதில் REV 101- community certificate என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பின், நீங்கள் அப்ளை செய்வதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். படித்துப் பார்த்த பின் proceed என்பதை க்ளிக் செய்யவும்.

* இந்த இடத்தில் உங்களுடைய CAN (The Common Account Number) நம்பரை register செய்யவும். உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் register செய்யவும். ஒருவேளை உங்களுக்கு உங்களுடைய CAN நம்பர் தெரியவில்லை எனில், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதனை உள்ளீடு செய்துவிட்டு search என்ற பகுதியை க்ளிக் செய்தால், உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதனை கிளிக் செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். அதன் பின் உங்களுடைய எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை கொடுத்துவிட்டு, proceed என்பதை க்ளிக் செய்யவும்.

சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பம்
சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பம்

* CAN நம்பர் பதிவு செய்திருப்பதால், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தானாக நிரப்பப்பட்டுவிடும். இருந்தாலும் அவற்றை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். அதன்பின் உங்களுடைய தாய் மற்றும் தந்தையின் community மற்றும் caste விவரங்களை நிரப்பவும். இதனை அவர்களது சாதிச் சான்றிதழின்படி கவனமாக நிரப்பவும்.

* submit கொடுத்த பின் ஆவணங்களை தரவேற்றம் செய்யச்சொல்லிக் கேட்கும். ஒவ்வோர் ஆவணத்தையும் அடுத்தடுத்து upload செய்யவும் (உள்ளீடு செய்வதற்கான சரியான அளவுகளில் முன்னரே அவற்றை தயாராக வைத்திருந்தால் சுலபமாக இருக்கும்).

அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின், அந்தப் பக்கத்தில் இருக்கும் self declaration form-ஐ அப்படியே download செய்து, ப்ரின்ட் எடுத்து, உங்களுடைய கையொப்பம் இட்டு, மீண்டும் soft copyயாக upload செய்யவும். அல்லது, self declaration form-ஐ download செய்து, கணினியில் இருக்கும் adobe reader-ஐ பயன்படுத்தி கணினிலேயே கையொப்பம் இட்டு upload செய்யவும்.

- அனைத்தையும் upload செய்த பின், make payment என்பதை க்ளிக் செய்து, terms and conditions என்பதை க்ளிக் செய்த பின் make payment கொடுக்கவும். உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதைத் தேர்வு செய்து, ரூ. 60 செலுத்தவும். பின் உங்களுக்கு ஒரு acknowledgement slip கொடுக்கப்படும்.

இவ்வாறு எல்லாம் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பின் உங்களுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்கள் அலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதன் பின் இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று சரிபார்க்கப்பட்டு, 10 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

ST வகுப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தால், வட்டாட்சியருக்கு அடுத்து வருவாய் கோட்டாட்சியரிடம் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னரே கிடைக்கும். இதனால் 30 நாள்களுக்குப் பின்னரே கிடைக்கப்பெறும்.

அப்ளை செய்தபோது உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் acknowledgement slip-ல் உள்ள எண்ணை வைத்து, சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறையில் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய சாதிச் சான்றிதழை அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது, தேவைப்படும் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று அவர்களின் உதவி பெற்று விண்ணப்பிக்கலாம். பின்னர் 10 நாள்கள் கழித்து, அங்கு கொடுக்கப்பட்ட acknowledgement ஸ்லிப்பை எடுத்துச் சென்று சாதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.