Published:Updated:

How to: பழ ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of fruit flies?

Fruit flies (Representational Image)
News
Fruit flies (Representational Image) ( Photo by Abhijit on Unsplash )

பழ ஈக்களை அழிப்பதற்கு முதல்படி, அவை உற்பத்தியாகும் இடங்களை கவனித்து நடவடிக்கை எடுப்பது. அந்த இடத்தில் உள்ள உணவுப் பொருளை அகற்றுவதுடன், அங்கு ஏதாவது ஒரு கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.

Published:Updated:

How to: பழ ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of fruit flies?

பழ ஈக்களை அழிப்பதற்கு முதல்படி, அவை உற்பத்தியாகும் இடங்களை கவனித்து நடவடிக்கை எடுப்பது. அந்த இடத்தில் உள்ள உணவுப் பொருளை அகற்றுவதுடன், அங்கு ஏதாவது ஒரு கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.

Fruit flies (Representational Image)
News
Fruit flies (Representational Image) ( Photo by Abhijit on Unsplash )

வீட்டில் இருக்கும் பெரிய பிரச்னைகளை விட, நம் சமையலறையில், டைனிங் டேபிளில் என மொய்த்துக்கொண்டிருக்கும் பழ ஈ (Fruit flies) என்னும் சிறிய பிரச்னைக்குத்தான் நம்மிடம் தீர்வு இருக்காது. சமையலறை, வீட்டின் மூலைகள், சாப்பிடும் பொருள்கள் வைக்கும் இடங்கள் என இந்த பழ ஈக்கள் பறந்து கொண்டே இருப்பதும், அதனை விரட்ட நாம் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே தீர்வாக இருப்பது பல வீடுகளிலும் வழக்கம். பழ ஈக்களை எப்படி சுலபமான முறையில் நிரந்தரமாக வீட்டிலிருந்து விரட்டலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Fruit flies (Representational Image)
Fruit flies (Representational Image)
Photo by Polina Kovaleva from Pexels

* எங்கிருந்து வருகின்றன?

பழ ஈக்களை அழிப்பதற்கு முதல்படி, அவை உற்பத்தியாகும் இடங்களை கவனித்து நடவடிக்கை எடுப்பது. அந்த இடத்தில் உள்ள உணவுப் பொருளை அகற்றுவதுடன், அங்கு ஏதாவது ஒரு கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்தவும். அவற்றின் `வீடு' எது என்பதை கண்டறிந்து அழித்தாலே, அவற்றின் பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

* கிச்சன் சிங்க்

ஈரப்பதமான இடங்கள் பழ ஈக்கள் வசிக்கவும், பெருக்கம் செய்யவும் ஏற்ற இடங்கள் என்பதால், சிங்கை சுற்றி அசுத்தமாக இருந்தால் அங்கு ஈக்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். எனவே சுத்தமாகப் பரமாரிக்கவும்.

* ஆப்பிள் சிடார் வினிகர்


ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு ப்ளாஸ்டிக் கப்பில் சிறிதளவு ஊற்றவும். பின்னர் அதனை ஒரு ப்ளாஸ்டிக் கவர் கொண்டு மூடவும். அந்த கவரில், ஈக்கள் உள்ளே நுழையும் அளவிற்கு சிறு சிறு துளைகள் இடவும். வினிகர் வாசனையால் ஈர்க்கப்படும் ஈக்கள் ப்ளாஸ்டிக் கவருக்குள் சென்று மாட்டிக்கொள்ளும், வெளியே வரமுடியாது. இதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

Vinegar (Representational Image)
Vinegar (Representational Image)
Pixabay

* சோப் மற்றும் வினிகர்

ஒரு சிறிய பாத்திரத்தில் வினிகருடன், இரண்டு சொட்டு சோப்பு நீரை கலந்து வைத்தால் போதும், எங்கிருந்தாலும் பழ ஈக்கள் இந்தக் கலவையால் ஈர்க்கப்பட்டு வந்து விழுந்துவிடும். ரொம்பவே எளிதான இந்தக் கலவையை பயன்படுத்தி பழ ஈக்களை விரட்டலாம்.

* ஒயின் மற்றும் பீர் பாட்டில்கள்

வினிகர், சோப்பின் வாசம் போல ஒயின் மற்றும் பீரின் வாசமும் பழ ஈக்களை ஈர்க்கும் என்பதால், பாட்டிலில் சிறிது ஒயின்/பீர் இருக்குமாறு வைத்து விட்டால் பழ ஈக்கள் அதில் விழுந்துவிடும். பாட்டிலின் வாய்ப்பகுதி குறுகியதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைப்பிடிக்க வேண்டியவை...

மேற்சொன்ன முறைகளைப் பின்பற்றினால் ஓரளவிற்கு பழ ஈக்களின் எண்ணிக்கை குறையும். ஆனால் இவற்றை வராமல் தடுப்பதே முக்கியமான விஷயம். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்...

* அதிகம் பழுத்த பழங்கள், காய்கறிகளை மூடாமல் வைப்பதைத் தவிர்க்கவும்.

* பழம் முதல் சாப்பாடு வரை அழுகிய நிலையில் உள்ள உணவுப் பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும். டைனிங் டேபிள், சிங்க் என அவற்றை திறந்தபடி வைத்திருந்தால் பழ ஈக்கள் பெருகவே செய்யும்.

* குப்பைத் தொட்டியை அன்றன்றைக்கு அப்புறப்படுத்தி விடவும். மேலும், அவ்வப்போது கழுவி சுத்தமாகப் பராமரிக்கவும்.

பழங்கள் | Fruits
பழங்கள் | Fruits
Image by silviarita from Pixabay

* பழச்சாறு, ஆல்கஹால் போன்றவை வைக்கப்பட்ட இடத்தை உடனே சுத்தம் செய்யவும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

* வெளியில் இருந்து வீட்டிற்கு வாங்கி வரும் பழம், காய்கறிகளில் பழ ஈக்களின் முட்டைகள் அல்லது லார்வாக்கள் இருக்கும் என்பதாலும், அவற்றை நன்றாகக் கழுவி, சுத்தப்படுத்தியே பயன்படுத்த வேண்டும்.