Published:Updated:

டூவீலர் காப்பீடு காலாவதி தேதியை அறிவது எப்படி? | How To Know The Expiry Date Of Vehicle Insurance?

காப்பீடு
News
காப்பீடு

பலருக்கு, தங்களுடைய வாகனக் காப்பீடு எப்போது முடியும், தன் காலாவதி தேதி என்ன போன்ற விவரங்கள் சரியாகத் தெரிவதில்லை. மிக எளிய முறையில் வாகனக் காப்பீட்டின் காலாவதி தேதியை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்...

Published:Updated:

டூவீலர் காப்பீடு காலாவதி தேதியை அறிவது எப்படி? | How To Know The Expiry Date Of Vehicle Insurance?

பலருக்கு, தங்களுடைய வாகனக் காப்பீடு எப்போது முடியும், தன் காலாவதி தேதி என்ன போன்ற விவரங்கள் சரியாகத் தெரிவதில்லை. மிக எளிய முறையில் வாகனக் காப்பீட்டின் காலாவதி தேதியை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்...

காப்பீடு
News
காப்பீடு

இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் அவசியம் செய்திருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று, அதற்கு காப்பீடு எடுத்திருப்பது. இவ்வாறு காப்பீடு செய்வதால், வாகனங்களுக்கு ஏற்படும் சேதாரங்களுக்கு இழப்பீடு பெற முடியும். மூன்றாம் நபர் (Third Party) காப்பீடு வைத்திருக்கும் பலருக்கு, தங்களுடைய வாகனக் காப்பீடு எப்போது முடியும், அதன் காலாவதி தேதி என்ன போன்ற விவரங்கள் சரியாகத் தெரிவதில்லை. மிக எளிய முறையில் வாகனக் காப்பீட்டின் காலாவதி தேதியை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்...

Insurance
Insurance

1. காப்பீட்டு தகவல் பணியகம் (IIB- Insurance Information Bureau):

* உங்கள் வாகனத்துக்கான இன்ஷூரன்ஸ் விவரங்களை, இந்த வெப்சைட்டில் அறிந்துகொள்ளலாம். அதற்கு முதலில் நீங்கள் காப்பீட்டுத் தகவல் பணியகத்தின் (IIB) அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.

* அங்கு சென்றதும் Quick lines என்ற பகுதி இருக்கும். அதை க்ளிக் செய்தால் V- Seva என்ற பகுதி வரும். அதைத் தேர்வு செய்தால், ஒரு form காட்டப்படும்.

* Form-ஐ முழுவதும் நிரப்பிய பின், அதன் கீழே இருக்கும் Captcha பகுதியை சரியாக நிரப்பி சமர்ப்பிக்கவும்.

* `சமர்ப்பி’ என்ற பகுதியை க்ளிக் செய்தால், வாகனத்தின் இன்ஷூரன்ஸ் குறித்த முழுத்தகவலும் காட்டப்படும்.

* இதில் ஏப்ரல் 2020-க்கு முன்பிருந்த இனக்‌ஷூரன்ஸ் குறித்த தகவல்கள் இருக்காது.

Insurance
Insurance

2. VAHAN போர்டல்:

* சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் VAHAN போர்டல் மூலமாக வாகனக் காப்பீடு தொடர்பான விவரங்களை அறியலாம்.

* முதலில் VAHAN வெப்சைட்டை திறந்து கொள்ளவும். முகப்பு பக்கத்தில் Know your details பகுதியை க்ளிக் செய்யவும்.

* பின்னர் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய வாகனத்தின் விவரங்கள், வாகனப்பதிவு எண் மற்றும் உங்களுடைய எண்ணுக்கு அனுப்பப்படும் verification code-ஐ உள்ளீடு செய்யவும்.

* தொடர்ந்து, Search Vehicle என்ற பகுதியை க்ளிக் செய்தால் உங்கள் வாகனத்தின் அனைத்து விவரங்களும் காட்டப்படும். அதில் உங்கள் காப்பீடு காலாவதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறாக உங்களது வாகனக் காப்பீடு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.