Published:Updated:

How to: வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? | How to Link Voter ID with Aadhar Card?

Aadhar
News
Aadhar

தற்போது பல மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எளிதில், வீட்டிலிருந்தபடியே நம்மால் இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் இதோ...

Published:Updated:

How to: வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? | How to Link Voter ID with Aadhar Card?

தற்போது பல மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எளிதில், வீட்டிலிருந்தபடியே நம்மால் இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் இதோ...

Aadhar
News
Aadhar

இந்திய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, அவரவர் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 என்ற சட்ட திருத்த மசோதா இயற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பல மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எளிதில் வீட்டிலிருந்தபடியே நம்மால் இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்

* முதலில் உங்கள் மொபைல் போனில், `voter helpline app’- ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

* ஆப்பை திறந்து, அதன் முன்பக்கத்தில் தோன்றும் `I Agree’ என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

* அதன்பின் திறக்கும் பக்கத்தில் `Voter Registration’ என்ற பகுதியை தேர்ந்தெடுக்கவும். அதில் `Electoral Authentication Form (Form 6B)’ என்ற பகுதியை தேர்வு செய்து க்ளிக் செய்து கொள்ளவும்.

* தொடர்ந்து `Let’s Start' என்ற தேர்வு இருக்கும். அதனை க்ளிக் செய்து கொள்ளவும். அதற்கு பின்னர் உங்களுடைய மொபைல் எண் கேட்கப்படும். இங்கு, உங்களது ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிடவும்.

* கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு, `one time password - OTP’ ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிடவும்.

* அதன் பின் `Yes, I have voter ID' என்ற பகுதியை தேர்வு செய்து கொள்ளவும். பின் NEXT என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

* இங்கு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை (EPIC) உள்ளிடவும். தொடர்ந்து, நீங்கள் வசிக்கும் மாநிலம், `fetch details' என்ற பகுதியை க்ளிக் செய்யவும். அதன்பின் `proceed' கொடுக்கவும்.

* தொடர்ந்து உங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, `Done' என்று கொடுக்கவும்.

Election commission of India
Election commission of India
Vikatan

* இதனுடன் `Process' முடிவடைந்து உங்களுடைய `FORM- 6B' காண்பிக்கப்படும். இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்து, மற்றுமொருமுறை `Confirm' என்று கொடுத்தால், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் `Process' முடிவடைந்து விடும்.

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் தேர்தலில் பலமுறை வாக்களிப்பது, ஒருவர் பல தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றவை தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.