Published:Updated:

How To: டிரைவிங் லைசன்ஸில் திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?

Online registration
News
Online registration

மிக முக்கிய ஆவணம், ஓட்டுநர் உரிமம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் பின்னர் மாறியிருந்தால், வீட்டில் இருந்தபடியே எப்படி அதை எளிதாக மாற்றுவது என்பது குறித்துப் பார்க்கலாம்.

Published:Updated:

How To: டிரைவிங் லைசன்ஸில் திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?

மிக முக்கிய ஆவணம், ஓட்டுநர் உரிமம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் பின்னர் மாறியிருந்தால், வீட்டில் இருந்தபடியே எப்படி அதை எளிதாக மாற்றுவது என்பது குறித்துப் பார்க்கலாம்.

Online registration
News
Online registration

வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தின்போது கையில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் முதன்மையானது ஓட்டுநர் உரிமம். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. அதில் செல்போன் எண் மாறியிருந்தால் அதனை எப்படி எளிதாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

How To: டிரைவிங் லைசன்ஸில்  திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?

* முதலில் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், https://parivahan.gov.in என்ற இணையதள பக்கத்தை திறந்து கொள்ளவும்.

* அதன் முகப்புப் பக்கத்தில் drivers/learners license என்ற பகுதியை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் மற்றொரு பக்கம் திறக்கும். அதன் முகப்புப் பக்கத்தில், உங்களுடைய மாநிலம் குறித்து கேட்கப்படும் இடத்தில் உங்களுடைய மாநிலத்தை குறிக்கவும்.

* தொடர்ந்து அடுத்த Page-ல் License குறித்து பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் மேற்பகுதியில் இருக்கும் Others என்ற பகுதியை கிளிக் செய்தால், அதில் Mobile Number Update என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்து கொள்ளவும்.

* க்ளிக் செய்து உள்ளே சென்ற பின், மூன்று Optionகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்று குறிப்பிட வேண்டும். பின் License Issue Date, Driving License Number, Date of Birth போன்றவற்றை, ஓட்டுநர் உரிமத்தை பார்த்து குறித்து, பின்னர் Submit கொடுக்கவும்.

* நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக இருப்பின், உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்களை திரையில் தெரியும், அதனை சரிபார்த்து, பின்னர் Proceed கொடுக்கவும்.

Parivahan website
Parivahan website

* அதன் பின் திறக்கும் திரையில், புதிய எண்ணையும், ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு Proceed என்று கொடுத்தால், உங்களுடைய மாற்றப்பட்ட எண்ணிற்கு OTP வரும். அதனை உள்ளிட்டு Verify எனக் கொடுத்தால் உங்களுடைய OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய மொபைல் எண் Update செய்யப்பட்டிருக்கும்.

வெற்றிகரமாக, எளிய முறையில் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தில், மொபைல் எண் மாற்றப்பட்டிருக்கும். ஓட்டுநர் உரிமம் மட்டும் இல்லாமல் உங்களுடைய அனைத்து ஆவணங்களிலும், உங்களுடைய தற்போதைய மொபைல்போன் எண்ணை அப்டேட் செய்துகொள்ளுதல் நல்லது.