லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம்... ஃபேஸ் மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஸ் மாஸ்க்

வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்ய கற்றுத்தருகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த குடும்ப நிர்வாகி ராணி.

வீட்டிலேயே செய்யலாம்... ஃபேஸ் மாஸ்க்

கொரோனா வைரஸ் பாதுகாப்புக்காக அணியும் முகமூடிகள் பல இடங்களில் பற்றாக்குறையாக உள்ளன. கிடைக்கும் இடங்களில்கூட வழக்கமான விலையைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள். இந்தச் சூழலைச் சமாளிக்க வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்ய கற்றுத்தருகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த குடும்ப நிர்வாகி ராணி.

தேவையானவை

  • காட்டன் துணி - கால் மீட்டர்

  • ஃபேப்ரிக் க்ளூ

  • கத்தரிக்கோல்

  • ஸ்கேல்

  • பென்சில்.

வீட்டிலேயே செய்யலாம்... ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 1

மாஸ்க்கின் மூக்கு மற்றும் வாய் பகுதிக்கு 12 செ.மீ நீளம், 8 செ.மீ அகலம் என காட்டன் துணியில் பென்சிலால் குறித்துக் கொள்ளவும். காதுப் பகுதியில் வரும் வளையம் போன்ற பகுதி தயார் செய்ய 12 செ.மீ நீளம், 4 செ.மீ அகலத்தில் தனியாக இரண்டு இடத்தில் குறித்துக்கொள்ளவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 2

காட்டன் துணியில் பென்சிலால் குறித்துள்ள இடத்தைத் தனியே கத்தரித்து எடுத்துக்கொள்ளவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 3

மூக்கு மற்றும் வாய் பகுதிகளுக்கு எனக் கத்தரித்து எடுத்துள்ள பகுதி யைப் படத்தில் காட்டியுள்ளபடி கீழிலிருந்து மேலாக ஃப்ரில் போன்று மடிக்கவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 4

ஒவ்வொரு மடிப்பிலும் பசை தடவி, அதற்கு மேல் பகுதியுள்ள துணியுடன் சேர்த்து ஒட்டி சில நிமிடங்கள் உலரவிடவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 5

மாஸ்க்கின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் இருந்து நூல் பிரிந்து வராமல் இருக்க, துணியைப் பின்புறமாக மடித்து ஒட்டிக்கொள்ளவும். மாஸ்க்கின் பேஸ் தயார்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 6

காது பகுதிகளுக்கென வெட்டி யிருக்கும் துணியைப் பக்கவாட்டில் இரண்டாக மடித்து, மாஸ்கின் பேஸை நடுவில்வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு புறமும் ஒட்டிக்கொள்ளவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 7

மாஸ்க்கின் பேஸூடன் ஓட்டப்பட்டுள்ள காதுப் பகுதியின் நீளமான பகுதியைக் கீழிருந்து மேலாக வளையம் போன்று மடித்து மாஸ்க்கின் பேஸுடன் ஓட்டவும். காதுகளில் மாட்ட துணி வேண்டாம் என நினைப்பவர்கள் ரப்பர் பேண்ட் அல்லது எலாஸ்டிக் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

ஸ்டெப் - 8

10 நிமிடங்கள் உலரவைத்து பயன்படுத்துங்கள். இது பெரியவர் களுக்கான அளவு. சிறிய குழந்தைகள் எனில் 6 செ.மீ நீளம், 4 செ.மீ அளவுள்ள காட்டன் துணியில் செய்யலாம்.

இப்போது எல்லா இடங்களிலும் வைரஸ்ஸின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் காட்டன் துணியை வெந்நீரில் நனைத்துப் பயன்படுத்துவது நல்லது.

பாதுகாப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து மீண்டெழுவோம்.