Published:Updated:

How to: வீட்டை நறுமணமாக வைத்துக்கொள்வது எப்படி? How to make home smell good?

Home
News
Home

நறுமணத்துக்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்வது வீட்டில் நிம்மதியான சூழல் தவழ வழிவகுக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நறுமணம் என்றதும், ரூம் ஸ்பிரேதான் என்பது இல்லை.

Published:Updated:

How to: வீட்டை நறுமணமாக வைத்துக்கொள்வது எப்படி? How to make home smell good?

நறுமணத்துக்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்வது வீட்டில் நிம்மதியான சூழல் தவழ வழிவகுக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நறுமணம் என்றதும், ரூம் ஸ்பிரேதான் என்பது இல்லை.

Home
News
Home

நறுமணத்துக்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதன் அடிப்படையில், வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்வது வீட்டில் நிம்மதியான சூழல் தவழ வழிவகுக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நறுமணம் என்றதும், ரூம் ஸ்பிரேதான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. எளிய முறையில், வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருள்களைக் கொண்டே வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள முடியும். அதற்கான சில டிப்ஸ் இங்கே...

ஆரஞ்சு
ஆரஞ்சு

ஆரஞ்சு மற்றும் பட்டை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதியளவு நீரை ஊற்றவும். அதில் சில துண்டுகள் பட்டை மற்றும் இரண்டு ஆரஞ்சு பழத்தின் தோல்களைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அடுப்பை அணைக்கவும். அந்த நீரை திறந்தவாறு சமையல் அறையிலோ ஹாலிலோ வைத்துவிட்டால் சில மணி நேரத்துக்கு அந்த மணம் அறை முழுவதும் பரவி தவழ்ந்துகொண்டிருக்கும்.

எசன்ஷியல் எண்ணெய் (Essential oil) ஸ்பிரே

ஒரு கப் தண்ணீரில் சில துளிகள் எசன்ஷியல் ஆயிலை (பாதாம் எண்ணெய், ரோஜா எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் போன்றவை) கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, நன்றாகக் குலுக்கிவிட்டு அறையில் ஸ்பிரே செய்தால் அறை முழுவதும் மணமாக இருக்கும். இதை மெத்தை விரிப்பு, தலையணை மற்றும் மேசையின் மீதும்கூட தெளிக்கலாம்.

essential oil
essential oil
pixabay.com

காட்டன் உருண்டைகள்

பஞ்சை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இந்த உருண்டையை எசன்ஷியல் ஆயில் அல்லது வாசனை திரவியங்களில் நனைத்து அதை டிஷ்யூ கொண்டு சுற்றவும். இந்த பஞ்சு உருண்டையை வீட்டில் உள்ள அறைகளின் மூலைகளில் வைக்கவும். வீடு முழுவதும் நறுமணத்துடன் இருக்கும். தேவைப்பட்டால் கழிவறைகளிலும் பயன்படுத்தலாம்.

தரை விரிப்புகள்

வீட்டில் நாம் பயன்படுத்தும் தரைவிரிப்புகளில் சுகாதாரம் பேணாவிட்டால்கூட அசௌகர்யமான துர்நாற்றம் ஏற்படும். அதனால் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தரைவிரிப்பை அலசி சுத்தம் செய்ய வேண்டும். அலசும்போது, போராக்ஸ், பேக்கிங் சோடா கலந்த கரைசலில் சில துளிகள் எசன்ஷியல் ஆயில்கள் சேர்த்து, அந்தத் தண்ணீரில் இறுதியாகத் தரைவிரிப்பை அலசி எடுத்தால் சுத்தமாவதுடன் நறுமணத்துடனும் இருக்கும்.

பூக்கள்!
பூக்கள்!

பூக்கள்

வீட்டுக்குள், பூஜாடியில் தண்ணீர் நிரப்பி அதில் நறுமணமிக்க பூக்களை தினமும் ஃபிரெஷ்ஷாக வைக்கலாம். பூக்களைப் பார்க்கும்போது மன அமைதியும், கூடவே நறுமணமும் தரும். மேலும், வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய பூச்செடிகளையும் வளர்க்கலாம்.

காபி கொட்டைகள்

சில காபி கொட்டைகளை எடுத்து வறுக்கவும். அல்லது அவனில் 400 டிகிரியில் 7 முதல் 10 நிமிடங்கள் வைத்திருந்து, காபி கொட்டை வைத்திருந்த பாத்திரத்தை வெளியில் எடுத்துத் திறந்து வைக்கவும். காபி கொட்டையின் நறுமணம் அறை முழுவதும் பரவ ஆரம்பிக்கும். நீங்கள் காபி பிரியர்கள் என்றால்... அந்தச் சூழல் மிகப்பிடித்துப் போகும்.

காபி
காபி
pixabay

நறுமண மெழுகுவத்தி

தற்போது கடைகளில் விருப்பத்துக்கேற்ற நறுமணங்களுடன் கூடிய மெழுகுவத்திகள் கிடைக்கின்றன. அதை ஏற்றி வைத்தால் வீடு நறுமணத்துடன் இருக்கும்.