Published:Updated:

How to: வீட்டில் மின்சார பயன்பாட்டை குறைப்பது எப்படி? I How to save electricity at home?

Electricity savings
News
Electricity savings

மின்சார பயன்பாட்டை அறிவதற்கான பல ஸ்மார்ட் சாதனங்கள் கிடைக்கின்றன. அவற்றை வீட்டில் பொருத்துவதன் மூலம், எந்தெந்த மின்சாதனங்கள் அதிக அளவிலான மின்சாரத்தை எரிக்கின்றன, எந்தெந்த மின்சாதனப் பொருள்கள் தேவையில்லாமல் இயங்குகின்றன என்பதை அறிய முடியும்.

Published:Updated:

How to: வீட்டில் மின்சார பயன்பாட்டை குறைப்பது எப்படி? I How to save electricity at home?

மின்சார பயன்பாட்டை அறிவதற்கான பல ஸ்மார்ட் சாதனங்கள் கிடைக்கின்றன. அவற்றை வீட்டில் பொருத்துவதன் மூலம், எந்தெந்த மின்சாதனங்கள் அதிக அளவிலான மின்சாரத்தை எரிக்கின்றன, எந்தெந்த மின்சாதனப் பொருள்கள் தேவையில்லாமல் இயங்குகின்றன என்பதை அறிய முடியும்.

Electricity savings
News
Electricity savings

நம் வாழ்வில் நாம் சேமிக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட நமக்குப் பெரிய அளவில் உதவும். பணம், நகை மட்டுமே சேமிப்புக் கானவை அல்ல. நீர், மின்சாரம் போன்றவற்றின் சேமிப்பும் மிக முக்கியம். குறிப்பாக, மின்சார சேமிப்பு நம் எலக்ட்ரிசிட்டி பில்லை கணிசமாகக் குறைத்துக் கொடுக்கும். அதற்கான வழிமுறைகள் இங்கே.

Electrical Appliances (Representational Image)
Electrical Appliances (Representational Image)
Photo by Mukund Nair on Unsplash

மின்சார சேமிப்பின் முதல் நடவடிக்கை, தேவையான நேரத்தில், இடத்தில் மட்டுமே அதைப் பயன்படுத்துவதுதான். வீட்டில், ஆளில்லா அறைகளிலும் ஃபேன், லைட் ஆனில் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஓர் அறையை விட்டு வெளியேறும்போது, அங்குள்ள மின் சாதனங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வதை வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கிப் பின்பற்றவும்.

வழக்கமான பல்புகளை விட LED, CFL வகையிலான மின்விளக்குகளை உபயோகிக்கலாம். இவை, மற்ற பல்புகளுக்கு செலவாகும் மின்சாரத்தை விட 3% - 25% வரை குறைவாக மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்.

LED BULB
LED BULB

தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை சரிசெய்து சீராக வைக்கப்பயன்படுத்தும் பொறியமைப்பான தெர்மோஸ்டாட்டை (Thermostat) வீட்டில் பொருத்தலாம்.

'ENERGY STAR' சான்றளிக்கப்பட்ட மின்சாதனப் பொருள்களை வாங்கும்போது, பல மடங்கு மின்சார செலவைக் குறைக்கலாம். குறிப்பாக, 'ENERGY STAR' சான்றளிக்கப்பட்ட வாஷிங் மெஷின்கள் வழக்கமானவற்றைவிட 25% குறைவான ஆற்றலையும், 45% குறைவான தண்ணீரையும் பயன்படுத்துகின்றன. அதேபோல 'ENERGY STAR' சான்றளிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்கள் 9% குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

Solar Energy
Solar Energy
Pixabay

வீட்டின் காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்துக்கு மின்சாதனங்களை மட்டுமே நம்பியிராமல் ஜன்னல்கள், கதவுகள் என வென்டிலேஷனுடன் வீட்டைக் கட்ட வேண்டும். வீட்டின் மின்தேவைக்கு சோலார் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது முக்கியமான பரிந்துரை.

மின்சார பயன்பாட்டை அறிவதற்கான பல ஸ்மார்ட் சாதனங்கள் கிடைக்கின்றன. அவற்றை வீட்டில் பொருத்துவதன் மூலம், எந்தெந்த மின்சாதனம் அதிக அளவிலான மின்சாரத்தை எரிக்கிறது, எந்தெந்த மின்சாதனப் பொருள்கள் தேவை யில்லாமல் இயங்குகின்றன என்பதை அறிய முடியும். அதன் அடிப்படையில் மின்சாரப் பயன்பாட்டை சரிசெய்து கொள்ளலாம்.

Electricity saving (Representational image)
Electricity saving (Representational image)

இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர்கள் என அழைக்கப்படும் டேங்க்லெஸ் வாட்டர் ஹீட்டர்கள் (Tankless water heaters), தேவையான அளவு வெந்நீரை மட்டுமே வழங்கும். இதில் சேமிப்புத் தொட்டியின் தேவையில்லாமல், தண்ணீர் நேரடியாகச் சூடாக்கப்பட்டு மின் ஆற்றல் சேமிக்கப்படும்.