Published:Updated:

வேறு நபருடன் நிச்சயதார்த்தம்; ஆவேசத்தில் பெண், அவரின் தாயைக் கத்தியால் குத்தியவர் கைது!

க்ரைம்
News
க்ரைம்

திடீரென வைபவி மற்றும் அவரின் தாயாரை கத்தியால் குத்திவிட்டு, சந்தீப்பும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Published:Updated:

வேறு நபருடன் நிச்சயதார்த்தம்; ஆவேசத்தில் பெண், அவரின் தாயைக் கத்தியால் குத்தியவர் கைது!

திடீரென வைபவி மற்றும் அவரின் தாயாரை கத்தியால் குத்திவிட்டு, சந்தீப்பும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

க்ரைம்
News
க்ரைம்

ஹைதராபாத்தில், தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் ஆவேசமைடைந்த நபர், அந்தப் பெண்ணையும் அவரின் தாயையும் கத்தியால் தாக்கிவிட்டு, தானும் குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபல்லே நகரை சேர்ந்தவர், சந்தீப். இவருக்கும் மியாபூர் ஆதியா நகரை சேர்ந்த வைபவி என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பின்னர், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, இருவரும் பிரிந்துள்ளனர். இதனிடையே, வைபவிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்; அந்த இடம் பிடித்துப் போகவே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட சந்தீப், ஆவேசமடைந்துள்ளார்.

தாக்குதல்
தாக்குதல்
மாதிரிப்படம்

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 13), மியாபூர் ஆதித்யா நகரில் வசித்து வரும் வைபவி மற்றும் அவரின் தாயாரை சந்தித்த சந்தீப், நிச்சயதார்த்தம் நடந்தது பற்றிக் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென வைபவி மற்றும் அவரின் தாயாரை கத்தியால் குத்திவிட்டு, சந்தீப்பும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வைபவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்ட தாகவும், ​அவரின் தாய் மற்றும் சந்தீப்பின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மியாபூர் காவல்துறை துணை ஆணையர் ஷில்பவல்லி தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் கூறுகையில், ``வேறு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து வைபவியின் தாயிடம் சந்தீப் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆவேசத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது குறுக்கிட்ட வைபவியையும் அவர் தாக்கி இருக்கிறார். பின்னர் தன் கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவியின் வீட்டில் நடந்தது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றனர்.

குற்றம்
குற்றம்

கடந்த டிசம்பர் 5-ம் தேதி, விஜயவாடாவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி தபஸ்வி என்பவர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததற்காக, முன்னாள் காதலன் ஞானேஸ்வர் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.