என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

தேவையான உயரத்தில் ஓர் ஏணியை வாங்கி வையுங்கள் முதலில்.

ஸ்க்ரூ டிரைவருக்குப் பதில் கத்தியைப் பயன்படுத்துவது போல எல்லாவற்றுக்கும் சப்ஸ்டிட்யூட் பயன்படுத்து வதிலும் நாம் கில்லாடிகள். அந்த லிஸ்ட்டில் முக்கியமான ஒன்று ஏணி. இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதாலே பல வீடுகளில் ஏணியே இருக்காது. ஆனால், உயரமான இடங்களில் பொருள்களை அடைத்து வைத்திருப்போம். அது தேவை என்னும்போது இரண்டு சேர்களை ஒன்றன் மீது ஒன்றை வைத்து ஏறி எடுப்போம். அப்புறம்? கீழே விழுவோம். தேவையான உயரத்தில் ஓர் ஏணியை வாங்கி வையுங்கள் முதலில்.

டிரெட் மில் போலவே, பல வீட்டு கிச்சன்களில் சும்மாவே கிடக்கும் ஒன்று சிம்னி. சரியாக, நாம் சமைக்கும் பாத்திரத்துக்கு நேராக மேலே இருக்கும் சிம்னி நிச்சயம் கூடுதல் கவனம் கோரும் ஒன்று. பயன்படுத்தாமல் விடுவதால் அதிலிருந்து தூசியோ, உள்ளிருக்கும் பூச்சிகளோ சமைக்கும் பொருளில் நமக்கே தெரியாமல் விழும் ஆபத்துண்டு... கவனம்.

மின்சாரக் கருவிகள்தான் கிச்சனின் மிகப்பெரிய ஆபத்து. மிக்ஸியின் ஒயர் எரிந்து கிடப்பது, சிலிண்டர் டியூப் கட் ஆகியிருப்பது, ஆர்.ஓ. யூனிட்டின் பவர் பாயின்ட் அருகே தண்ணீர் சொட்டுவது போல எந்தப் பிரச்னை என்றாலும் போர்க்கால அடிப்படையில் சரி செய்யுங்கள். மின் கசிவோ, காஸ் கசிவோ... சின்ன சந்தேகம் என்றாலும் உடனே சிலிண்டரை மூடுங்கள்; மெயின் பவரை ஆஃப் செய்யுங்கள்.