
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் இப்படியொரு இயல்பில்தான் தொடங்கியது. முந்தைய நாள் நள்ளிரவில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நினைவில் எஞ்சி நின்றன. காலை எட்டு ஐம்பதுக்கு விடுமுறை நாளின் சோம்பல் முறித்து எழுந்தபோது தொலைபேசி அழைத்தது. பேசியது சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர். “கடல் நீர் நகருக்குள் புகுந்துவிட்டது.” அந்தச் சூழலில் அவரின் வார்த்தைகள் நிலைமையின் தீவிரத்தை எனக்கு உணர்த்தவில்லை. ஆயினும், இதுவரை காணாத ஏதோவொரு விபரீதம் நிகழ்ந்தி ருக்கிறது என்பது உறைத்தது. அடுத்த பத்தாவது நிமிடம் ரிப்பன் மாளிகை நோக்கி விரைகிறேன். வழியெங்கும் வயர்லெஸ் சாதனம் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையின் சில கடலோரப் பகுதிகளில் பாதிப்பு என முதல் தகவல். பின்னர் கடல் அலைகள் மேலெழும்பி, சிலர் அடித்துச் செல்லப்பட்டனர் எனச் செய்திகள் விரிகின்றன. நேரம் செல்லச்செல்ல ஊகிக்க முடிந்தது. அது ‘ஆழிப்பேரலை.’
விடுமுறையில் இருந்த அலுவலர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. சில மணி நேரத்தில் சென்னை நகரின் பாதிப்பு பிடிபட ஆரம்பித்தது. ஆனால் தமிழ்நாடு எதிர்கொண்ட மொத்த பாதிப்புகளும் தெரியவர, சில நாள்கள் ஆயின.
அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்று, திரும்பாத முதியவர்கள்; முந்தைய நாள் கொண்டாட்ட மலர்ச்சியோடு உறைந்துபோன குழந்தைகள்; பெற்றோரை இழந்து தெரிந்த முகம்தேடி அலையும் சிறுவர்கள்; முற்றிலும் சிதைந்துபோன மீனவ கிராமங்கள்; கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்து, கண்ணீர் வற்றி, கடலம்மாவை இறைஞ்சி நிற்கும் பெண்கள் என ஆழிப் பேரலை ஏற்படுத்திய கண்ணீர்ச்சுவடுகள் காலத்தால் அழியாதவை.
இயற்கைப் பேரழிவுகளும், செயற்கைத் தாக்குதல்களும் வரலாறெங்கும் தொடர்ந்து நிகழத்தான் செய்கின்றன. எனினும் அழிவின் கோரக்கரங்கள், தனித்து இயங்கும் இனக்குழுக்களை நோக்கியே அடிக்கடி நீள்கின்றன. கடற்கோள், ஆழிப்பேரலை என இயற்கை நீர்கொண்டு நிகழ்த்திய பேரழிவுகள் தமிழர் மனதில் என்றென்றும் உறைந்து போயின. அதுவே நீராடல், ஆடிப்பெருக்கு நீராட்டு என நீரை வணங்கும் வகையில் தமிழரின் வழிபாடாக வடிவம் பெற்றது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதன் முழுப்பொருளையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு, பஞ்சத்தின் மூலமே அறிந்துகொண்டது. ஆம்... 1876-ல் சென்னை மாகாணத்தைத் தாக்கிய தாது வருடப் பஞ்சம் குறித்த செய்திகளை இன்று படித்தாலும் மனம் பதறுகிறது. விக்டோரியா மகாராணியாரின் நேரடி நிர்வாகத்துக்குக் கீழ் வந்தபின் இந்தியாவில் ரயில்வே, தகவல் தொடர்பு என பிரிட்டிஷ் அரசுக்கு பலன் கொடுக்கும் பணிகள் துரிதமாகத் தொடர்ந்தன. ஆனால் நீர்நிலைகளோ பராமரிப்பின்றி வறண்டு கிடந்தன. கூடவே பருவமழையும் பொய்த்துப் போனது. வறட்சி தலைவிரித்தாடியது. வரிகட்ட முடியாத மக்களின் ஆடுமாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விதைநெல்லை விற்றுக் கொண்டிருந்த குடியான வர்கள் ஒருபுறம். அப்போதும் உணவுதானிய ஏற்றுமதியைத் தொடர்ந்த நிர்வாகத்தின் குரூரமுகம் மறுபுறம்.
திரும்பிய பக்கமெங்கும் பஞ்சம், பட்டினி, மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்து கொண்டிருந்தனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய வைசிராய் லிட்டன், டெல்லியில் இந்திய சமஸ்தானத்து அரசர்கள், ஜமீன்தார்கள் புடைசூழ, தர்பார் நடத்திக் கொண்டிருந்தார். அதேநேரம், சென்னை மாகாணமோ கடும் கொந்தளிப்பில் இருந்தது. உணவு தானியத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வணிகர்கள் பதுக்கலில் ஈடுபட்டனர். விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதற்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தனர். சென்னை, திருநெல்வேலிகளில் தானியக் கலவரங்கள் பரவின. பஞ்ச காலத்தின் முதல் பலி, மனித நேயம்தான். பெற்ற குழந்தைகளை விற்கத் துணிந்த தகப்பன், கரம்பிடித்த மனைவியை அடமானம் வைத்த கணவன், கைவிடப்பட்ட முதியவர்கள், நோயாளிகள் என மனித உறவுகள் நிறம் மாறி உதிர்ந்துபோன அவலமும் நடந்தேறியது.
அரசு ஆவணங்கள் அனைத்தும், நிர்வாகத்தினர் பஞ்ச நிவாரணப் பணிக்குச் செலவுசெய்து பக்கிங்காம் கால்வாய் வெட்டியதை சிக்கனத் துடன் பதிவு செய்துகொண்டன. ஆனால், பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் அவலம் தாது வருட பஞ்சக் கும்மிப் பாடல்களில் இன்றும் காணக்கிடைக்கிறது. எறும்புப் புற்றுகளில் இருந்து தானியம் தேடி எடுத்து உண்ட மக்கள் சில சமயம் விவரம் தெரியாமல் விஷக் கிழங்கு தின்று உயிர்விட்டதும் உண்டு.
இரண்டு வருடங்கள் பஞ்சத்தின் பிடியிலிருந்து மீளத் தொடங்கிய சென்னை மாகாணத்தைப் பருவ மழை தன் பங்குக்குப் பதம்பார்த்தது. காலரா நோய் ஏராளமான உயிர்களைக் கொள்ளை கொண்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தைத் தாண்டியது. எஞ்சிய மக்கள் பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் கூலித் தொழிலாள ராகப் பணிபுரியத் தயாரானார்கள். எந்தெந்த நாடுகளையெல்லாம் தம் முன்னோரின் வலிமைமிக்க கடற்படை வென்று வெற்றிக்கொடி நாட்டியதோ அங்கெல்லாம் அடிமையாய்ப் பணிபுரியப் புறப்பட்டனர் தமிழர்கள்.
வரலாற்றின் வஞ்சம் அதோடு நிற்கவில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் படுகுழியில் வீழ்ந்த சம்பவங்களும் உண்டு.

திரும்பிய பக்கமெங்கும் பஞ்சம், பட்டினி, மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்து கொண்டிருந்தனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய வைசிராய் லிட்டன், டெல்லியில் இந்திய சமஸ்தானத்து அரசர்கள், ஜமீன்தார்கள் புடைசூழ, தர்பார் நடத்திக் கொண்டிருந்தார். அதேநேரம், சென்னை மாகாணமோ கடும் கொந்தளிப்பில் இருந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது நடந்த அரசியல் சதுரங்கத்தில் கூலித் தமிழர் பகடைக் காயாக மாறிப் போனார்கள். ரப்பர் தோட்டத்தில் வறுமையுடன் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டி ருந்தவர்களைக் கவர்ந்தது அந்தப் பத்திரிகை விளம்பரம். ‘சயாம் பர்மாவில் மூன்று மாத வேலை. நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பளம். தங்குமிடம், உணவு, மருத்துவம் இலவசம். அதுமட்டுமல்ல, பர்மாவிலிருந்து இந்தியா தூரமில்லை. விரைவில் தமிழ்நாடு சென்று சேரலாம்’ என்று ஆசை காட்டியது. ரப்பர் தோட்டத்தின் அழுத்தப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முனைந்தவர்களை வரவேற்றுத் தன் படுகுழிக்குள் வீழ்த்த சயாம்-பர்மா மரண ரயில் பாதை காத்திருந்தது.
பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிட ஜப்பான் ராணுவம் முனைப்புடன் செயல்பட்ட காலம். தாய்லாந்து, பர்மாவின் காடு, மலைப் பகுதிகளைக் குடைந்து ரயில்பாதை அமைத்து ராணுவத் துருப்புகளைச் சுலபமாகக் கொண்டு சேர்க்கும் திட்டம். போர்க் கைதிகள், ரப்பர் தோட்டத் தொழிலாளர் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் வலுக்கட்டா யமாக இழுத்துச் செல்லப்பட்டனர். காலை முதல் இரவு வரை காடு மலைகளில் கடுமையான பணி. உணவுத் தட்டுப்பாடு, சுகாதாரச் சீர்கேடு, ராணுவ அதிகாரிகளின் எல்லைமீறல் எனத் துயரத்தின் அத்தனை வடிவங்களையும் எதிர்கொண்டனர் தொழிலாளர்கள். 416 கி.மீ கொண்ட ரயில் பாதை நெடுங்காலம் நீண்டது. ஆனால், இரண்டு லட்சம் பேர் மடிந்தனர். அதில் ஏராளமானவர்கள் அப்பாவித் தமிழர்கள். நாள் ஒன்றுக்கு முப்பது தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாகப் போர்க்கால நாட்குறிப்பு ஒன்று கூறுகிறது. சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் மடிந்துபோயிருக்கக்கூடும்.
இந்த மரண ரயில் பாதையின் கோரமுகம் ‘A Bridge on the river kwai’ என்னும் படமாக்கப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது. சில நூறு போர்க் கைதிகளின் துயரத்தைப் படம் பிடித்து ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற அந்தப் படம் தமிழரின் அழுகுரலை மட்டும் பதிவுசெய்யவே இல்லை.
அழிவைத் தொடர்ந்து சந்தித்து வரும் ஒரு சமூகம் மீண்டு எழுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கான முழுமையான பதில் சமீபத்தில் கிடைத்தது. சென்ற வாரம் பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் புனிதப் பயணம் மேற்கொண்டேன். நாகப்பட்டினம் நோக்கி அதிகாலையில் புறப்பட்டோம்.
416 கி.மீ கொண்ட ரயில் பாதை நெடுங்காலம் நீண்டது. ஆனால், இரண்டு லட்சம் பேர் மடிந்தனர். அதில் ஏராளமானவர்கள் அப்பாவித் தமிழர்கள். நாள் ஒன்றுக்கு முப்பது தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாகப் போர்க்கால நாட்குறிப்பு ஒன்று கூறுகிறது.

எத்தனையோ முறை முயன்றும் முடியாமல், குறைந்தது இரண்டு ஆண்டுகள் தாமதமாகிவிட்டது அந்த வேண்டுதலை நிறைவேற்ற. போகும் வழியெங்கும் திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி என அறிவிப்புப் பலகைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு நான் சென்று சேர்ந்தது நாகப்பட்டினம் நகரை ஒட்டிய சிறு கிராமம். பெயர், கீச்சான்குப்பம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதான் நான் நாடிவந்த புனிதத்தலம். தலைமை ஆசிரியர், ஊர்ப்பெரியவர்களின் வரவேற்பு, குழந்தைகளின் அணிவகுப்பு எல்லாம் முடிந்து பள்ளி வளாகத்திலுள்ள நினைவுத் தூண் அருகே அழைத்துச்சென்றார்கள். ஒரு நிமிடம் மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினோம் அனைவரும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்சுனாமியின் கோரத்தாக்குதலுக்கு இந்தப் பள்ளியில் படித்த 81 குழந்தைகள் பலியானார்கள். அந்தக் கிராமத்தில் மட்டும் 600 பேர் உயிரிழந்தார்கள். ஒன்றுக்கொன்றாக இருந்த நண்பர்கள் பலியான பிறகு அங்கே இருள் சூழத்தானே செய்யும்..?
இடிந்த பள்ளிக் கட்டடங்கள் மயான அமைதியைக் கொடுக்க, ஆசிரியர்கள் இடமாற்றம் வாங்கிச் சென்றிட, களையிழந்துபோனது அந்த வளாகம். மாணவர் எண்ணிக்கை இரண்டு இலக்கமாகக் குறுகியது. கவலை கொண்ட ஊர்ப்பெரியவர்கள் அந்தக் கல்விக்கூடத்தை மீண்டும் கட்டி எழுப்ப முடிவு செய்கிறார்கள். கிராமத் தலைவர் ராஜேந்திரன், வள்ளலார் வழியைப் பின்பற்றும் ராமச்சந்திரனுடன், புதிய தலைமை ஆசிரியர் பாலுவும் இணைகிறார். அரசு நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கிராம மக்களின் ஒத்துழைப்பு என அனைத்தும் ஒன்றுசேர அந்தப் பள்ளி தவழ்ந்து எழுகிறது.
புதிய கட்டடங்கள், ஆசிரியர் பணியிடங்கள், கணினி வசதி என ஒவ்வொன்றாய் வந்து சேர்கின்றன. பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 480-ஆக உயருகிறது. ஒருகாலத்தில் இடிபாடுகளுக்கு இடையே கைவிடப்பட்ட பள்ளி வளாகம் இன்று ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்று கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவரப் போக்கு வரத்து வசதி, குழந்தைகளை வசீகரிக்கும் சீருடை, அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள். ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் தொடங்கும் முதல் நாள் ஊரே திரண்டுவந்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீராகச் சுமந்து வந்து கொடுக்கி றார்கள். இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று கேட்டால், தலைமை ஆசிரியர் ஊர்ப் பெரிய வர்களைக் கைகாட்டுகிறார்; ஊர்மக்களோ ஆசிரியர்களை நோக்கித் திருப்பு கிறார்கள். கண்கொள்ளாக் காட்சி அது.
வீரம் விளைந்த மண் என்று பாஞ்சாலங்குறிச்சியைச் சொல்பவர்கள் உண்டு. தமிழரின் பழம்பெருமையைப் போற்றி, கீழடியிலிருந்து மண்ணெடுத்துச் சென்றவர்கள் உண்டு. பேரிடரி லிருந்து மீண்டு சாதனைகள் படைக்கும் தன்னம்பிக்கை பெற அனைவரும் நாகப்பட்டினத்தின் மீனவ கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்!
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த துயரச் சம்பவம் அது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு. கண்களில் இனவெறியைத் தேக்கிக் கொண்டு வன்முறைக் கும்பல் ஒன்று அந்தப் பழைமையான கட்டிடத்தை நோக்கி விரைகிறது. சற்று நேரத்தில் அங்கு இயங்கி வந்து புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாகிறது. அன்று அழிந்து போன அறிவுக் கருவூலங்களை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. மொத்தம் 97,000 நூல்கள். அரிய புத்தகங்கள், ஆவணங்கள், சந்தனப் பேழையில் பாதுகாக்கப்பட்டட ஓலைச் சுவடிகள், ஒரே ஒரு பிரதி மட்டுமே எஞ்சியிருந்த 'யாழ்ப்பாண வரலாறு', இராமாயணத்தின் அரிய குறும்பதிப்பு, நூறாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலய இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள் என அத்தனையும் அழிந்து போயின. நூல்களை மட்டுமா இழந்தோம் அங்கு?
-உதயச்சந்திரன்
இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.