லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆர்வம் இருந்தால் ஆங்கிலமும் எளிதே!

ENGLIஷ் VINGLIஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ENGLIஷ் VINGLIஷ்

ENGLIஷ் VINGLIஷ்

தீபா ராம்

Interest is the Best Teacher - சீனப் பழமொழி.

எதைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் முதல் முக்கியமான தேவை, ஆர்வம். அதுமட்டும் இருந்துவிட்டால் எந்தக் கலையையும் கற்றுத் தேர்ச்சியடைந்து விடலாம்!

கேட்கக்கேட்க ஆங்கில மொழியின் உச்சரிப்புகளும் வாக்கிய அமைப்புகளும் ஓரளவுக்குப் பரிச்சயமாகிவிடும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஐந்து புதிய எளிமையான, தெளிவான, சுவாரஸ்யமான சொற்களைக் கற்றுக்கொள்ளலாம். அதைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்க முயற்சி செய்யலாம்.

நல்ல பழக்கவழக்கங்கள், நிதானம், நாகரிகம் தெரியாத மனிதர் `uncouth fellow' - தெரிந்தால் அவர் Couthy fellow... Raja is a couthy fellow liked by everyone at office.

வசதியான, அரவணைப்பான இடம் இருந்தால் அது cosy and comfortable... இல்லா விட்டால் uncosy and uncomfortable place. எடுத்துக்காட்டாக The room was warm and comfortable and we had a cozy dinner with the whole family.

ஆங்கிலத்தில் kangaroo word என்று ஒருவகை இருக்கிறது. கங்காரு எப்படி குட்டிகளைத் தன்னுடைய வயிற்றில் உள்ள பையில் வைத்திருக்கிறதோ, அதுபோல ஒரு வார்த்தை - ஒரே அர்த்தம்கொண்ட சில பல வார்த்தைகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கும். உதாரணமாக Chocolate எனும் வார்த்தை. இது Aztecan மொழியில் இருந்துவந்த cacahuatl எனும் வார்த்தை மூலம் உருவானது. அதிலிருந்து உருவான இன்னொரு வார்த்தைதான் cacao அல்லது cocoa. அதனால் நீங்கள் chocolate contains cocoa both in real life and in word form என்று சொல்லலாம்!

பிரெஞ்சு வார்த்தை masculine லத்தீன் வார்த்தை masculus-ல் இருந்து வந்தது. male என்ற வார்த்தை அதிலிருந்து வந்தது. ஆகவே, masculine is a kangaroo word in a kangaroo word!

பூப்பூத்த ஒரு செடியை, ஏன்... பூத்துக் குலுங்கும் பூவையும்கூட blossoms என்று கூறுவார்கள். அதிலிருந்து bloom (பூத்தல்) என்றொரு வார்த்தை வந்தது. அதை இப்படி கூறலாம், There’s another B-word inside of the word blossom, that is bloom.

எல்லாவற்றுக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவை எதிர்பார்க்கும் மனநிலை நமக்குள் இருப்பதால் திரைப்படத்தின் முடிவைக்கூட சுபமாகவே எதிர்பார்க்கிறோம். A happy ending to a story. அதுதான் eucatastrophe. ஒரு திரைப்படத்தைப் பார்த்தபின் `I fully expected a eucatastrophe at the end of the movie, but no, he died, she died, they all died' என்று கூறுவதுண்டு.

தொலைவில் தெரியும் தொடமுடியாத தூர எல்லைதான் தொடுவானம். இதை ஆங்கிலத்தில் Offing என்பார்கள். எதிர் காலத்தைச் சொல்வதற்கும் இந்தச் சொல்லை உபயோகிக்கலாம். உதாரணமாக `Chances of major changes are in the offing for the company' (எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் கம்பெனியில் ஏற்பட வாய்ப்புண்டு).

ENGLIஷ் VINGLIஷ்
ENGLIஷ் VINGLIஷ்

Alibi... எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் `சாட்சி'... இக்கட்டில் இருந்து தப்பிக்க சொல்லப்படும் காரணம் (excuse). ஆனால், சாட்சியுடன் நிரூபித்தால் அந்தக் காரணம் alibi ஆகிவிடும். உதாரணமாக `He was interviewed by police but provided an alibi of presence at a party'.

Panache (பனாஷ் என்று உச்சரிக்க வேண்டும்) பல வண்ண, பல வகை காய்கறிகள் சேர்த்த கலவை. பிரெஞ்சு வார்த்தையான இது பல வண்ண பழ வகைகள் சேர்த்த ஐஸ்க்ரீம் அல்லது ஜெல்லி உணவைக் குறிக்கவும் உபயோகப்படுகிறது. இதே Panache கொஞ்சம் மாறி panashe என்று சொல்லப்படும்போது அர்த்தம் கொஞ்சம் மாறுபடும். அனைவரும் வியக்கும்வண்ணம் ஸ்டைலிஷ் உடையணிந்து தன்னம்பிக்கையுடன் இருப்பவரை dressed panashe என்பார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், `He dressed with panache'.

தனக்குத் தரப்பட்ட ஒரு வாய்ப்பை, `இப்போது வேண்டாம். ஆனால், பின்னாளில் தேவைப்படும்பட்சத்தில் ஏற்றுக் கொள்வேன்'என்று நிராகரிக்கும்போது அது `rain check'. உதாரணமாக, `I’ll take a rain check on your offer.'

ஆங்கிலத்தில் பேசக் கற்க முதலில் மேற் சொன்னதைப்போல சிறுசிறு வார்த்தைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் எளிதானதுதான். ஆனால், நமது தாய்மொழி அல்ல. அதனால் எழுத்துப் பிழைகள், உச்சரிப்புக் கோளாறுகள் சகஜமே. மனம்தளராமல் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. வாழ்த்துகள்!

(நன்றாகப் பேசுவோம்!)