Published:Updated:

உங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? #DoubtOfCommonMan

மனை
News
மனை ( vikatan )

நிலம் வாங்குவது பெரிதில்லை. அவற்றை வில்லங்கம் இல்லாமல், பிறர் அபகரிக்காமல் காப்பதுதான் சவாலாக இருக்கிறது. விகடன் வாசகி ரைஹானா பேகம் தன் நிலம் குறித்து ஒரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு அனுப்பியிருந்தார்.

Published:Updated:

உங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? #DoubtOfCommonMan

நிலம் வாங்குவது பெரிதில்லை. அவற்றை வில்லங்கம் இல்லாமல், பிறர் அபகரிக்காமல் காப்பதுதான் சவாலாக இருக்கிறது. விகடன் வாசகி ரைஹானா பேகம் தன் நிலம் குறித்து ஒரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு அனுப்பியிருந்தார்.

மனை
News
மனை ( vikatan )

"மரக்காணம் அருகே எங்களுக்குச் சொந்தமான இரு மனைகள் இருக்கின்றன. 2007-ம் ஆண்டு வாங்கினோம். இப்போது அந்த மனைகள் வேறு ஒருவரின் பெயரில் இருப்பது தெரியவந்ததுள்ளது. எங்களுக்கு விற்பனை செய்தவரே மீண்டும் வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இது எப்படிச் சாத்தியம்... அசல் பத்திரம் எங்களிடம்தான் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பது எப்படி?" என்பதுதான் அவரது கேள்வி.

வழக்கறிஞர் ரமேஷ்
வழக்கறிஞர் ரமேஷ்
vikatan

இதுபற்றி வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம். "2007-ம் ஆண்டில் இரண்டு மனைகளை 'A' என்பவரிடமிருந்து கிரயம் பெற்றிருக்கிறீர்கள். அந்த மனைகளுக்கு உங்கள் பெயரில் பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்து கொண்டீர்களா? சமீபத்தில் வில்லங்கச் சான்று பெற்று பார்த்ததில், அதே 'A' என்பவரே அந்த இரண்டு மனைகளையும் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது உங்களுக்குத் தெரியவந்துள்ளது. 'A' என்பவரிடமிருந்து 2 மனைகளை நீங்கள் முதலில் கிரையம் பெற்றுள்ளீர்கள். அந்த கிரயத்துக்குப் பிறகு, இரு மனைகளுக்கும் நீங்களே முழு உரிமையாளர். உங்களுக்கு கிரயம் கொடுத்த பிறகு, அந்த மனைகளில் 'A' என்பவருக்கு எவ்வித உரிமையும் இல்லை. எனவே, 'A' என்பவர் வேறு ஒருவருக்கு செய்த கிரயம் செல்லாது. இது தொடர்பாக, முதலில், 'A'-க்கு எதிராகப் போலீஸில் புகார் செய்யவும். அதன் பின், 'A' வேறு ஒருவருக்குச் செய்த கிரயம் செல்லாது எனவும், அந்தப் பத்திரங்கள், சொத்தில் எங்கள் உரிமையைக் கட்டுப்படுத்தாது எனவும் வில்லங்கப் பதிவிலிருந்து அந்தக் கிரயக் குறிப்பை நீக்குங்கள். உங்களிடமுள்ள ஆவணங்களைக் கொண்டு சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்து தீர்ப்பு பெறுவதும் அவசியம்" என்றார்.

பேனர்
பேனர்
vikatan