அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....

ஆரோவில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோவில்

50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வசிப்பதாகக் கூறப்படும் இந்த நகரத்தில் பாலியல் தொழிலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் நடமாட்டமும் மிகச் சாதாரணம் என்கிறார்கள்.

ஆன்மிக நகரமாக அடையாளம் காட்டப்படும் ஆரோவில், சட்டவிரோத நடவடிக்கைகளின் கூடாரமாகவும், புராதன சிலைகளின் கடத்தல் மையமாகவும் மாறிவிட்டதாகப் புகார்கள் றெக்கை கட்டியிருக்கின்றன.

மனித இனத்தின் ஒற்றுமையைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். கடந்த ஆண்டு ஆரோவில் ஃபவுண்டேஷன் செயலராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், உறுப்பினர்களாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட எட்டுப் பேரும் நியமிக்கப்பட்டனர். இந்தப் புதிய குழு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அந்த நடவடிக்கைகள் தங்களை ஒடுக்குவதற்குத்தான் என்று குற்றம் சுமத்திய ஆரோவில் குடியிருப்பாளர்கள், அதற்கெதிராகச் செயற்குழு ஒன்றை உருவாக்கினார்கள். தற்போது இந்த இரு தரப்பும் அங்கு எதிரும் புதிருமாக நிற்கின்றன.

ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....
ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....

50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வசிப்பதாகக் கூறப்படும் இந்த நகரத்தில் பாலியல் தொழிலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் நடமாட்டமும் மிகச் சாதாரணம் என்கிறார்கள். இந்தப் பட்டியலில் தற்போது பழங்காலச் சிலைகள் கடத்தல் புகாரும் இணைந்திருக்கிறது.

அயல்நாட்டினர் அதிகமாகப் புழங்கும் பகுதி என்பதால் ஆரோவில் பகுதியில் பழங்கால கைவினைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் அணிவகுத்து நிற்கும்.

ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....

இந்த நிலையில், ஆரோவில்லில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான ‘ஆரோ ரச்சனா’ என்ற கடையில் பழங்காலச் சிலைகளை விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் அங்கு அதிரடியாக நுழைந்து ஆய்வுசெய்தனர், சிலைக் கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீஸார். அப்போது கற்கள் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட விநாயகர், முருகன், புத்தர் உள்ளிட்ட 20 பழங்காலச் சிலைகளை கைப்பற்றி எடுத்துச் சென்று கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த அவர்கள், பிரான்ஸ் நாட்டிலிருக்கும் அதன் உரிமையாளர்மீது வழக்கு பதிவுசெய்தனர். அதேபோல கடந்த 7-ம் தேதி ஆரோவில் யாத்ரா கம்யூனிட்டியிலுள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தம்பதி வீட்டில் அதிரடி ஆய்வை மேற்கொண்ட சிலைக் கடத்தல் போலீஸார், சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய சிலைகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....

இதேபோல கடந்த மே மாதம் குருசுகுப்பம் பகுதியில் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்ற மூன்று பேரை வளைத்துப் பிடித்தது புதுச்சேரி போலீஸ். அவர்களில், ஜஸ்டின் டெல்வின் டரிமோ என்பவர் ஆப்பிரிக்காவில் இருந்துவந்து ஆரோவில்லில் தங்கியிருந்தவர். அவர்களிடமிருந்து 21 கிராம் கொக்கைன் பாக்கெட்டுகளும், 11 கிராம் எடையுள்ள 30 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்படியான தொடர் சம்பவங்கள்தான் ஆரோவில்லின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசையிடம் இது குறித்துக் கேட்டோம். “சிலைக் கடத்தல் மட்டுமல்ல, போதைப்பொருள்களையும் சமீபத்தில் அங்கு பறிமுதல் செய்திருக்கிறார்கள். சமூகப் பாதுகாப்புப் போர்வையில் இப்படியான செயல்கள் அங்கு நடக்கின்றன. அங்கிருப்பவர்கள் அனைவரையும் நான் குறை சொல்லவில்லை. அன்னையின்மீது உண்மையான பற்றுகொண்ட பலர் அங்கு இருக்கிறார்கள். அன்னை எதற்காக இந்த நகரத்தை உருவாக்கினாரோ அதை நிறைவேற்றுவதற் காகத்தான், ஆரோவில் அறக்கட்டளைத் தலைவர் தமிழக ஆளுநர் ரவி, ஆரோவில் ஃபவுண்டேஷன் செயலர் ஜெயந்தி, நான் உள்ளிட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

ஆரோவில் சர்வதேச நகரமா... சட்டவிரோத நகரமா? - பிடிபட்ட போதைப்பொருள்கள், கடத்தல் சிலைகள்....

அதேசமயம், “தொல்பொருள் கடத்தல் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இவர்கள் முதலில் எடுத்துச் சென்ற சிலைகள், மகாபலிபுரத்தில் ‘தள்ளு’ பொருள்களில் வாங்கப்பட்டவைதான். மேலும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கடத்திவரப்பட்டவை அல்ல. அவற்றை முறையாக வாங்கியதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. வாரன்ட் இல்லாமல் வரும் சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று எங்களுக்கே தெரியவில்லை. ஆரோவில்லை தவறாகச் சித்தரிக்க செய்யும் முயற்சியாகவே இந்த குற்றச்சாட்டுகளை பார்க்கிறோம்” என்கின்றனர் ஆரோவில் குடியிருப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள். மேலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்த குற்றச்சாட்டையும் மறுக்கிறார்கள்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் உயரதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “ஆரோவில்லில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்ட புராதன சிலைகள்தான். அவற்றுக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்தச் சிலைகளின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும்” என்கின்றனர்.

ஆன்மிகம், அமைதி என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கக் கூடாது. அவை எங்கு நடந்தாலும் ஒடுக்கப்பட வேண்டும்!