திருச்சியில் நடைபெற்ற சுர்ஜித்தை மீட்கும் பணி ( தே. தீட்ஷித் )
Share
தமிழகத்தை இந்த ஆண்டு பரபரக்க வைத்த, உலுக்கிய செய்திகள் இங்கே படங்களாக...
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் கொட்டித்தீர்த்த பலத்த மழையின் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டன.ப. அருண்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்.ப. கதிரவன்
கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் பார்வையிடும் பள்ளி மாணவர்கள். ஈ.ஜெ . நந்தகுமார்
முதுமலை வனத்தில் உருவான காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர். கே. அருண்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், 7500 நடன கலைஞர்களால் கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தப்பட்ட நடன நிகழ்ச்சி. எஸ்.தேவராஜன்
சயன கோலத்தில் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர். சொ. பாலசுப்ரமணியன்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்படியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி.தே. தீட்ஷித்
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து 30 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு 6 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தினார். மாளிகையை விட்டு துணை ராணுவ உதவியுடன் கவர்னர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டு சென்றார். ஏ. குருஸ்தனம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா ஏ. குருஸ்தனம்
ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ததைத் தொடர்ந்து கறிகடைகளில் கறிகளை வாழை இலைகளில் மடித்து கொடுக்க ஆரம்பித்தனர். ஈ.ஜெ . நந்தகுமார்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழகத்தில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். க. பாலாஜி
39 வருடங்களுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட டேவிட் சாந்தகுமார் தன் தாயை கண்டுபிடித்தார். அவர் தன் தாயை கண்டுபிடிக்க விகடனும் உதவியது. என். ஜி. மணிகண்டன்
மயிலாடுதுறையில் விவசாய நிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட மீத்தேன் குழாய்கள். பா. பிரசன்ன வெங்கடேஷ்
நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரம்.நா. ராஜமுருகன்
மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடி வந்த சின்னத்தம்பி யானை, கும்கி யானைகளால் சிறைபிடிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டது.தி. விஜய்
மூணு நம்பர் லாட்டரி சீட்டினால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கைது செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள். தே. சிலம்பரசன்
கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்வையிடும் பொதுமக்கள். தி. விஜய்
சென்னையில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். கே. ஜெரோம்
காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.சாய் தர்மராஜ்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள். வீ. ஸ்ரீனிவாசுலு
கடல் நீரில் ஏற்பட்ட மாசு காரணமாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய நுரை.வீ. ஸ்ரீனிவாசுலு
வெங்காய விலையேற்றத்தால் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். வீ. சிவகுமார்
கோவையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர், மோடி வேடமிட்ட கலைஞர்கள் சாலையில் நடந்து வரும் காட்சி.தி. விஜய்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. பின்னர் புதியசிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. பா. பிரசன்ன வெங்கடேஷ்
சென்னையில் நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தொடங்கப்பட்டது. ச. வெங்கடேசன்
தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளூர் சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு மை தெளித்ததால் பதட்டமான சூழல் உருவானது. பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டது.ம. அரவிந்த்
ஜூலை மாதம் சம்பள நிலுவையை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தே. அசோக் குமார்
106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் ப. சிதம்பரம் ஆனந்த விகடனுக்காக கொடுத்த நேர்காணலின் பொழுது எடுத்த படம். பா. காளிமுத்து