Published:Updated:

சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு ! மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் கெடு!

பசுமை தீர்ப்பாயம்
News
பசுமை தீர்ப்பாயம்

சிதம்பரம் நகராட்சி பகுதி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்வதில் என்ன சிரமம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது பசுமை தீர்ப்பாயம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள் மாசடைந்திருக்கின்றன. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்து, அவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று, பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2021-ல், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், `உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள நகரம் சிதம்பரம்.

கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம்
கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம்

அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாசுபாட்டில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், வீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதாள சாக்கடை இணைப்பு பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கடலுார் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2021-ல் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுவரை அவர் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதையெடுத்து கருத்து தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், `மாவட்ட ஆட்சியருக்கு அதில் என்ன சிரமம் என்பது தெரியவில்லை. இந்த பிரச்னையை ஓர் ஆண்டாக நிலுவையில் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. அதனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நவம்பர் 7-ம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளது.