சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

கோலமாவு கோகிலா, இந்தியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிப்பில் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

னி ஆளாக நின்று மூன்று போலீஸ் ஜீப்பைத் தாறுமாறாகத் தூக்கியடிக்கும் மாஸ் டான் ராக்கி பாய்க்கு இணை அவர் மட்டுமே. 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதலாம் பாகம், மரண மாஸ் ஹிட்.
இன்பாக்ஸ்

இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அது பல மடங்கு கூட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர், யூட்யூபின் பல ரெக்கார்டுகளை முறியடித்தது. விஷயம் அதுவல்ல... டீசரைப் பார்த்து ரஜினியே கூப்பிட்டு வாழ்த்தியதாக நன்றி சொல்லியிருக்கிறார் யாஷ். படம் ஜூலை 16 ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இம்முறை அதீராவாக சஞ்சய் தத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் வெய்ட்டிங்.# பீஜிஎம் போடு... பீஜிஎம் போடு...!

‘டாக்டர்’, ‘அயலான்’ படங்களை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் சொந்தத் தயாரிப்பில் அட்லீயின் உதவி இயக்குநரான சிபி சக்ரவர்த்தி இயக்கும் ‘டான்’ திரைப்படத்துக்குத் தயாராகியுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அரியர் மேல் அரியர் வைக்கும் இன்ஜினீயரிங் மாணவனாக நடிக்கவுள்ளாராம். ஜிம் பக்கம் போகாத சிவா இப்போது ஜிம்மில் தவம் கிடந்து உடல் இளைத்திருக்கிறாரார். பிப்ரவரி மத்தியில் கோவைக் கல்லூரி ஒன்றில் ஷூட்டிங் ஆரம்பம். சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிப்பது இதுவே முதல்முறை! என்ன பங்கு... காலேஜுக்குப் போவோமா?

முதல் படத்திற்கு பாசிட்டிவ்வான கமெண்டுகளை வாங்கிய துருவ் அடுத்து விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதற்கடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கபடி வீரராக நடிக்கிறார். இங்க ரூல்ஸே வேற..!

றிவியல் தினம் தினம் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. அந்த வகையில் தற்போது Air Charging முறையை பிரபல சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘எம்.ஐ ஏர் சார்ஜிங்’ என்னும் இந்த சாதனம், இரண்டு மீட்டர் சுற்றளவிலுள்ள மொபைல்களைக் கண்டறிந்து தன் ஆன்டெனாக்களின் மூலம் சார்ஜ் ஏற்றும். ஆரம்பக்கட்டமாக ஐந்து வாட் வரை சார்ஜ் ஏற்றும் திறன் கொண்ட சாதனமாக இதை வடிவமைத்துள்ளனர். வேற மாறி... வேற மாறி..!

‘உலகின் அழகான மனிதர்’ என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். உலகின் மிக அழுக்கான மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்திலுள்ள தர்கா கிராமத்தில் வசிக்கும் 87 வயது முதியவரான அமோ ஹாஜி என்பவர் 67 ஆண்டுகளாக உடலில் தண்ணீர் படாமலேயே வாழ்ந்துவருகிறார். இளம்வயதில் ஏற்பட்ட சில சம்பவங்களால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஹாஜிக்கு தண்ணீரைக் கண்டால் பயம். ‘‘குளிக்காமல் இருப்பதால்தான் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்’’ என்கிறார். அசுத்தமாக இருக்கும் ஹாஜி ஊருக்கு வெளியே தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருக்குப் புகைப்பது என்றால் அலாதி பிரியம். இவர் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளைப் பற்றிக் கேட்டால் நாம் வாயையும் காதுகளையும் மூடிக்கொள்வோம். கொரோனா வைரஸ் தெரியுமா ஹாஜி?!

இன்பாக்ஸ்

த்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாளின் பர்சனல் பக்கங்கள் மிகவும் சுவராசியமானவை. மளிகைக் கடை, விவசாயம், அரசியல் என்று இப்போதும் ஆக்டிவாக சுழன்றுகொண்டிருக்கும் பாப்பம்மாவுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் இல்லை. குளித்துவிட்டுதான் சாப்பாட்டைத் தொடுவார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் பாப்பம்மாள், வெள்ளாட்டுக்கறி என்றால் மட்டும் ஒரு பிடி பிடித்துவிடுவாராம். டீ, காபிக்கு நோ சொல்லும் பாப்பம்மாள், அவ்வபோது கொத்துமல்லி காபியை மட்டும் குடிப்பார். இப்போதும் அடர்த்தியான 5 அடி கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறார் பாப்பம்மாள். ‘காய்ச்சல், தலைவலின்னு படுத்ததில்லை’ என்று சிரிக்கிறார். இரும்பு மனிதி!

மிழ் இலக்கியத்துறைக்கு இது இரங்கல் காலம்போல. தொ.பரமசிவன், இளவேனில், ஆ.மாதவன் எனப் பல இலக்கியவாதிகள் அடுத்தடுத்து மறைந்திருப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா இந்த வாரம் இறந்திருப்பது இலக்கியவாதிகளையும் வாசகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மார்க்சியத்தின் மீதும் முற்போக்கு இலக்கியத்தின் மீதும் பற்றுக்கொண்ட டொமினிக் ஜீவா, ஈழத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை குறித்தும் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவு செய்து வந்தார். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிவந்த ஜீவா, ‘மல்லிகை’ இதழ் மூலம் பல்வேறு முற்போக்குப் படைப்பாளிகளை வளர்த்தெடுத்தார்.

இன்பாக்ஸ்

ராம்கோபால் வர்மா இன் ஃபயர் மோடு! அடுத்து இயக்கப்போகும் ‘டி- கம்பெனி’யின் மூலம் தனது ஆஸ்தான ஏரியாவான ‘கேங்க்ஸ்டர்’ களத்துக்குத் திரும்பியுள்ளார். இது தாவூத் இப்ராஹிம் குறித்த கதை. ‘‘ஆனால், தாவூத் இப்ராஹிமின் கதையாக மட்டும் இருக்காமல், அவருடன் தொடர்பிலிருந்த பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் குறித்த ரகசியப் பக்கங்களையும் பேசப்போகிறது’’ எனச் சூடு கிளப்புகிறார். ‘‘20 வருடங்களாக இதைப் படமாக்க முயற்சி செய்தேன். ஆனால், இப்போது 80 மணி நேரம் ஓடக்கூடிய வெப்சீரீஸாக மாற்றப்போகிறேன். அவ்வளவு கன்டென்ட் இருக்கு’’ என்று சிரிக்கிறார் ஆர்ஜிவி. ஆவோ ஜி!

பிளாக்‌ஷிப் கில்லர்’ என புயலாக வந்து இந்திய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்கொண்ட நிறுவனம், ஒன்ப்ளஸ். இதன் நிறுவனர்களுள் ஒருவர் கார்ல் பே. கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் உலகின் மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒன்ப்ளஸிலிருந்து விலகினார். ‘‘புதிய கனவை நோக்கிப் பயணிக்கப் போகிறேன்’’ என அப்போது சொல்லியிருந்த அவர், கடந்த வாரம் அந்தக் கனவை அறிமுகம் செய்தார். அது ‘Nothing.’ என்னது, ஒண்ணுமில்லையா? ஆம், அவரது புதிய நிறுவனத்தின் பெயர் இதுதான். ஆடியோ கேட்ஜெட் சந்தையைக் குறிவைக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக விரைவில் வருமாம். ‘ஐபாட்’ உருவாக்கிய டோனி ஃபாடல், ‘ரெட்இட்’ சிஇஓ ஸ்டீவ் என டெக் உலகின் சூப்பர்ஸ்டார்கள் நத்திங் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதால், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெயிட்டிங்.

சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகிகள் பேருந்துகளைப் பிடித்துத் தொண்டர்களை அழைத்துச் சென்றனர். புதுமைப்பித்தனான அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு ரயிலையே வாடகைக்குப் பிடித்துவிட்டார். ‘‘மதுரைக்காரன் பாசக்காரன். அதே நேரம் வித்தியாசமானவன் என்பதால் இதைச் செய்தேன்’’ என்று அங்கு பேசியவர், 1,500 தொண்டர்களை ரயிலில் ஏற்றிக்கொண்டு அவர்களுடன் சென்னை கிளம்பினார். ரயில் கிளம்பும்முன் ஒவ்வொரு பெட்டியாகச் சென்று கட்சியினரை விசாரித்தவர் இன்ஜின் அருகில் வந்தவுடன், ‘‘அண்ணே, ரயிலை ஸ்டார்ட் பண்ற மாதிரி போஸ் கொடுங்க’’ என்று சிலர் வலியுறுத்தினர். ‘‘அடப் போப்பா... வம்புல மாட்டி விட்டுடாதீங்க’’ என்று உஷாரானார் அமைச்சர். வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர!

டைசியாக வெளியான ஷாருக் கான் படம், ‘ஜீரோ’. அது மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததால், இரண்டு ஆண்டுகள் ஒன்றுமே செய்யாமல் இருந்தார் ஷாருக். கொரோனா கூடுதலாக ஓராண்டைத் தின்றது. இப்போது புது மனிதராகி, ‘பதான்’ படத்தில் நடிக்கிறார் அவர். ஜோடி, அவருக்கு ராசியான தீபிகா படுகோன். படத்துக்காக துபாயில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை செல்போனில் படம் பிடித்து, வீடியோக்களைப் பகிர்ந்து அதகளம் செய்கிறார்கள் ஷாருக் ரசிகர்கள். பக்கா பதான்!

இன்பாக்ஸ்

‘கோலமாவு கோகிலா’, இந்தியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிப்பில் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. படத்தின் ஷூட்டிங், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. ‘எங்கள் மாநிலமே புதிய வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு பாலிவுட் போதுமான ஆதரவு தரவில்லை. இங்கே வந்து ஷூட்டிங் நடத்தக்கூடாது’ என விவசாயிகள் அங்குவந்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சண்டிகரில் சத்தமில்லாமல் ஷூட்டிங் நடக்கிறது. வேடிக்கை பார்க்க வருகிறவர்களிடம், ‘‘விளம்பரப் பட ஷூட்டிங்’’ என்று சொல்கிறார்களாம். போர்க்கோலம்!