பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

Nayanthara
பிரீமியம் ஸ்டோரி
News
Nayanthara

ஆர்.ஜே.பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கும் நயன்தாரா.

டல் எடையைக் குறைக்க சிம்பு வெளி நாட்டுக்குச் சென்றும் பலன் இல்லையாம். ஜிம், ரன்னிங் எனப் பல விஷயங்களை முயற்சி செய்தவர் இப்போது பேட்மின்டன் ராக்கெட்டை எடுத்திருக்கிறார். ஷட்டில் மூலம் உடல் எடையைக் குறைப்பதுதான் பிளான். சிம்பு வில் பி பேக்!

சிம்பு
சிம்பு

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணுவுக்கு டிசம்பர் 26-ம் தேதி வந்தால் 95 வயது. இந்த வயதிலும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியத்தைப் பேணிவருகிறார் என்பதையெல்லாம் தாண்டி தற்போதும் தீவிர வாசிப்பாளராக இருக்கிறார்! அயோத்தி விவகாரம் பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில், ‘ராமகாதையும் ராமாயணங்களும்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறார். முன்னேர்!

ந்தியா ஒருநாளில் குவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 26,000 டன்களாக அதிகரித்துள்ளது. இதில் 40% கழிவுப்பொருள்கள் குப்பைத்தொட்டிகளுக்குக்கூட வருவதில்லை எனக் கவலை தெரிவித்துள்ளது ‘சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம்.’ பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவது, அவற்றை முறையாகக் கையாள்வதற்கான கருவிகளை அதிகப்படுத்துவது எனப் பல திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளது அரசு! ஸ்வச் பாரத் நிஜத்தில் எப்போது?

ஜினிகாந்த், அரசியல் காரணங்களுக்காகச் சில வாரங்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரனைச் சந்தித்தது வெளியில் கசியாத ரகசியம். ‘அதெப்படி யாருக்கும் தெரியாமல் சந்தித்தார்கள்?’ என்று அ.ம.மு.க நிர்வாகியிடம் கேட்டதற்கு கடந்த ஒருவருடத்தில் இதுவரை ஐந்து முறை சந்தித்திருப்பதாகச் சொல்லி ஷாக் கொடுக்கிறார்கள். சமீப சந்திப்பில் அரசியலைத் தாண்டி ரஜினியின் ஸ்பீடைக் குறிப்பிட்டுப் பாராட்டி டிப்ஸ் கேட்டிருக்கிறார் தினகரன். டயட்டில் கறாராக இருக்கும் தினகரனுக்கு, ரஜினி பிரணாயாமத்தைப் பரிந்துரைத்திருக்கிறார். ஆன்மிக ‘டயட்’ அரசியல்!

ந்தாண்டுக்கான ஞானபீட விருது மலையாள எழுத்தாளர் அக்கிதம் நம்பூதிரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்துக்குக் கிடைத்திருக்கும் 6 வது ஞானபீட விருதாகும். 93 வயதான அக்கிதம் மலையாள இலக்கியத்தில் நவீன மனநிலைக்கான, மன உணர்வுகளுக்கான இடத்தைத் தொடங்கி வைத்தவர். ‘ இருபதாம் நூற்றாண்டின் இதிகாசம்’ என்ற அவரது நூல் மலையாள வாசகர்களிடையே மிகப் பரிட்சயம். அதில் சொல்லப்படுகிற வாழ்வும் சமகால வாழ்வுதான். சமஸ்கிருத பரிச்சயம் உடையவர். அதன் செழுமையை மலையாளத்தில் கொண்டு வந்தார். மரபை மீறாமல் நவீனத்தைக் கவிதைகளில் கொண்டு வந்தவர் அக்கிதம்தான் என்கின்றனர் மூத்த எழுத்தாளர்கள். வாழ்த்துகள்.. வணங்குகிறோம்..!

ஜோல்- ஷாருக் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் நடந்துவிடாதா என்று பாலிவுட் ரசிகர்கள் ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. அதன்பிறகு கஜோல், அஜய் தேவ்கனைத் திருமணம் செய்து டீன் ஏஜ் மகளுக்கும் அம்மாவாகிவிட்டார். சமீபத்தில் கஜோல், தன் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகச் சொன்னதையடுத்து, ‘நீங்கள் அஜய் தேவ்கனைச் சந்திக்கவில்லையென்றால், ஷாருக்கானைத் திருமணம் செய்திருப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் ரசிகர் ஒருவர். “அவர் என்னிடம் புரொபோஸ் செய்யவில்லையே’’ என்று கூலாகப் பதில் சொல்லியிருக்கிறார் கஜோல். சம்சார கனவு!

கஜோல்
கஜோல்

ப்போது வெளியாகும் என நீண்ட நாள்களாக ரசிகர்களால் கேட்கப்பட்டுவரும் ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் ஸ்னைடர் கட் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் முதல் இயக்குநர் ஜாக் ஸ்னைடர், சில காரணங்களால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் சமயத்தில் விலகினார். பின்னர் ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர் ஜாஸ் வீடன் பல காட்சிகளை ரீஷூட் செய்து படத்தை வெளியிட்டார். அந்தப் படம் சுமாராக ஓடியதால், ஸ்னைடரின் வெர்ஷனை வெளியிடும்படி ரசிகர்களிட மிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இப்போது ஸ்னைடரே அந்தப் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் அலப்பறைகள்!

றுமாதங்களுக்கு மேல் ஆக்டிவாக இல்லாத ட்விட்டர் அக்கவுன்டுகளை டெலிட் பண்ணப்போகிறதாம் ட்விட்டர். ஏராளமான பிரபலங்களில் யூஸர் நேம்களைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளவும், ஸ்பாம் மற்றும் ஃபேக் அக்கவுன்டுகள் அதிகரித்திருப்பதாலும் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது ட்விட்டர். டெக்னோ புரட்சி!

முரட்டுக் காதலனாக ரசிகர்களைக் கொள்ளைகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, நிஜத்தில் படு பாசக்கார மகனாக இருக்கிறார். சமீபத்தில், பல கோடி மதிப்புள்ள புதிய வீடொன்றை வாங்கியுள்ள அவர், “பெரிய வீட்டை வாங்கிவிட்டேன். இது கொஞ்சம் மனதுக்குள் அச்ச உணர்வைத் தருகிறது. அம்மா... ப்ளீஸ் இதை நம் வீடாக மாற்றுங்களேன்; நாங்கள் பாதுகாப்பாக உணர ஏதாவது செய்யுங்கள். எங்களுடைய இந்த வீடு என் அம்மாவின் சந்தோஷம்; அப்பாவின் பெருமை’’ என்று உருகியிருக்கிறார். அன்பாலே அழகாகும் வீடு!

vijay devarakonda
vijay devarakonda

மிகப்பெரிய காந்திசிலை ஒன்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நிறுவப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ‘மத் ராம்சந்த்ரா மிஷன் தரம்பூர்’ என்ற அமைப்பு 9 அடி உயரமும் 800 கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கலச் சிலையை நிறுவியுள்ளனர். 2017-ல் மான்செஸ்டர் நகரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலால் 23 பேர் கொல்லப்பட்டனர். `இந்த நிகழ்வுக்கான எதிர்வினையாகவே இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அன்பு மட்டுமே வெறுப்பையும் குரோதத்தையும் வெல்லும் என்பதே காந்தி நமக்களித்திருக்கும் செய்தி. அதற்காகவே இந்தச் சிலை’ என்கிறார்கள் இந்த அமைப்பினர். சாந்தி நிலவட்டும்!

ஆர்.ஜே.பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கும் நயன்தாரா, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி தனித்து இயக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். போலீஸ் ஸ்பூஃப் படமாம் இது. படத்தைத் தயாரிப்பவர், நயன்தாராவின் நிஜ நாயகன் விக்னேஷ் சிவன். பாலாஜி காட்டுல மழை!

நயன்தாரா
நயன்தாரா