பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலியா பட்

அடிக்கடி கேர்ள் ஃபிரெண்ட்ஸை மாற்றிக்கொண்டிருக்கும் ரன்பீர் கபூர், கடந்த இரண்டு வருடங்களாக ஆலியா பட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.

  • பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் ட்விட்டரில் பி.ஜே.பியினர் அவரோடு அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில், யோகி ஆதித்யநாத் `டெல்லி ஷஹீன்பாக் போராட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணி வழங்குகிறார்’ என்று கூற, அதனைக் கிண்டலடித்த ஸ்வரா, அவரை ‘hangry’ எனக் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேச பி.ஜே.பியின் செய்தித்தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, ஸ்வராவிடம் ‘hungry’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் குறித்து கலாய்க்க, ஸ்வராவோ, ‘hangry’ என்பது ‘பசியின் காரணமாக கோபமாக இருப்பது’ என்ற பொருளைப் பதிவிட்டதுடன், ராகுல் கோத்தாரியை ‘Sit down Uncle’ என்றும் கூற, ராகுல் கோத்தாரி தரப்பு சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டது. கேம் ஆஃப் ஸ்டார்ஸ்!

Swara Bhaskar
Swara Bhaskar
  • ற்போது ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, கார் சேஸிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சுவிட்சர்லாந்து செல்லவிருக்கிறது படக்குழு. பொங்கலைக் குறிவைத்து ‘விஸ்வாசம்’ வெளியானதைப் போல இந்த வருடம் தீபாவளியைக் குறிவைத்து ‘வலிமை’ படத்தைக் களமிறக்க இருக்கிறார்கள். 2020-ல் தீபாவளி சனிக்கிழமை (நவ.14) வரவிருப்பதால் படத்தை வியாழக்கிழமை (நவ.12) வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தல தீபாவளி!

  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றுவருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்தால், வெறும் பத்து நாள்கள் மட்டுமே மீதம் இருக்குமாம். ‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு பாலிவுட் படத்திற்குச் செல்லும் தனுஷ், அந்தப் படத்தையும் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தையும் ஒரே சமயத்தில் நடித்துக்கொடுக்க இருக்கிறார். ஆக, ‘பட்டாஸ்’ படத்துடன் இந்த வருடத்தைத் தொடங்கிய தனுஷுக்கு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் நரேன் படம் என நான்கு படங்கள். D4!

  • ‘நான் கர்மாவை நம்புபவள். கோயிலுக்குச் செல்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று சொல்லிவந்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கையில் எனக்குப் பிடித்து நான் செய்கிற விஷயங்களில் ஒன்று, என் அம்மாவுடன் கோயிலுக்குச் செல்வது. நீங்கள் எந்தக் கடவுளை நம்புகிறீர்கள், வணங்குகிறீர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. தெய்வத்தின் முன்னால் நாம் எந்த அளவுக்கு நேர்மையுடன் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். கடவுளின் முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை’ என்று பதிவிட்டிருக்கிறார். இருந்தா நல்லாத்தானிருக்கும்!

  • பாப் பாடகி ஷகிரா 12.2 மில்லியன் யூரோ அளவுக்கு வரி மோசடி செய்திருக்கார் என சர்ச்சை சுழன்றுகொண்டிருக்கிறது. அது கிடக்கட்டும் என்பது போல், இந்த சீசன் `சூப்பர் பௌலி’ல் ஷகிராவும், பாடகி ஜெனிஃபர் லோபஸும் இறங்கி ஆடியிருக்கிறார்கள்.

இன்பாக்ஸ்

இருவரும் அவர்களது விண்டேஜ் ஹிட் பாடல்களைப் பாடி ஆட, லேடி காகா உட்பட முன்னணி பாப் பாடகிகள் அனைவரும் பாராட்டு முத்தங்களைப் பரிசளித்திருக்கிறார்கள். டபுள் பட்டாஸ்!

  • தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் சரக்குப் பேருந்து பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில், மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு விஷயத்திலும் விளம்பரம் தேடுவது அரசியல்வாதிகளின் புத்திதானே என்று மக்கள் சாதாரணமாகக் கடந்துபோனார்கள். பேருந்தில் தன் புகைப்படங்களை வைத்ததற்காக, அதிகாரிகளைக் கடிந்து கொண்ட சந்திரசேகரராவ் உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். ‘மலிவு விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை... சரக்குப் போக்குவரத்தைத் தொடங்கியது லாபப் பாதைக்குத் திருப்பத்தானே தவிர, என்னை புரமோட் செய்ய இல்லை...’ என்றும் அதிகாரிகளுக்கு சந்திரசேகேர ராவ் பாடம் எடுத்துவிட்டே ஓய்ந்தார். நல்லாருக்கே!

  • ந்தியாவில் போர் விமானங்களுக்குச் சிறப்புப் பூஜை செய்வதுபோன்று, ரஷ்யாவிலும் போர் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கினால் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். ரஷ்யன் ஆர்தோடெக்ஸ் ஆலயபாதிரியார்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்து ஆயுதங்கள்மீது புனித நீர் தெளித்து ஆசீர்வதிப்பார்கள். ‘மனித உயிர்களைப் பறிக்கும் ஆயுதங்களுக்கு இனி புனித நீர் தெளித்துப் பிரார்த்தனை செய்யக் கூடாது’ என்று ரஷ்ய ஆர்தோடெக்ஸ் ஆலயம் முடிவெடுத்துள்ளது. அதேவேளையில், நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், வீரர்கள் பயன்படுத்தும் பொருள்களை ஆசீர்வதிக்க எந்தத் தடையும் இல்லை. புது ரூட்டா இருக்கே!

  • பெங்களூரைச் சேர்ந்த பூக்கடைக்காரரான ரெஹானா பானுவின் வங்கிக் கணக்கிற்குத் திடீரென 30 கோடி ரூபாய் பணம் விழுந்துள்ளது. பணம் இல்லாமல் காலியாக இருந்த வங்கிக் கணக்கிற்கு, அவ்வளவு பெரியதொகை வந்துசேர, வங்கியில் இருந்து ரெஹானாவும், அவரின் கணவர் இம்ரானும் அழைக்கப்பட்டு, கையெழுத்திடுமாறு கூறப்பட்டுள்ளனர். அவர்கள் அதனை மறுத்ததோடு, காவல்துறையினரைத் தொடர்புகொண்டு, பணத்தை அளிக்க விரும்புவதாகவும், நேர்மையாக நடந்துகொண்டதற்குசன்மானம் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். எனினும் பணம் தன்னுடையது தான் எனக்கூறி, ரெஹானாவைச் சந்தித்த நபர் ஒருவர், 15 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு, வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு காவல்துறை இந்தப் பணம், வங்கிமோசடியில் ஈடுபடுபவர்களால் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றும்போது, தவறுதலாகவந்திருக்கலாம் என விசாரித்துவருகின்றனர். சொக்கா....

  • மெரிக்காவில் இருப்பதைப் போல பிரதமரின் இல்லத்திலிருந்து அலுவலகம் மற்றும் பாராளுமன்றக் கட்டடம்வரை செல்ல ஒரு பிரத்யேக சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மற்றும் துணைத்தலைவர் இல்லங்களை மாற்றி அவர்களின் அலுவலகங்களுக்குச் சிறப்பு வழிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசியல்வாதிகளைப் பொது மக்களிடமிருந்து பிரிக்கவும், போக்குவரத்துத் தடைகள் மற்றும் விஐபி இயக்கங்களின் போது ஏற்படும் சிரமங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த முடிவு என்கின்றனர் அதிகாரிகள். தனிவழி!

  • சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்குப் பிறகு, கொரடலா சிவா இயக்கத்தில் தனது 152வது படத்தில் நடித்து வருகிறார், மெகா ஸ்டார் சீரஞ்சீவி. இந்தப் படத்தில் அவருக்கு டூயல் ரோல் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தவிர, படத்திற்கு `ஆச்சார்யா' எனப் பெயரிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். சீரஞ்சிவியின் ரீ-என்ட்ரியான `கைதி நம்பர் 150', `சைரா நரசிம்மா ரெட்டி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண்தான் தயாரித்து வருகிறார்.இங்க எல்லாமே உல்ட்டா!

டிக்கடி கேர்ள் ஃபிரெண்ட்ஸை மாற்றிக்கொண்டிருக்கும் ரன்பீர் கபூர், கடந்த இரண்டு வருடங்களாக ஆலியா பட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் தன் அம்மா நீட்டு சிங், ஆலியா பட் இருவருடனும் கலந்துகொண்ட ரன்பீர், ஜோடியாக அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கியிருக்கிறார்.

ஆலியா பட்
ஆலியா பட்

ஃபோட்டோஷூட்டில் மகன் ரன்பீர் அருகே ஆலியா நிற்பதற்காக அம்மா நீட்டு சிங் வழிவிட, அதை மறுத்து வருங்கால மாமியார் அருகிலேயே நின்று போஸ் கொடுத்திருக்கிறார் ஆலியா. வெவரம்!