கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

ஷில்பா ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷில்பா ஷெட்டி

கொரோனா வைரஸ்.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

பிட்னெஸ் ஃப்ரீக்கான உடற்பயிற்சி வீடியோக்களை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் வீடியோவுடன், ‘லாக்டௌனில் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலைசெய்வதால் உடலியக்கம் எதுவும் இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டிருக்கிறோம். இது முதுகு மற்றும் உடல் வலிக்கு வழிவகுக்கும். நான் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால் என் ஆரோக்கியம் மேம்படுவதை உணர முடிகிறது. இதுபோன்ற உடற்பயிற்சிகள் முதுகு, நுரையீரல் மற்றும் உடல் தசைகளை பலப்படுத்தும். அதனால் எப்போதும் உங்கள் உடலுக்கு ஏதேனும் இயக்கத்தைக் கொடுத்துக்கொண்டே இருங்கள்’ என்று தன் ரசிகர்களுக்கு ஃபிட்னெஸ் டிப்ஸ் கூறிவருகிறார். ஓகே மேக்கரீனா

“இணைய உலகமா, அப்படின்னா என்னைப் பத்தி என்ன தெரியும் சொல்லு?” எனக் கேட்காமல் கேட்கிறது காஷ்மீர். பதில்தான் இல்லை. காஷ்மீரில் இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டுமென அனைவரும் விரும்பும் நேரத்தில் காஷ்மீரின் உண்மை முகத்தை, தங்களின் புகைப்படங்களின் மூலம் வெளிக்கொண்டு வந்ததற்காக சன்னி ஆனந்த், தார் யஸின், முக்தார் கான் ஆகிய மூவருக்கும் புலிட்சர் விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். ஹாங்காங் தேசத்துக் கலவரங்களைப் படம்பிடித்த இரு இந்தியர்களும், இந்த முறை புலிட்சர் விருது பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் நினைவுப் பெட்டகம்

1840களில் அயர்லாந்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. செய்தியறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த சாவ்டவ் இன அமெரிக்கப் பூர்வகுடியினர் தங்களிடம் இருந்த 170 டாலர்களை அனுப்பிவைத்தார்கள். காலம் மாறுகிறது. தற்போதைய கொரோனா காலம், அமெரிக்கப் பூர்வகுடிகளையும் விட்டுவைக்கவில்லை. ட்ரம்ப் அறிவித்த உதவித் தொகை இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், அயர்லாந்து உதவியிருக்கிறது. 170 வருட நன்றியைத் திருப்பிச் செலுத்துகிறோம் என நன்கொடை வசூலித்துவருகிறார்கள். இதுவரை இந்திய மதிப்பில் 24 கோடி ரூபாய் நன்கொடை வசூலாகியிருக்கிறது. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்

கொரோனா வைரஸால் உலகமே முடங்கியுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுப் பட்டப்படிப்பு முடித்திருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 6-ம் தேதி யூடியூபுடன் இணைந்து ‘Dear Class of 2020’ எனும் விர்ச்சுவல் சிறப்புப் பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளார் மிச்செல் ஒபாமா. இந்நிகழ்ச்சியில் பாரக் ஒபாமா உள்ளிட்ட சில சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு, மாணவர்களோடு உரையாடியுள்ளனர். இக்கட்டான சூழலிலும் மாணவர்களின் மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ள மிச்செலுக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. ரெஸ்பெக்ட்

செலிபிரிட்டிகள் தங்கள் பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுகிற த்ரோ பேக் சீசன் இது. அந்த வரிசையில் ரவீணா டான்டண், பனிமலைகளுக்கு நடுவே தானும் தன் கணவரும் இருக்கிற புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‘வெயில் காலம் வரும்போதெல்லாம் என் இதயம் பனிசூழ்ந்த வெகேஷன் நாள்களை நினைவுகூர ஆரம்பித்துவிடும்’ என்று போஸ்ட் செய்திருக்கிறார். ‘அழகான தம்பதி’ என கமென்ட்கள் குவிந்தன. இடையே ரவீணாவின் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் அடுத்த ஜென்மத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா?’ என்று கேட்க, ‘ஸாரிப்பா... ஏற்கெனவே ஏழு ஜென்மங்களுக்கும் புக் ஆயிடுச்சு’ என்று மாஸ் ரிப்ளை கொடுத்திருக்கிறார் ரவீணா. புக்கிங் க்ளோஸ்டு

அடேல்
அடேல்

பாடகி அடேல்தான் சென்ற வார சென்சேஷன். ஜேம்ஸ் பாண்டு படத்தின் டைட்டில் பாடல் பாடியதற்காக அந்த ஆண்டின் ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி என எல்லா விருதையும் தட்டிச் சென்றவருக்கு உடல் எடையை வைத்து வந்த நக்கல்களும் சீண்டல்களும் ஏராளம். பப்ளியாக இருந்த அடேல், சில மாதங்களுக்குப் பின்னர் இன்ஸ்டாவில் தன் புது லுக்கை வெளியிட அத்தனை பேரும் ஷாக். கிட்டத்தட்ட 20 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் அடேல். புகைப்படம் வெளியான இரண்டு நாள்களில் ஒரு கோடி லைக்ஸ் அள்ளியிருக்கிறது. இதையும் மற்றொரு சாரார் கிண்டலடிக்க, “ஒல்லியாக வேண்டுமென்பது அவர் நோக்கமல்ல. ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள இவ்வாறு மாறியிருக்கிறார்” என பதிலளித்திருக்கிறார் அடேலின் பயிற்சியாளர். அன்பு செய்து பழகு

மெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ச்சைகளின் மன்னன். அவர் நின்றால், நடந்தால், பேசினால் என எது செய்தாலும் அது சர்ச்சை ஆகும். தற்போதைய புதிய சர்ச்சை அவர் மேற்கொண்ட ஒரு பார்வையிடலில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஒரு மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றவர், மாஸ்க் அணியாமல் சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி, அதிபரே பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா என சர்ச்சையாகியிருக்கிறது. தப்பு சாரே

ன் கட்சிக்காரர்களுக்கு கொரோனா உதவிகள் செய்ய அறிவுறுத்தியதோடு தானும் களத்தில் இறங்கினார் ஸ்டாலின். ஆனால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்தே ‘`சார் நீங்க வெளியில வராதீங்க. உடம்ப கவனமா பார்த்துக்கோங்க. கட்சிக்காரர்கள் ஃபீல்டில் இருந்து, நீங்கள் கண்காணித்தாலே போதுமே’’ என அன்பான கோரிக்கை வைக்கவும் நெகிழ்ந்து ஓகே சொல்லிவிட்டார். வீட்டில் இருந்தபடியே கட்சி நிர்வாகிகளிடம் பேசுவது, உதவி கிடைக்காத ஆட்களின் புகார்களைப் பெற்று அந்தப் பகுதி நிர்வாகிகளை டோஸ் விடுவது, தினமும் வீடியோவில் எல்லா நிர்வாகிகளையும் சந்திப்பது என்று ஹைடெக் செயல்பாட்டுக்கு மாறிவிட்டார். ‘பேரக்குழந்தைகள்தான் எனக்கு ரிலாக்ஸ்’ எனும் அவரது வாக்கிங் ஸ்பாட் இப்போது மொட்டை மாடிதான். நல்லது தொடரட்டும்

‘நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா...’ பாடலைத்தான் நீண்டகாலமாகத் தனது செல்பேசியின் காலர் ட்யூனாக வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அதைப் பற்றிக் கேட்டதும் ‘`தில்லானா மோகனாம்பாள், எனக்குப் பிடித்த படம். அதிலும் இந்தப் பாடல் ரொம்பவே பிடிக்கும். அதுவுமில்லாமல், யாரிடம் நாம் பேச ஆரம்பித்தாலும் முதலில் அவரது நலம் பற்றித்தான் விசாரிப்போம். அதையே காலர் ட்யூனாக வைத்துவிட்டால், நலம் விசாரித்த மாதிரியும் ஆகிவிடுமே என்று வைத்துவிட்டேன்’’ என்று சுவாரசியப் பின்னணி பகிர்கிறார் காம்ரேட். நலமாயிருங்க தோழர்

பிரிட்டனின் மிக முக்கிய அறிவியலாளர் நீல் ஃபெர்குசன். இவரின் பரிந்துரையை ஏற்றுத்தான் பிரிட்டன் முழுக்க ஊரடங்கு நிலையை அறிவித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவ்வளவு முக்கியமான அரசு ஆலோசகர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அரசின் சமூக விலகல் கொள்கையை மதிக்காமல், இரண்டுமுறை தன் காதலியைத் தனது வீட்டிற்கு வரவழைத்து சந்தித்திருக்கிறார் நீல். அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அரசின் கட்டளையை மதியாமல் தான் செய்த தவற்றுக்காக வருந்தி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரும் மனுஷன்தான