சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்

ஸ்ருதிஹாசனைத் தமிழில் மறந்தே போய்விட்டார்கள் போல. ஆனால் ஸ்ருதி இப்போது மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ‘

மகிழ்ச்சியில் இருக்கிறார் கமல். தமிழகம் தாண்டி ஆந்திரா வரைக்கும் வசூல் அள்ளிக் குவிக்கிறது ‘விக்ரம்.’ சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்க இருக்கும் புராஜெக்ட்களை அவர் ஒழுங்குசெய்யப் போவதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஆரம்பித்து நிறுத்திவைத்த படங்களைத் தொடரப்போவதில்லை என முடிவு செய்துவிட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பில் சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவும் தீர்மானித்துவிட்டார். அப்போ கட்சி..?

இன்பாக்ஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்களில் அதிகம் இடம்பெறும் துப்பாக்கி, இரவு ஆகியவற்றுக்கும் அவரது பர்சனல் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது. சிறு வயதிலிருந்தே துப்பாக்கிமீது அவருக்கு அலாதி காதலாம். எங்காவது பொம்மைத் துப்பாக்கியைப் பார்த்துவிட்டால், வாங்கித் தந்தே ஆகவேண்டும் என அடம்பிடிப்பாராம். அதேபோல இரவு நேரங்களில் கண் விழித்து ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பாராம். லோகேஷ் படங்களில் பிரியாணி தவறாமல் இடம்பிடித்துவிடும். ஆனால், உண்மையில் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும்தான் அவருக்குப் பிடித்த உணவு. சப்பாத்தி - சிக்கன் யுனிவர்ஸ்!

வித்யா பாலன், நயன்தாரா, சமந்தா மூவரும் சேர்ந்து மலையாளத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. `பிங்க் போலீஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஷாஜி கைலாஸ் இயக்குகிறார் என்கிறார்கள். நடந்தால் நன்னாயிட்டு இருக்கும்!

இன்பாக்ஸ்

சோனாக்‌ஷி சின்ஹா சமீபகாலமாக படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இவர் சாஹீர் இக்பால் என்பவரைக் காதலிப்பதாகச் செய்திகள் வந்தன. முதல்முறையாக இருவரும் அதை உறுதி செய்துள்ளனர். சோனாக்‌ஷியின் பிறந்தநாளையொட்டி சாஹீர், இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘ஐ லவ் யூ’ என்று குறிப்பிட்டிருந்தார். சோனாக்‌ஷியும் ‘லவ் யூ’ என்று பதில் தந்தார். எப்போது திருமணம் என்றுதான் தெரியவில்லை. சீக்கிரம் சொல்லுங்க!

சிங்கப்பூரில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்த ஷாமிலி, இப்போது ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டிவருகிறார். அஜித்தின் மகள் அனோஷ்காவை டிராயிங் கிளாஸுக்கு அழைத்துக்கொண்டு போனதில்தான், அனோவைப் பார்த்து ஓவியங்கள் கற்க ஆரம்பித்திருக்கிறார். தான் வரைந்த ஓவியங்களை வெளிநாடுகளில் கண்காட்சியாக வைக்கவும் விரும்புகிறார் ஷாமிலி. சித்திரம் வரையுதடி!

தன் தாய்மொழியான கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி நடித்துவருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கதைத் தேர்வில் மிக கவனமாக இருக்கும் ஷ்ரத்தா, தனக்கு வரும் எல்லா வாய்ப்புகளுக்கும் ஓகே சொல்வதில்லை. ஹீரோவை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அதில் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதில் தெளிவாக இருக்கிறாராம். அப்படி தமிழில் ‘கலியுகம்’, ‘விட்னெஸ்’ மற்றும் ‘எலி’ இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கும் படம் என அடுக்கி வைத்திருக்கிறார். கன்னடத்தில் இவரின் மூன்று படங்கள் தயாராக இருக்கின்றன. நில்...கவனி...செல்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பல்லாண்டுகளாக நடந்து வந்தாலும், பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வகையில் அங்கு வசதியான கேலரிகள் இருந்ததில்லை. தற்காலிக கேலரிகள் எகிடுதகிடாக இருக்கும். இதற்கு முன் இருந்த அரசுகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்ட தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் முயற்சியில், சர்வதேசத் தரத்துடன் பிரமாண்ட கேலரியுடன் ஜல்லிக்கட்டு மைதானம் தற்போது அங்கு உருவாகிவருகிறது. அடுத்த ஆண்டு ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் அமர்ந்து காளைச்சண்டையைப் பார்ப்பதுபோல் அலங்காநல்லூரில் நம் மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்க்கலாம். பாயட்டும் காளைகள்!

இன்பாக்ஸ்

அடர் வனமும் பழங்குடிகளும் நிறைந்த கேரளாவின் வயநாட்டில் முதல்முறையாக பாரம்பரியப் பழங்குடி கிராமம் ஒன்றை 25 ஏக்கர் பரப்பளவில் தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறது கேரள அரசு. பூக்கோடு மலைச்சரிவில் 10 கோடி ரூபாய் செலவில் 10 ஆண்டுகளாக உழைத்து இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அம்மக்களின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கையுடன் இயைந்து வாழும் முறை போன்றவற்றை உணர்த்தும் இந்த கிராமத்தில் பாரம்பரியக் குடியிருப்புகள், வனச் சேகரிப்புப் பொருள்களின் விற்பனைக் கூடங்கள், பழங்குடியினர் சந்தை, பழங்குடியினர் உணவகம் என்று பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடிகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறது இந்தத் திட்டம்! செம்மைவனம்!.

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், திவ்யா. ராதாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சமீபத்தில் பணகுடி காவல் நிலையத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அங்கு மாறுதலாகி வந்ததும் அவருக்குக் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி உள்ளிட்ட சக காவலர்கள் அவருக்குக் கைகளில் புது வளையல்கள் அணிவித்து, குடும்பத்தினர் நடத்துவது போலவே சிறப்பாக வளைகாப்பு நடத்தி முடித்தனர். வாழ்த்துகள் திவ்யா!

‘இது நம்ம ஆளு’ உட்பட சில படங்களில் இசையமைப்பாளராகவும் அசத்தியவர் கே.பாக்யராஜ். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் அவர், மியூசிக் பிராக்டீஸையும் அவ்வப்போது எடுத்துவருகிறார். பல வருடங்களுக்கு முன் வாங்கிய கீ போர்டை பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார் பாக்யராஜ். சங்கீதம் பாட...

ஸ்ருதிஹாசனைத் தமிழில் மறந்தே போய்விட்டார்கள் போல. ஆனால் ஸ்ருதி இப்போது மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கிவரும் ‘சலார்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இருவரின் படங்களிலும் நடித்துவருகிறார். விகரம் 2-ல் நடிங்க!

இன்பாக்ஸ்

மோகன்லாலுடன் ‘12th man’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதி ரவி. கல்லூரி படிக்கும்போதே மாடலாக இருந்த அதிதி ரவி பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மம்மூட்டியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் அதிதி. அதில் மம்மூட்டி கேமராவைத் தூக்கிப்பிடித்து அதிதியுடன் செல்பி எடுப்பது போன்ற சில போட்டோக்களும் இருந்தன. மம்மூட்டி ரசிகர்கள் ‘எங்கள் மெகா ஸ்டாரை கேமராமேன் ஆக்கிவிட்டீர்களே’ எனச் செல்லமாக அதிதியிடம் கடிந்துகொண்டார்கள். ஸ்மைல் ப்ளீஸ்!