Published:Updated:

வலைபாயுதே...

ராஷி கண்ணா, சிவகார்த்திகேயன், அதிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷி கண்ணா, சிவகார்த்திகேயன், அதிதி

சென்னையில வீதிக்கு நாலு இட்லி மாவுக் கடை இருக்கு. யாருதான் வீட்ல மாவாட்டுறாங்க என்று தெரியல..!

twitter.com/senthilswamy6

நமக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கை ஒரு நாள் மாறும்!

# உனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைஞ்சிட்டா நான் எதுக்குடா? - கடவுள்

twitter.com/amuduarattai

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது: பிரதமர் மோடி.

# ஆமாமா... பழைய எல்லைகளைத்தான் சீனா ஆக்கிரமித்துவிட்டதே!

Aditi Shankar: மாவீரனுடன்..!
Aditi Shankar: மாவீரனுடன்..!

twitter.com/sasitwittz

சென்னையில வீதிக்கு நாலு இட்லி மாவுக் கடை இருக்கு. யாருதான் வீட்ல மாவாட்டுறாங்க என்று தெரியல..!

twitter.com/saravankavi

நான் சொல்வதைக் கேளுங்கள், இல்லையென்றால் என்னைச் சுட்டுவிடுங்கள் என்று ஜெயலலிதாவிடம் கூறினேன்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

# பதிலுக்கு ‘நல்லா காமெடி பண்ணுறே மேன்'னு சொல்லியிருப்பாங்களே?!

twitter.com/shivaas_twitz

ரெண்டு மூணு பேருக்கு அடுத்தடுத்து கால் பண்ணி யாரும் அட்டென்ட் பண்ணலேன்னா, நாம மட்டும்தான் வெட்டியா இருக்கோமோன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுது!

twitter.com/Lakshmivva1

சங்கிலியைக் கழற்றியபின்பும்

பாகனோடு பிணைந்து நடக்கிறது

காடு திரும்பாத யானை!

twitter.com/itz_radhi3

மனதில் பட்டதைப் பேசும்போது சில சமயம் பிரச்னை முடிவுக்கு வரும். சில சமயம் பிரச்னை ஆரம்பமாகும்!

twitter.com/ssuba_18

எப்போதும் சிரித்த முகம் உடையவர்களை மரணவீட்டில் சந்திப்பதென்பது பெரும் கொடுமை...

twitter.com/Anvar_officia

மொட்டை மாடில பறவைகளுக்குத் தண்ணீர் வைங்கன்னும், பெட்ரோல் டேங்கை ஃபுல்லா வச்சிக்காதீங்கன்னும் வாட்ஸ்அப்ல பார்வேர்டு மெசேஜ் வர ஆரம்பிச்சுட்டாலே வெயில் காலம் வந்திடுச்சின்னு அர்த்தம்!

twitter.com/Suyanalavaathi

‘‘சிவராத்திரிக்கு நைட் ஃபுல்லா தூங்காம முழிச்சு இருக்கணும்டா...''

‘‘நாங்க டெய்லி நைட் தூங்காம முழிச்சுட்டுதான் இருக்கோம்... போவியா அங்கிட்டு!''

twitter.com/Thaadikkaran

பெரியவங்களைப் பார்த்ததும் சட்டுனு எழுந்து மரியாதை கொடுக்குற மாதிரிதான், வண்டி ஓட்டிட்டுப் போகும்போது நாயைப் பார்த்ததும் சட்டுனு வண்டியை ஸ்லோ பண்ணுறதும்...

twitter.com/9thchoice

தவறான புரிதல், தாமதமான பதில்களிலிருந்து தொடங்குகிறது...

twitter.com/its_idhayavan

வெகு விரைவில் பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை: அமைச்சர் துரைமுருகன் உறுதி

# வெகு விரைவில்னா ஆட்சி முடிகின்ற சமயமா‌? அடிச்சுக்கூட கேட்பாங்க, அப்பவும் சொல்லிராதீங்க!

twitter.com/Greesedabba2

இந்தக் கொலைக்குத்தம் பண்ணுன போலீஸை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாத்தற மாதிரி, கோடி கோடியா கொள்ளை அடிச்ச அதிகாரிகளை வேற ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணுற மாதிரி, கே.எல்.ராகுல் கிட்ட இருந்து துணை கேப்டன் பதவியைப் பறிச்சு கொடூர தண்டனை தந்திருக்கு பி.சி.சி.ஐ.

twitter.com/LAKSHMSNAN_KL

அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர்: முதல்வர் ஸ்டாலின்

# சில அமைச்சர்கள்தான் அப்பப்போ தேரை இழுத்துத் தெருவுல விட்டுடறாங்க தலைவரே!

Raashii Khanna: அழகிய சிண்ட்ரெல்லா!
Raashii Khanna: அழகிய சிண்ட்ரெல்லா!

twitter.com/HannahDaniel127

நாம வர்றப்ப மட்டும் கரெக்டா ரெட் சிக்னல் போட்டுறான். சிக்னல் கிரீன் ஆகுறப்ப, நம்ம முன்னாடி நிக்குறவன் பைக் மட்டும் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... டிசைன் அப்படி!

twitter.com/ParamasivamRam7

பெரிய கோயிலில் பணக்காரர்களைச் சிறப்பு தரிசனம் மூலம் சீக்கிரமாக அனுப்பும் கடவுள், ஏழைகளை தர்ம தரிசனம் மூலமாக அதிக நேரம் பார்க்கிறார்.

twitter.com/Santhiyakr

என் பின்னாடி பேசுறவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, என் முன்னாடி பேச அவங்களுக்கு பயம். அந்த பயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

twitter.com/saranya121289

திங்கள்கிழமை சந்தோஷமா வேலைக்குப் போனா, ஒண்ணு கடை முதலாளியா இருக்கணும். இல்ல, சம்பள நாளாக இருக்கணும்...