கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

நடிகை சாவித்ரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ன்லைனில் ஷாப்பிங் செய்யப் பழகிய மக்கள், ஊர் சுற்றுவதற்கெல்லாம் அதிகமாகச் செலவு செய்ய முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடியே போக விரும்பிய ஊர்களுக்கு விண்டோ வாட்சிங் செய்துகொண்டிருக்கிறார்கள். டாப்ஸி பன்னுவின் அடுத்த படமான ‘ராஷ்மி ராக்கெட்’ ஷூட்டிங் நவம்பர் மாதம்தான் ஆரம்பிக்கவிருக்கிறது. இனியும் வீட்டுக்குள் அடைபட்டு இருக்க முடியாது என முடிவெடுத்த டாப்ஸி, சகோதரிகளுடன் மாலத்தீவில் லூட்டி அடித்துக்கொண்டிருக்கிறார். அட, டாப்ஸியா இது என்னும் அளவுக்கு இன்ஸ்டாவில் அவர் பதிவேற்றும் படங்கள் கலர்புல்லாக இருக்கின்றன. இதான் மாலத்தீீவா?

இன்பாக்ஸ்

ரண்டு அணிகளாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த சினிமா நடிகர் சங்கத்தின் வழியைப் பின்பற்றி இப்போது டிவி நடிகர் சங்கத்திலும் பஞ்சாயத்து. கடந்த தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிவர்மாவை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகத் துணைத்தலைவர் மனோபாலா உள்ளிட்ட சிலர் சொல்ல, ‘என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே உண்டு; தற்போதும் நான்தான் தலைவர்’ என்றார் ரவிவர்மா. இருதரப்பு முட்டலும் காவல் துறையை எட்ட, அவர்கள் பெரிய பூட்டு ஒன்றை வாங்கி ‘இருதரப்பும் பயன்படுத்தக் கூடாது’ என சங்க அலுவலகத்தைப் பூட்டி வைத்துவிட்டார்கள். விஷால் நிக்கலையா

‘மம்மி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். மூடிக்கிடந்த எகிப்திய மம்மிகளை ஒரு கும்பல் திறந்துவிட, வெளியில் வந்து அவை அதகளம்் செய்்யும்். இப்போது கொரோனாவால் உலகமே முடங்கியிருக்கிறது. இந்தச்்சூழலில் பல்வேறு நாட்டுத் தூதரக அதிகாரிகளைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, 2,500 ஆண்டுகளாகத் திறக்கப்படாத 59 மம்மிகளைத் திறந்து அழகு பார்த்திருக்கிறது எகிப்து அரசு. 2020-ன் துயரங்களே வரிசை கட்டி நிற்க, இப்படி மம்மி திறப்பு எல்லாம் தேவைதானா எனத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்்கிறார்கள் நெட்டிசன்ஸ். எல்லாத்துலயும் வெளாட்டு உனக்கு

50 வயதைக் கடந்தும் செம ஃபிட்டாக இருக்கும் ஹாலிவுட் பிரபலங்களில் சல்மா ஹெய்க்கும் ஒருவர். வெளிப்புற அழகுக்கு ஜிம், டயட் என இருந்தாலும், அக அழகுக்்கு அவர் நம்பும் விஷயம்தான் இந்திய பிரபலங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. செல்வம், அழகு, அன்பின் வடிவாக விளங்கும் தெய்வமான லட்சுமியை மனதில் நினைத்்து தியானம் செய்வதுதான், சல்மாவை நிம்மதியாக வைத்திருக்கிறதாம். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லட்சுமியின் படத்தைப் பகிர்ந்துகொண்ட சல்மா ஹெய்க், இந்த விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு நீங்கள் வர வேண்டும் எனப் பல இந்தியர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். வாருமைய்யா வாருமைய்யா

ட்ரம்ப் மட்டும்தான் வைரல் ஆக வேண்டுமா, நான் ஆகக்கூடாதா என்று கேட்பதுபோல், செம வைரல் ஆகியிருக்கிறார் அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவரான மைக் பென்ஸ். கமலா ஹாரிஸுடனான வாக்குவாதத்தின்போது, ஓர் ஈ பென்ஸின் தலையில் அமர்ந்துவிட்டது. ‘கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா’ எனக் காரசாரமாக பென்ஸ் பேசிக்கொண்டிருக்க, ஹாயாக அவர் தலையில் உட்கார்ந்துகொண்டிருந்தது அந்த ஈ. அது சமூக வலைதளங்களில் சட்டென வைரல் ஆனது. அந்த ஈயைப் பறக்க வைக்க 5$ கொடுத்து உதவுங்கள் என நக்கலடித்து கட்சிக்கான நிதியை ட்விட்டரில் திரட்டினார் அதிபர் தேர்தல் போட்டியாளரான ஜோ பைடன் . `நான் ஈ’யா இருக்குமோ?

பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு சமீபத்தில் பிரபல மொபைல் கேமான PUBG-யைத் தடைசெய்திருந்தது அரசு. இந்த கேம் விரைவில் இந்தியாவில் மீண்டும் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. PUBG தென்கொரியா தயாரிப்பு என்றாலும் அதை வெளியிட்டுவந்தது ‘டென்சென்ட் கேம்ஸ்’ என்ற சீன நிறுவனம்தான். இதுதான் தடைக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இப்போது அந்தப் பொறுப்புகளைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறதாம் பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல். முதலில் ஜியோவும் PUBG-யைத் தன்வசப்படுத்த விருப்பம் காட்டிப் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டதற்குப் பிறகு PUBG-யின் பதிவிறக்கங்கள் 26.7% குறைந்துள்ளதாம். வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

கொரோனா வேகத்திலேயே, சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது பீகார். அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என்று மூன்று கட்டங்களாக நடக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது. கொரோனாத் தொற்றாளர்கள் ஓட்டுப்போட கடைசி ஒரு மணி நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அடிதடிகள் சகஜம்தான். ஆனால், பீகாரில் இரண்டு கொலைகளே நடந்திருக்கின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான ராஜேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சக்தி மாலிக் என இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க பீதியில் இருக்கிறது பீஹார். ரத்த சரித்திரம்

லகம் முழுக்க சினிமாத்துறையை முற்றிலுமாக யோசிக்க வைத்திருக்கிறது கொரோனா. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்போது திரையரங்கில் வெளியாகுமோ, அந்நாளே பொங்கல், தீபாவளி எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தை ரிலீஸ் செய்தே தீருவேன் என நோலன் அடம்பிடித்து டெனட்டை ரிலீஸ் செய்தார். வசூல் ரீதியாகத் தப்பித்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் வெளியாகாததால், எதிர்பார்த்த லாபத்தை அப்படம் பெறவில்லை. 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய Dune திரைப்படம், அடுத்த அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. டேனியல் கிரெய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் என்பதால், `No time to Die’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. நவம்பரில் வெளியாகும் என டிரெய்லர் வெளியானாலும், தற்போது அடுத்த ஏப்ரலுக்கு ரிலீஸைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதுவும் கொரோனா மனது வைத்தால்தான். No Time To Release

வுன் பஸ்ஸைப் போல, பெரு நகரங்களுக்கிடையேயான விமானப் போக்குவரத்து அதிகரித்ததும், அதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனாச் சூழலில் பயண நேரம், பாதுகாப்பு என ரயிலைவிடவும் விமானம் சிறப்பு என்பதால், கூடுதல் செலவு என்றாலும் அதையே விரும்புகிறார்கள் மக்கள். டெல்லியிலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பயணத்திலேயே ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 30,000 அடி உயரத்தில், சில நிமிடங்களில் அங்கு ஹாஸ்பிட்டல் செட்டப் உருவாக்கி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இப்போது அந்தக் குழந்தைக்கு வாழ்நாளுக்கான இலவச பாஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது இண்டிகோ ஏர்லைன்ஸ். இதற்கு முன்னர் EgyptAir விமானத்தில் எகிப்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் தறுவாயில் ஒருவருக்கு நடுவானிலேயே குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கும் இலவச பாஸ் கொடுக்கப்பட்டது. இரண்டு தருணங்களிலும் விமானத்தில் பயணிகளாக மருத்துவர்கள் இருந்ததுதான் அபூர்வமான ஒற்றுமை. ஏர் பேபி

இன்பாக்ஸ்

டிகை சாவித்ரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர். தீபிகாவுக்கு இது முதல் தெலுங்குப் படமாம். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது இந்தப் படம். ரண்டி ரண்டி