
இன்ஷுரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டல் வழி ஒப்புதல் வழங்கும் வசதியை 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது!
கொரோனா பாதிப்பு காரணமாக காப்பீட்டு எடுப்பவர்களை நேரில் சந்தித்து பாலிசி பற்றி விளக்க முடியாமலும், பாலிசிப் பத்திரங்களில் பாலிசி எடுப்பவர்களிடமிருந்து கையொப்பம் வாங்குவதும் கடினமான காரியமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், டிஜிட்டல் வழி பாலிசி ஒப்புதலுக்கு, இந்திய ஆயுள் காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதித்தது. இது, காப்பீட்டு பாலிசிகளுக்கு 2020 டிசம்பர் 31 என இருந்ததை 2021 மார்ச் வரைக்கும் நீட்டிக்க ஐ.ஆர்.டி.ஏ.ஐ நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள், ஏஜென்ட்டுகள், பாலிசி எடுப்பவர்கள் என முத்தரப்பினருக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகளான டேர்ம் பிளான், முழு ஆயுள் காப்பீடு பாலிசிகள், மணி பேக் பாலிசிகள், எண்டோமென்ட் பாலிசிகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசிகளுக்கு இது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் எஸ்.எம்.எஸ், இ-மெயில் மூலம் பாலிசி எடுப்பவர் உறுதி அளித்தால், ஆன்லைன் மூலமே பாலிசி எடுக்க முடியும். ஆனால், யூலிப் பாலிசிகளில் ஆண்டுக்கு ரூ.50,000-க்கு மேல் பிரீமியம், ஒற்றை பிரீமியம் ரூ.1 லட்சத்தை தாண்டினால், இப்படி டிஜிட்டல் வழியில் பாலிசி எடுக்க முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்க நினைப்பவர்கள் இதைக் கவனிக்கலாமே!