
கனடாவின் நாணயங்களில் நீரெலிகள் இடம்பெற்றுள்ளன.
● நீரெலி (Beaver) என்பது கொரிக்கும் உயிரின வகையில் அரை-நீர்வாழ் (semi-aquatic) உயிரினமாகும். நீரிலும் நிலத்திலுமாக வாழும் இவை, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையும் வசிப்பிடமாகக்கொண்டவை.
● பனி ஊழிக்காலம் எனச் சொல்லப்படுகிற காலத்திலிருந்தே இவை உள்ளன. ஐஸ் ஏஜ் திரைப்படங்களில் வந்து அட்டகாசம் செய்யுமே, அந்தச் சுட்டி விலங்கு இதுதான்.

● Castoroides எனப்படும் மிகப்பெரிய நீரெலி (Giant beaver) அந்தக் காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவை 200 கிலோ எடை வரைக்கும் இருந்தன. வால் மட்டுமே 7 அடி நீளம் இருக்கும். இப்போது, சுமார் 30 கிலோ வரை எடையுள்ள நீரெலிகள் உள்ளன.
● நீரெலிகளின் பற்கள் 15 சென்டிமீட்டர் நீளம் வளரும்.
● மருந்துகள் தயாரிக்கவும், வாசனை திரவியங்களுக்காகவும் நீரெலிகள் வேட்டையாடப்படுகின்றன.

● நீரெலிகளின் வால், தட்டையாக இருக்கும். அதன் வடிவத்தின் அடிப்படையில் என்கிற ‘Beaver tail’ தின்பண்டமும் விற்கப்படுகிறது.
● கனடாவின் நாணயங்களில் நீரெலிகள் இடம்பெற்றுள்ளன.