
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்குத் தான் கல்வி ஓர் ஆயுதம். சாதியவாதிகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் கல்வி, மக்கட் பண்பைக்கூட கற்பிப்பதில்லை.
பிரபாகரன் சேரவஞ்சி
`நீங்க என்ன ஆளுங்க?' என்று கேட்கிற மனிதர்கள் மத்தியில் வாழ்கிற ஒரு சாதாரண வாழ்க்கையை பிள்ளைகளுக்குத் தந்துவிடக் கூடாது.
க்ருஷ்ண லக்ஷ்மி
யாரும் இல்லாமல் ஒருத்தரை தேடறதுவிட...
எல்லாரும் இருக்கும்போது யார் ஒருவரை தேடறீங்களோ...
அவரை தொலைத்து விடாதீர்கள்!

மினிமலிசம்
பாம்புக்கறி திங்கற ஊர்ல நடுத்துண்டு நமக்குனு இருந்தா எந்த ஊர்லயும் பிரச்னை இல்லை.
அமெரிக்காவில் வந்து இந்தியாவில் கிடைக் கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதும், இந்தியாவில் அமெரிக்காவில் கிடைக்கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதும்தான் பிரச்னை.
இங்கே ஆட்டுக்கறி கிலோ $22 பக்கம் வரும். அதுவே பீஃப், போர்க்னா கிலோ அஞ்சு டாலர் தான் (கட்ஸை பொறுத்து).
இங்கே மாம்பழம் விலை அதிகம். அங்கே ஸ்ட்ராபெர்ரி விலை அதிகம்.
அந்தந்த ஊர்ல லோக்கலா கிடைக்கும் பொருட்களையும், காய்கறியையும் வாங்கி சமைத்து சாப்பிட்டால் உணவுக்கான செலவுகள் பெருமளவில் குறைந்துவிடும்.
அமெரிக்காவில் மினி இந்தியாவை உருவாக்கு வதும், இந்தியாவில் மினி அமெரிக்காவையும் உருவாக்குவதும்தான் பிரச்னை. இந்தியாவில் இந்தியனாவும், அமெரிக்காவில் அமெரிக்கனாவும் இருந்தா எந்த ஊரிலும் செலவுகள் கூடாது.

Sukirtha Rani
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அரு கிலுள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் பிஞ்சுக் குழந்தைகளிடம் காட்டப்பட்ட தீண்டாமை வன் கொடுமை என்னை கடும் சோர்விலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சாதி ஒழிப்புக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காக வும் எத்தனை தலைவர்கள், எத்தனை இயக் கங்கள், எத்தனை முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து நூற்றாண்டு காலமாக பேசியும், எழுதியும், போராடியும் வருகின்றன. எத்தனை தனிமனிதர்கள் எழுதியும் செயல்பட்டும் வரு கிறார்கள். ஆனால் இந்தியச் சமூகத்தில் சாதியக் கட்டுமானம் இன்னும் இன்னும் இறுகிக்கொண்டே வருகிறது.
பள்ளியில், பணியிடத்தில், நடக்கையில், போகையில், பேருந்தில், கடைகளில், பாதை களில், சுடுகாட்டில் என அத்தனை இடங்களிலும் இந்த சாதிக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது.
எத்தனை கொலைகள், எத்தனை ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள், தீண்டாமைக் கொடுமைகள், அவமானங்கள்... அத்தனையையும் கண்ணீரோடு கடந்து துக்கத்தை மென்று விழுங்கி உள்ளத்தில் நெருப்பு கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
’நாங்களும் மனிதர்கள்தானே..?’ என்று சமூகத்தை நோக்கிக் கேட்பது சமூகத்திற்கு எவ்வளவு அவலமானது? தனது அங்கத்தினர் களின் ஒரு பகுதியை இவ்வாறு கேட்க வைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளும் சமூகம் எத்தனை நோய்க்கூறு உடையது? பிறப்புதான் சாதியைத் தீர்மானிக்கிறதா? அல்லது சாதி பிறப்பைத் தீர்மானிக்கிறதா? சமத்துவம் என்பது தொலைதூர நட்சத்திரமா?
நான் பிறக்கிறேன், கற்கிறேன், வேலை செய்கிறேன், வாழ்கிறேன், இறக்கிறேன். இதில் சாதி எங்கு வருகிறது?
ஊர்த்தெருக்களில், பள்ளிகளில், கல்லூரி களில், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களே சாதியவாதிகளாக இருக்கிறார்கள் எனில் கல்வி அவர்களுக்கு எதைக் கற்றுத் தருகிறது அல்லது மானுட நேசிப்பை, அன்பை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தைக் கற்றுத்தராத கல்வியின் பெயர் கல்வியா?
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்குத் தான் கல்வி ஓர் ஆயுதம். சாதியவாதிகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் கல்வி, மக்கட் பண்பைக்கூட கற்பிப்பதில்லை.
’கட்டுப்பாடா? எதுக்குக் கட்டுப்பாடு?’ என்று பாஞ்சான்குளம் குழந்தைகள் கேட்டது போலவே, நாற்பதாண்டுகள் முன்னரே கடையில், ‘மிட்டாயை ஏன் தூக்கிப் போட றீங்க?’ என்று நான் கேட்டிருக்கிறேன். கண்ணீரோடுதான் இதைக் குறிப்பிடு கிறேன்.
அந்த ரணம் இன்னும் ஆறவில்லை. அன்று தூக்கிப் போட்ட மிட்டாயைக்கூட இன்று 'கொடுக்க முடியாது’ என்று விரட்டும் அளவுக்கு சாதி பலமாக வேரூன்றி இருக்கிறது என்றால் எங்கு பிழை நடந் திருக்கிறது? யாரிடம் பிழை இருக்கிறது? எப்படி நேர் செய்யப் போகிறோம்?

Elambarithi Kalyanakumar
ஏதேனும் நிறைவேற வாய்ப்பே இல்லாத விருப்பமொன்றை வெளிப்படுத்திவிடும் போது அது பாதி நிறைவேறிவிடுகிறது.
ஜா.வி
எல்லா குற்றத்துக்கும்
நாம் மூன்று
தீர்ப்புகள் வைத்திருப்போம்...
எதிரிகளுக்கு ஒன்று
நமக்குப் பிடித்தவர்களுக்கு ஒன்று
நமக்கு ஒன்று!
தென்புலத்தான்
இறந்ததை மட்டும் உண்ணும் பிணம்தின்னிக் கழுகு களுக்குதான் எத்தனை இரக்கம்...!
Dr. Nagajothi
சக மனிதனை சாதியை சொல்லி ஒடுக்குறப்போ புண்படாத மனசு, மதப்பற்றாளர்கள் எழுதின சாமி கதையை எடுத்துச் சொல்லும்போது புண் படுதுன்னா, அந்த மனசு புண்படட்டும் தப்பில்ல.


Radhika
நாம சொல்றது தான் எப்பவும் சரின்னு நெனச்சிட்டு இருந்தா வாழ்க்கைல புதுசா எதையும் கத்துக்க முடியாது!.
ச ப் பா ணி
காரணமே இல்லாமல் சும்மா கூப்பிட்டேன்னு போன் போட்டு பேசுறவங்கதான் Close Friends
யாத்திரி
நம் நலன்வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், நீ நிம்மதியாயிரு என்று சொல்லும் செய்திதான் எல்லாம்.