ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

திருமண உறவுகளில் பிரச்னை என யாராவது சொன்னால், ஆலோசனை என்ற பெயரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் அமைதி காப்பதே மூன்றாம் நபர்களாக நாம் செய்யும் உதவி.

Magudeswaran Govindarajan

நீங்கள் எவ்வூரைச் சேர்ந்தவர் என்றாலும் சரி, உங்கள் ஊர்ப் பேருந்து நிலையத்தில் அல்லது நிறுத்தத்தில் எப்போதாவது ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பீர்கள்!

மு.வி.நந்தினி

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவனை மகன் உதவியுடன் 22 துண்டுகளாக வெட்டிக்கொன்ற மனைவி - செய்தி.

ஒரு பொறுக்கி கணவனிடமிருந்து விலகி அந்தப் பெண், மகனுடன் புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம். மிக எளிய தீர்வு இது. ஆனால் கொலை செய்வதுவரை தூண்டியது எது? நிச்சயம் இந்த சமூகம்தான். மணமுறிவை இயல்பாக பார்க்காதவரை இத்தகைய கொடூர ங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபலமான முற்போக்காளர் ஒருவர், ஒரு முற்போக்கு இணை குறித்து பேசும்போது அவருடையது ‘failed marriage’ என்றார். உதட்டை பிதுக்கி அவர் சொன்ன தொனி எனக்கு வியப்பைக் கொடுத்தது.

திருமணத்தில் என்ன வெற்றி, தோல்வி? நான்கு சுவருக்குள் அந்தக் குறிப்பிட்ட இருவருக்குள் என்ன நடக்கிறது என்பது நமக் குத் தெரியுமா? நிச்சயம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம்.

காந்தமும் இசையும்
காந்தமும் இசையும்

அவர்களுடைய முடிவை குழந்தை, அந்தஸ்து, சமூகம் என்ன சொல்லும், குடும்பம் சிதறிவிடுமே என்கிற காரணங்களைச் சொல்லி, உச்சுக்கொட்டி, தொடர்புடையவர் களை மன அழுத்தத்துடன் சமூகம் அலைய வைக்கிறது. நானும் இந்த மாதிரி ஆலோசனை சொல்லி, மூல காரணங்கள் தெரிந்தபோது வெட்கித் தலைகுனிந்திருக்கிறேன்.

திருமண உறவுகளில் பிரச்னை என யாராவது சொன்னால், ஆலோசனை என்ற பெயரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் அமைதி காப்பதே மூன்றாம் நபர்களாக நாம் செய்யும் உதவி. எல்லோரும் வெளிப்படையாக தங்களுக்குள் என்ன நேர்ந்தது எனச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் வேடிக்கை பார்க்கும் நாம் வாயை மூடிக் கொண்டிருக்கலாம். அவர்களுடைய முடிவை அங்கீகரிக்கலாம்.

இறுதியாக, குழந்தைக்காக எனச் சொல்லி சொல்லியே இந்த சமூகம், இணைந்து வாழ வழியற்ற இருவரை நரகத்துக்குள் இருக்க வைத்து கொடூரங்கள் தொடரும்படி பார்த்துக்கொள்ளும். என் மணவாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு, சரிசெய்ய முடியாத நிலையில் வெளியேறியபோது, எனக்கு உற்ற துணையாக இருந்தது என் மகன்தான். அவன் எப்போதும் என் முடிவு குறித்து வருத்தமோ, கவலையோ கொள்ளவில்லை. மணமுறிவான பல குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பிரிவுக்கான காரணத்தை புரிந்துகொண்டவர்களாகவே வளர்கிறார்கள். அதனால் சுற்றி இருக்கும் சமூகம் உச்சுக் கொட்டுவதை நிறுத்துவது நலம். எல்லோருக் கும் வாழ்வதற்வதற்கான உரிமை உள்ளது. ஒரு கனவு நடுத்தர குடும்ப வாழ்க்கையை நீங்கள் வாழலாம். எல்லோருக்கும் இது அமையாதே.

மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும்
மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும்

பா.திருச்செந்தாழை

கைவிரல் ஒன்றில் மட்டும் காதலின் பொழுதில் மருதாணி இட்டு அனுப்பி யிருக்கிறாள்.

முரட்டுமனிதன் தனது கண்டிப்பான பணிப்பொழுதில், அதை மறைக்கமுடியாமல் தவித்தபடி விரல் நீட்டிப் பேசிக் கொண்டிருக் கிறான்.

திட்டுவாங்குபவர் மென்மையாகப் புன்னகைத்துக் கொள்கிறார்.

Isai Karukkal

அநாதைத்தனத்தின் உறக்க முறை...

பேருந்து நிலையங்களில்

பூட்டிய கடைகளின் முன்

கோவில் வாசல்களில்

இப்படி

எங்கேனும் படுத்து

தூங்க முயல்கிறார்கள் அநாதைகள்.

எல்லோரும் இருந்தும்

யாரும் இல்லாதிருக்கும் அநாதைகள்.

பாதுகாப்பான கூரைகளின் கீழ்

உறங்க முயல்கிறார்கள்.

அநாதைகளுக்கென்றே

உறங்கும் முறை ஒன்றுள்ளது

அது...

ஒரு கையைத் தலைக்கும்

இன்னொன்றை தொடை இடுக்கிலும்

செருகிக்கொள்வது

அப்படிச் செய்கையில்

கொஞ்சம் இதம் உருவாகிறது

அந்த இதம் இருக்கும் வரை

அப்படியொன்றும்

அவர்கள் முழு அநாதைகள் இல்லை.

சுபலெஷ்மி D/O கௌதமி
சுபலெஷ்மி D/O கௌதமி

Primya Crosswin

விரையும் மரங்கள் போல்

நகரும் மனிதர்களை

சூழலின் பின்னின்று

வெறிப்பது தவிர

வேறொன்றும் செய்யவியலா

ரயில் பயணம்

இவ்வாழ்வு!

NameisSoni

எல்லா language படமும் Subtitle-லோட பாத்து பாத்து .. இப்ப தமிழ் படத்த கூட Subtitle இல்லாம பாக்க முடிலன்னா பாத்துக்கோங்களேன்.

ikrthik

ஏன் அழைத்தாய்? என்ற கேள்வியைக்

நீ கேட்காத வரை

ஏன் அழைத்தேன்! என்றொரு பதிலை

நான் சொல்லாதவரை

நமக்கிடையில் இருக்கப்போவது

அழகான காலம்.

Suyanalavaathi

வீரம்னா என்னனு தெரியுமா.. ?

பனிக்காலத்துல பச்சைத்தண்ணியில குளிக்கும்போது, முதல் ரெண்டு சொம்பு தண்ணி உடம்புல படும்போது, குளிராத மாதிரி நடிக்கிறது.

sailaks11

ஒரு யானை சராசரியாக 60-70 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டவை. இன்று புதுச்சேரியின் மனக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி வெறும் 32 வயதில் இறந்திருக்கிறது. கோவில் யானைகளின் ஆயுட்காலம் காடுகளில் வாழும் யானைகளின் ஆயுட்காலத்தை விட குறைவாகவே இருக் கிறது.

நாங்க மூணு பேரு!
நாங்க மூணு பேரு!

தமிழ்செல்வி தி

உறவுகளில்/நட்புகளில் போலித்தனத்தை நாம் உணரும் போது உறவுகள் முறிவதில்லை. உணர்ந்ததை நம்மால் மறைக்க முடியாத கட்டத்தில் தான் உறவுகள் முறிகின்றன.

karthik

எதுவும் நிரந்தரமில்லை

என்றொரு நிலையை எட்டாதே

அது உண்மையாகவே இருப்பினும்,

எதையேனும் நிரந்தரமென பற்றிக்கொள்

நம்பு

ஏமாறு

மீண்டும் நம்பு

இல்லேல் இவ்வையம் உனக்கு சூன்யம்.